Sunday, April 22, 2012
அத்திலை தெரு இளைஞர்கள் முயற்சியால் மின் தொடர்பான பிரச்சனைக்கு தீர்வு !
மின் ஊழியர்களுடன் இணைந்து பணியாற்றிய இளைஞர்கள்
கீழக்கரை அத்திலை தெரு பகுதியில் மின்கம்பங்கள் கீழே விழும் நிலையிலும் ,வயர்கள் அறுந்து விழும் நிலையில் இருப்பதாகவும் அப்பகுதி மக்கள் நீண்ட காலமாக புகார் அளித்து வந்தனர்.
சில மாதங்களுக்கு முன் நகராட்சி தலைவர் ராபியத்துல் காதரியா மின்சாரதுறையிடம் இது குறித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினார்.
இதனையடுத்து மின் துறை உயர் அதிகாரி பாண்டியன் நகராட்சி தலைவருடன் அத்திலை தெருவில் பாதிப்படைந்த மின்கம்பங்களை பார்வையிட்டார் .விரைவில் சரி செய்யப்படும் என்றார்.ஆனாலும் பழுது பார்ப்பது தாமதாமாகி வந்தது.
இதனையடுத்து கடந்த சில மாதங்களாக அப்பகுதியின் இளைஞர்களின் தொடர் முயற்சியின் பேரில் இப்பகுதியில் உள்ள வீடுகளில் வசூல் செய்து புதிய வயர்கள் உள்ளிட்ட உபரகரணஙகளை வாங்குவதற்கு ஏற்பாடு செய்தனர்.இதனையடுத்து மின் இலாகவினர் 5 ஊழியர்களுடன் அத்திலை தெரு பகுதியில் பழுதடைந்த வயர்கள் உள்ளிட்ட மின் உபகரணங்களை மாற்றி சரி செய்தனர்.இப்பகுதியின் 10க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மின் ஊழியர்களோடு இணைந்து பணியை மேற்கொண்டனர்.
நீண்ட காலமாக இருந்து வந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்த இளைஞர்கள் பாராட்டுக்குறியவர்கள் என்று அப்பகுதியை சேர்ந்தோர் தெரிவித்தனர்.
மின் உபகரணங்கள் வாங்குவது மின் இலாகா செய்ய வேண்டிய பணியாகும்.மின் கட்டணங்களை உயர்த்தியும் கடுமையான முறையில் வசூல் செய்யும் மின் இலாகா இதுபோன்ற பணிகளை இனியாவது தங்களின் துறை மூலமாக சரிசெய்து கொடுக்க வேண்டும்.இது போன்ற பணிகளை மக்களே செய்து கொள்ள வேண்டும் என்ற நிலையை ஏற்படுத்துவது அரசாங்கத்திற்கு கெட்ட பெயர் ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை.
செய்தி தொகுப்பு : அல்லா பக்ஸ்(செய்திக்குழு)
Subscribe to:
Post Comments (Atom)
பணியில் ஈடுபட்ட அனைத்து தொண்டர்களுக்கும் மனமார்ந்த நன்றி
ReplyDeleteசிஹாபுதீன்
இது போன்று மற்ற பகுதிகளை/தெருக்களையும் ஆய்வு மேற்க்கொள்ள எதாவது முயற்சிகள் உண்ட.எல்லாம் மக்களே முன் வந்து செய்யணும் என்றால் அரசு ஊழியர்கள் எதற்கு?
ReplyDeleteஇது போன்று மற்ற பகுதிகளை/தெருக்களையும் ஆய்வு மேற்க்கொள்ள ஏதாவது முயற்சிகள் உண்ட.எல்லாம் மக்களே முன் வந்து செய்யணும் என்றால் அரசு ஊழியர்கள் எதற்கு?அரசாங்கம் எதற்கு?
ReplyDeleteஅஸ்ஸலாமு அலைக்கும் சகோ சுவனப்பிரியன்.//கிராமத்தில் இருக்கும் ஒவ்வொரு வீட்டின் உரிமையாளரும் மனது வைத்தால் ஒரு நாளில் தீர்ந்து விடக் கூடிய பிரச்னை இது.//இது எழுதுவதற்கும் சொல்வதற்கும் வேண்டுமானால் சுலபமாக இருக்கும் ஆனால் சாத்தியபடுவது மிகக்கடினம் சகோ.
ReplyDeletehttp://keelakaraitimes.blogspot.in/2012/04/blog-post_22.html இந்த சுட்டியைப்பாருங்கள்.இது ஒரு சிறு உதாரணம்.
கீழை நகரின் சுகாதரக்கேட்டுக்கு அரசாங்கம்,அரசாங்க ஊழியர்கள், பொதுமக்கள் அனைவருமே காரணம் என்பதுதான் உண்மை.நோய்கள் பரப்பும் வியாதிகள் உயிரிழப்பு எதனையும் கவனத்தில் கொள்ளாமல் உள்ள அரசாங்கத்தின் மெத்தனப்போக்கு,கல்லா கட்ட நினைக்கும் அரசு ஊழியர்கள்,தங்கள் சுற்றுப்புறத்தை தாங்கள்தான் சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும் என்ற அக்கரை இல்லாத சில பல ஜனங்கள்..இத்யாதி இத்யாதி..இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.
