Saturday, December 17, 2011
+1 தேர்வில் நபிகள் பெயர் பிழையாக அச்சடிப்பு !மாணவர்கள் ஆவேசம் !
பைரோஸ் கான்
ராமநாதபுரம் மாவட்டத்தில் பிளஸ் 1 அரையாண்டு தேர்வு தமிழ் முதல் வினாத்தாளில் நபிகள் என்பதற்கு பதிலாக நரிகள் என இருந்ததால், பெரியபட்டினத்தில் முஸ்லிம் அமைப்பு மற்றும் பழைய மாணவர்கள் சங்கத்தினர் பள்ளியை முற்றுகையிட்டனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று முன் தினம் பிளஸ் 1 மாணவர்களுக்கான தமிழ் முதல் தாள் தேர்வு நடந்தது. இதில் 18வது கேள்வியில் "அபூபக்கருடைய அன்பின் ஆற்றலும், நரிகள் நஞ்சு தீர்த்து அருளியதும்' என்ற கேள்வி இடம் பெற்றது. இதில் நபிகள் என்பதற்கு பதிலாக நரிகள் என பிழையாக இருந்ததால் மாணவர்கள் அதிர்ச்சிக்கும் ஆவேசத்துக்குள்ளாகினர்.
பெரியபட்டினம் பி.எப்.ஐ., நகர் தலைவர் முகம்மது சலீம், மாவட்ட செயலாளர் அசன் அலி, எஸ்.டி.பி.ஐ.,தொகுதி தலைவர் பைரோஸ் கான் மற்றும் ஏராளமானோர் அரசு மேல்நிலைப் பள்ளியை முற்றுகையிட்டனர்.
அங்கு தலைமை ஆசிரியர் இல்லாததால் தமிழாசிரியர் முருகனிடம் நடவடிக்கை கோரி மனு அளித்தனர்.
எஸ்.டி.பி.ஐ., தொகுதி செயலாளர் பைரோஸ் கான் கூறியதாவது:முஸ்லிம்களின் உணர்வுகளை புண்படுத்தும் விதமாகவும், வரலாற்று சம்பவங்களை திரித்துக் கூறும் விதமாகவும் கேள்வி அமைந்துள்ளது. துறை ரீதியாக சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.
முதன்மை கல்வி அலுவலர் செல்லம் கூறியதாவது: அச்சுப்பிழையால் இந்த தவறு நேர்ந்தது. ஒவ்வொரு பள்ளி தலைமை ஆசிரியர்களிடம் கூறி தவறை சரி செய்ய கூறியிருந்தோம். இதை மீறியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.
Subscribe to:
Post Comments (Atom)
இதற்கெல்லாம் முஸ்லிம் அசிரியர்கள் இல்லாததற்கு சாட்சி !!!!
ReplyDeleteஅரசு துறையில் என்று கால் பதிகிரோமோ அன்று தான் இது போன்ற எத்தனையோ சமுக பிரச்சனைக்கு தீர்வு !!!!
விளிக்கும நம் சமுதாயம் !!!
அல்லது மிண்டும் உறங்குமா என்று பார்போம் !!!!
எது எதற்கோ உங்கள் கண்டனத்தையும் , கருத்தையும் பதிவு செய்யும் மக்களே !!!
ReplyDeleteஇதற்கு மட்டும் எங்கே போனீர்கள் ?????
வேலங்கதே மக்கள் !!! எம் ஊர்மக்கள் !!!