Saturday, December 10, 2011

அற்புதம்... !கீழக்கரையில் மலேசியாவின் சராவ‌க் மாநில முதல்வர் வியப்பு !

கீழக்கரைக்கு மலேசியாவில் உள்ள சரவாக் மாநில முதல்வர் அப்துல் தையூப் முகம்மது வருகை தந்தார். அவருக்கு நகராட்சி தலைவர் ராபியத்துல் காதரியா தலைமையில் துணை தலைவர் ஹாஜா முகைதீன் மற்றும் கவுன்சிலர்கள் ,பொதுமக்கள் உள்ளிட்டோர் வரவேற்றனர். அவருடன் அவரது மனைவி ரசாத் தையூப்,இஸ்லாம் இயக்க வளர்ச்சி துறை அமைச்சர் அலிஹசன் மற்றும் அவரது மனைவி ,வளர்ச்சித்துறை இணை அமைச்சர் தாவூது அப்துல் ரஹ்மான் அவரது மனைவி ஆகியோர் வந்துருந்தனர்.பின்னர் நடுத்தெரு ஜும்மா பள்ளி சென்று தனது குழுவினருடன் பார்வையிட்டார் பின்னர் அங்கு நடைபெற்ற தொழுகையில் கலந்து கொண்டார்.

சராவ‌க் முதல்வர் நிருபர்களிடம் கூறுகையில் , அரசு பணி நிமித்தமாக கேரளாவிற்கு வந்திருந்தோம்.கீழக்கரையை பற்றி நிறைய கேள்விபட்டுள்ளேன்.நேரில் சென்று காண வேண்டும் என்ற நோக்கத்தில் கீழக்கரை வந்துள்ளேன். தமிழர்களின் வரவேற்பு,கலாச்சாரம் மற்றும் கீழக்கரை நடுத்தெரு ஜீம்மா பள்ளியின் அழகு தொழில் நுட்ப கட்டுமானம்,அற்புதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இது போன்றவை எங்களை வியப்படைய வைக்கிறது இப்பகுதி மக்களின் வரவேற்பிற்க்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன் என்றார்.

சரவாக் மாநில முதல்வர் அப்துல் தையூப் முகம்மது தனது குழுவினருடன் ஏர்வாடி தர்ஹா சென்று வந்தார்.
சில மாதங்களுக்கு முன் கீழக்கரை வருகை புரிந்த ஜப்பானிய குழுவினர் நடுத்தெரு ஜீம்மா பள்ளி மற்றும் பழைய குத்பா பள்ளி ஆகியவற்றை பார்வையிட்டு அழகாக வடிவமைக்கப்பட்டுள்ள கட்டிட கலையை பாராட்டி சென்றனர் என்பது குறிப்பிடதக்கது

11 comments:

 1. kodomae da ennathe solla

  ReplyDelete
 2. "அற்புதம்... !கீழக்கரையில் மலேசியாவின் சராவ‌க் மாநில முதல்வர் வியப்பு"
  ஒரு மாலைக்குள் இரு தலைகள் ((ஆண் தலையும் / பெண் தலையும்), நம்ம ஊர் கலாச்சாரத்துக்கு இதுலாம் தேவைதானா? வந்த விருந்தாளிகளும் முஸ்லிம், விருந்தோம்பிய நாமும் ஒரு முஸ்லிம். இஸ்லாத்துல இதுக்குலாம் அனுமதி இருக்கா? இஸ்லாமியர்கள் நிறைந்த இந்த ஊருலயும் இப்படி அனாச்சாரம் செய்கிறார்களே என்று வந்த அந்த முதல்வர் வியப்புற்றதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. அன்புடன் உங்கள் MJS (Emmu), Riyadh.

  ReplyDelete
 3. ஜகுபர்.December 11, 2011 at 2:55 PM

  இதுல என்னத்தப்பா பெருமை இருக்கு. அந்த பென்மனி ஒரு முஸ்லிமா இருந்தும் கூட ஒரு கவர்ச்சியான உடை அனிந்து ஒரு புர்க்கா கூட இல்லாமல் அல்லாஹ்வின் பள்ளிக்குள் அனுமதித்தது கீழக்கரை மக்களுக்கு அவமானச் சின்னமே தவிர வேரு பெருமைக்கும் ஒன்றும் இல்லை.

  ReplyDelete
 4. மங்காத்தவின் தங்கச்சி மகன்December 11, 2011 at 6:45 PM

  பொதுவாக இந்தோனிஷியா. மலேசியா இஸ்லாமிய ஆண் பெண் பெருமக்கள் இஸ்லாமிய கோட்பாடுகளை நெறிமுறைகளை பின்பற்றுவதில் வல்லவர்கள் என்றுதான் மனதில் கொண்டுள்ளோம்.

  இங்கு அந்த எண்ணம் சுக்கு நூறாக உடைத்தெறிய பட்டு விட்டது. யா அல்லா நீயே எங்களை பாதுகாத்து ரட்சிப்பாயாக.