மக்கும் குப்பைகளையும் மக்காத குப்பைகளையும் தனித்தனி கூடைகளில் போட்டு வைத்தாலும் மக்காத குப்பை நிறைந்த அந்தக்கூடைகளை எடுத்து செல்லாத நகராட்சி ஊழியர்கள்.கேட்டால் எங்களுக்கு இது எடுக்க உத்தரவு இல்லை என்று கூறும் அலட்சியமனோ பாவம்..இன்னொரு கொடுமை என்றால் நகராட்சி ஊழியர்கள் குப்பையை எடுக்க வந்த நிமிடத்தில் தெருவைப்பார்த்தால் ரத்தம் கொதித்துப்போகும்..மக்காத குப்பைகளை தெருவிலேயே விசிறி அடித்து துவம்சம் செய்து விட்டு போய் இருப்பார்கள்.குப்பை வண்டி வந்து சென்ற பிறகு தெருவைக்காண சகிக்காது.
//ஒரு திருமணத்தை பல லட்சம் செலவு செய்து வீணடிக்கும் சமூகம், ஒரு சுன்னத்(முன் தோல் அகற்றுதல்) தனது பையனுக்கு செய்வதற்காக ஊரை கூட்டி விருந்து வைத்து வீண் பகட்டு காட்டும் சமூகம், தனது மகள் பூப்பெய்வதை பத்திரிக்கை அடித்து அதையும் விருந்தாக்கி மகிழும் சமூகம், இறந்த தாயோ தகப்பனோ வீட்டில் கிடக்க மார்க்கம் தடுத்த விருந்தை ஆக்கி அனைவரையும் அழைக்கும் சமூகம்//இதெல்லாம் இப்பொழுது அருகி வருவது உண்மை சகோ.
ஆடம்பரத்திருமணங்கள் அவ்வப்பொழுது நடந்து வந்தாலும் கூடவே அதே திருமண மேடையில் ஏழை குமர்களுக்கும் அவர்கள் செலவில் திருமணம் முடித்து வைக்கும் நல்ல காரியங்களையும் இவ்வூர் மக்கள் செய்யத்தவறுவதில்லை என்ற உண்மையை இங்கு நான் சொல்லிக்கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
//கிராமத்தின் சுகாதாரப் பிரச்னைக்கு அரசை கைகாட்டி விட்டு ஒதுங்கிக் கொள்வதை நினைத்தால் வேதனைப்படாமல் இருக்க முடியுமா?//இந்நிலை உண்மை அல்ல சகோ.கீழக்கரை வெல்பேர் அஸோசியேசன் என்ற ஒரு சேவைத்தொண்டு நிறுவனத்தை நிறுவி பல வகையில் பணியாற்றி வருகின்றனர்.வீட்டுக்கு வீடு தரமான குப்பை வாளிகளும் கூடவே குப்பை வாளிகளுக்கு மாட்டுவதற்கு பிளாஸ்டிக் கவர்களும் விநியோகித்தனர்.குப்பை வாளிகளை வேறெதற்கும் உபயோகப்படுத்திவிடகூடாது என்ற எண்ணத்தில் அடியில் துவாரங்கள்போட்டு புத்திசாலித்தனமாக இலவசமாக விநியோகித்தனர்.ஆனால் சில மக்கள் பிளாஸ்டிக் ஒட்டுபவரிடம் கொடுத்து அடியில் உள்ள துவாரத்தை அடைத்து அரிசி நீர் சேமித்து வைக்க உபயோகித்து ஒத்துழைக்காமல் இருக்கும் பொழுது என்ன செய்ய முடியும் சொல்லுங்கள்?
//எங்கள் கிராமத்தில் அதிகமான வீடுகளில் வீட்டின் பரப்பளவை ஒத்த கொல்லையும் இருக்கும். // இதற்கு சான்சே இல்லை சகோ.ஒரு கோல் என்று அளவிடப்படும் 70 சதுர அடி நிலத்தின் மதிப்பு ஊருக்குள் 3,3.5 லட்சம் வரை விற்பனை ஆகும் பொழுது கொல்லை புரத்தை நினைத்துக்கூட பார்க்க இயலாது.:)
தங்கள் பார்வைக்காக
1.http://keelakaraitimes.blogspot.in/2012/07/blog-post_7607.html
2.http://keelakaraitimes.blogspot.in/2012/05/blog-post_04.html
3.http://keelakaraitimes.blogspot.in/2012/04/blog-post_30.html
4.http://keelakaraitimes.blogspot.in/2012/02/blog-post_03.html
5.http://keelakaraitimes.blogspot.in/2012/01/blog-post_1947.html
சலாம் சகோ.மு அனுப்பிய கருத்து தவறுதலாக தங்கள் தளத்துக்கு மாறி வந்த பின்னூட்டம்.அதனை வெளியிட வேண்டாம்.
ReplyDeleteஉங்கள் பார்வைக்கு மட்டும் கீழ் கண்ட சுட்டி.
http://suvanappiriyan.blogspot.in/