Monday, December 12, 2011

கைராத்துல் ஜலாலியா பள்ளி அருகே சுகாதார கேடு !பொதுமக்கள் கோரிக்கை !




கிழக்குதெரு மற்றும் வடக்குத்தெரு பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் குப்பைகளை அகற்றும்படி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


கிழக்கு தெரு கைராத்துல் ஜலாலியா தொடக்கப்பள்ளியின் சுவரை ஓட்டி ஏராளமான குப்பைகள் குவிந்து துர்நாற்றம் வீசுகிறது.ஏராளமான மாடுகளும் அப்பகுதியில் சுற்றி திரிகின்றன.இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு அவ்வழியாக பள்ளிக்கு செல்லும் குழந்தைகளுக்கு மலேரியா போன்ற தொற்று நோய்கள் அடிக்கடி உண்டாவதாக இப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.மேல்நிலைப்பள்ளி அருகேயும் இதே போல் குப்பைகள் குவிந்துள்ளது

இது குறித்து அப்பகுதியை சேர்ந்த ஹசீனா என்பவர் கூறுகையில் ,இந்த குப்பைகளை அகற்றி நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று 200க்கு அதிகமான பெற்றோர்கள் கையெழுத்திட்டு நகராட்சியில் புகார் மனு கொடுத்துள்ளோம் ஆனால் இது வரை எந்த நடவடிக்கையும் இல்லை இனியாவது நகராட்சி நிர்வகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து குழந்தைகள் நலனை காக்க வேண்டும் என்றார்

அப்பகுதியை சேர்ந்த ராசீக்தீன் என்பவர் கூறுகையில் ,நகராட்சி நடவடிக்கை எடுத்து குப்பைகள் அகற்றப்பட்டாலும் பொதுமக்கள் பள்ளி அருகே குப்பையை கொட்டாமல் இருக்க வேண்டும் அப்போதுதான் இப்பகுதி சுத்தாமகும் என்றார்.
_____________________________________________________________________________________________
அதே போல் வடக்கு தெரு பள்ளி வாசல் அருகே கொட்டப்படும் குப்பைகளை விரைவாக அகற்ற நடவடிக்கை எடுக்க அப்பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


இது குறித்து சாதிக் என்பவர் கூறுகையில் , இங்கே கொட்டப்படும் குப்பைகளை எட்டு நாட்களுக்கு ஒருமுறைதான் துப்புரவு செய்கின்றனர்.இதனால் அருகில் உள்ள வீடுகளில் இருப்பவர்கள் துர்நாற்றத்தால் அவதிபடுகின்றனர்.இதனால் கொசுக்கள் அதிகமாகி ஒருவ‌ர் மாற்றி ஒருவ‌ர் காய்ச்சலில் பாதிக்கப்பட்டு தின‌மும் ம‌ருத்துவ‌ம‌னைக்கு செல்ல‌ வேண்டியுள்ள‌து.அருகிலேயே தொழுகை ப‌ள்ளி இருப்ப‌தால் இவ்வழியே தொழுகைக்கு செல்ப‌வ‌ர்க‌ளும் பாதிப்புக்குள்ளாகிறார்க‌ள். ப‌ல் வேறு சுகாதார ந‌ட‌வ‌டிக்கைக‌ள் எடுத்து வ‌ரும் ந‌க‌ராட்சி நிர்வாக‌ம் இப்ப‌குதியில் உட‌ன‌டி ந‌ட‌வ‌டிக்கை எடுக்க‌ வேண்டும் என‌ கேட்டுகொள்கிறோம் என்றார்.

4 comments:

  1. ஹைராத்துல் ஜலாலியா பள்ளிகூடம் மேலத் தெருவில் அமையவில்லை, வடக்குத்தெரு பள்ளிவாசலும் மேலத் தெருவில் அமையவில்லை அதற்கு டிசம்பர் மாதமும் வராது அதனால அங்கு குப்பை கொட்டி கிடக்கதான் செய்யும். இதுவே மேலைத் தெருவா இருந்தால் இரவு பகல் பாராமல் துரித நடவடிக்கை எடுத்திருப்பார்கள்.

    ReplyDelete
  2. முஹம்மது ஹாஃபில்December 12, 2011 at 5:44 PM

    அஸ்ஸலாமு அழைக்கும்,

    சகோதரர் நவாஸ் அவர்களே உங்கள் ஆதங்கம் புரிகிறது, இருப்பினும் மற்றவர்களை குறை கூறி பயனில்லை. ஹைராத்துல் ஜலாலியாவும், வடக்குத்தெரு பள்ளிவாசலும் மேலத் தெருவில் அமையவில்லைதான். ஆனால் இந்த இடத்தில் குப்பை கொட்டுவது அதே தெருவில் வசிபர்களே, மற்ற தெருவினர் அல்ல. அங்கு வசிபவர்களுக்கு விழிப்புணர்ச்சி வேண்டும். இல்லையேல் எத்தனை முறை சுத்தம் செய்தலும் பயனற்று போகும்.

    ReplyDelete
  3. இளம்புயல் இத்ரீஸ்December 12, 2011 at 5:56 PM

    நகராட்சி தலைவி அவர்கள் பொறுப்பேற்று சில மாதங்கள் தான் ஆகின்றது இப்போது தான் தில்லையேந்தல் நிலப் பிரச்சனை சுமூகமாக முடிந்துள்ளது. கால்வாய் சுத்தப் படுத்தும் பனி எல்லா தெருக்களிலும் நடந்து வருகின்றது.
    பொதுமக்கள் கொஞ்சம் பொறுமையாக இருந்தால் இன்ஷாஅல்லா எல்லா பணிகளையும் தலைவி நிறைவேற்றி வைப்பார்கள்

    ReplyDelete
  4. நவாஸ் லண்டன்December 13, 2011 at 12:26 AM

    அந்த இடத்தில் குப்பை கொட்டுவது அதே தெருவாசி மக்கள்தான் யார் இல்லை என்று சொன்னது அதற்காக அந்த தெரு மக்கள் குப்பையை தலையில் தூக்கி வைத்துக் கொண்டு தில்லையேந்தல் போய் குப்பையை போட சொல்லுரீங்களா? மக்கள் குப்பையை கொட்டதான் செய்வார்கள் அதை துப்புரவி பனி செய்யதான் நகராட்சி என்பதை மறந்துவிட்டு பேசுரீங்க சகோதரரே ஹாஃபில். தரமான விசாலமான் குப்பை தொட்டி இருக்க வேண்டும் அந்த தொட்டி நிரம்பி குப்பை கொட்டாத அளவுக்கு நேரத்திற்கு அந்த தொட்டியை காலியாக வைத்தல் இது போன்ற பனிகளை நகராட்சி திறம்பட செய்த பிறகுதான் மக்களிடம் விழிப்புனர்ச்சி பற்றி பேச நமக்கு தகுதி இருக்கு.அந்த போட்டாவை பார்த்துமா மக்களிடம் விழிப்புனர்ச்சி இல்லை என்று மனசாட்சி இல்லாமல் பேசுரீங்கள்.

    ReplyDelete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.