  அழைத்து வந்தவர்கள் நாசூக்காக அவர்களுக்கு உணர்த்தி இருக்கலாம். இப்படி ஊர் வாயில் மாட்ட வேண்டிய அவசியமில்லை.

  இந்த தளத்தில் கருத்துக்களை பதிவு செய்தவர்கள் மிகச் சிலரே. ஆனால் ஊர் வாய்க்கு அவலாகி விட்டது என்பதுதான் சத்தியமான உண்மை

  ReplyDelete
 5. மங்காத்தவின் தங்கச்சி மகன்December 11, 2011 at 7:18 PM

  குறைந்த படசம் தலையையாவது க்ருப்பு துப்பட்டாவால் ம்றைத்து கண்ணியம் காத்திருக்கலாம்.அது சரி நடுத்தெரு ஜும்மா இறை இல்லத்தில் அழகி போட்டி நடப்பதாக ஏதாவது அறிவிப்பு இருந்ததா?

  பொதுவாக நடுத்தெரு ஜும்மா இறை இல்லத்தில் வீடியோ எடுக்க அனுமதிப்பதில்லை,அவர்கள் ஜமாத்தை சார்ந்த ( எவ்வளவு பெரிய முக்கியஸ்தர் வீட்டு ) நிக்காஹ் வைபவத்தில் கூட.

  இது எப்படி நடந்தது? யாருக்காக இந்த வரைமுறை மீறப்பட்டது? பேஸ் புக்கில் இறை இல்லத்தின் உட்புரம் எடுக்கப்பட்ட நிறைய நிழற்பட காட்சிகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

  மேலும் தோற்றத்தில் கண்ணியம் காத்த நகரின் முதல் குடி மகளுக்கு (நகராட்சி தலைவி)எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

  சம்பந்தப்பட்டவர்கள் திருந்திக் கொள்ள இஸ்லாத்தின் பெயரால் மன்றாடுகிறோம்.

  ReplyDelete
 6. அஸ்ஸலாமு அலைக்கும் ...

  கீலகரை டைம்ஸ் குழுமத்திற்கும் ஊரிலுள்ள முக்கியதஸ்ர்க்கும் ஓர் வேண்டுக்கோள் ..!

  நம் இஸ்லாமிய மார்க்கத்தில் சில விசயங்கள் தடை செய்ய பட்டவை, அதில் ஒன்று அந்நிய ஆண்களை நேராக பெண் பார்க்க அனுமதி இல்லை,அதுவும் ஆணும் பெண்ணும் ஒன்றாக நின்ற புகைப்படம் ஒரு சினிமாவில் உள்ளது போல் ஒரு காட்ச்சி இது நம் சமுதாயத்துக்கு தேவைதானா ?

  அவர்கள் எந்த மாநிலத்துக்கு வேண்டும்மானாலும் முதல்வராக இருக்கலாம் ஆனால் இதுபோன்று அல்லாஹுவின் பள்ளிக்கு வருபவரை மாலை போட்டுதான் கணியம் படுத்த வேண்டுமா ...?

  இது போன்று சமபவங்க்களை பார்க்கும் பொது ஒரு அந்நிய கலாச்சாரத்தை நம் அனைவரும் பின் பட்டுகிரமாதிரி தோற்றம் தேவைதானா ...?

  ReplyDelete
 7. பெருமையோ பெருமை கூத்தோ கூத்து கும்மாலமோ கும்மாலம் ஆஹா இதல்லவா பெருமை கீழக்கரைக்கு. இந்த பீத்த பெருமைக்கு தானே கீழக்கரை தவம் கிடந்தது. அல்லாஹ்வின் ஆலயத்திற்குள் இப்படி ஒரு அநாகரீக தோற்றத்துடன் அன்னிய நாட்டுப் பெண் அனுமதி. இந்தியாவில் நடக்காத கொடுமை கீழக்கரை நடுத்தெரு பள்ளியில் அரங்கேரியது.

  ReplyDelete
 8. சதக்கத்துல்லாDecember 12, 2011 at 5:31 PM

  ஒரு காலத்தில் சின்மா சூட்டிங் கூட தடை விதித்த பழைய கீழக்கரை எங்கே இப்போது நடிகை போல் உடை அனிந்த பென்மனியை பாரம்பரியம் மிக்க தலைமை ஜும்மா பள்ளியில் அனுமதித்த இன்றைய கீழக்கரை எங்கே? ஏன் இப்படி அநியாயம் செய்ரீங்க.

  ReplyDelete
 9. சம்பந்தப்பட்டவர்கள் திருந்துவதற்காக இஸ்லாத்தின் பெயரால் மன்றாடுபவரின் பெயர் மங்காத்தாவின் தங்கச்சி மகன் என்ன கொடுமை சார் இது

  ReplyDelete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.