Sunday, April 29, 2012

விபத்து அபாயம் !வண்ணாந்துறை வளைவில் சாலையோரம் வீசப்படும் இரும்பு வேகதடுப்பு!



கீழக்கரையிலிருந்து ராமநாதபுரம் செல்லும் வழியில் வண்ணாந்துறை அருகே சாலை வளைவில் அடிக்கடி விபத்து நடைபெற்று வந்ததால் காவல்துறை சார்பில் வேகத்தை கட்டுப்படுத்தும் விதமாக சாலையில் இரும்பு தடுப்பு வளைவு வேலிகளை அமைத்திருந்தனர்.ஆனால் லாரிகளில் வருபவர்கள் தடுப்புகளை சாலையோரம் வீசி விட்டு லாரிகளை வேகமாக ஓட்டி செல்வதாகவும் இத‌னால் விப‌த்துக்க‌ள் ஏற்ப‌ட‌ வாய்ப்புள்ள‌தாக‌ பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.


இது குறித்து ரோட்டரி சங்க நிர்வாகி ஆசாத் கூறுகையில் ,
வாகனத்தில் வருபவர்களின் பாதுகாப்புக்காகத்தான் இந்த ஏற்பாட்டை காவல்துறையினர் செய்துள்ளனர். ஆனால் அதை புரிந்து கொள்ளாமல் இது போன்ற செயலில் ஈடுபடுவது கண்டிக்கதக்கது என்றார்.

1 comment:

  1. மங்காத்தாவின் தங்கச்சி மகன்January 23, 2013 at 7:23 PM

    பல முறை இது விசயமாக கீழக்கரை டைம்ஸில் பதிவு செய்து விட்டோம். இப்போதாவது நடவடிக்கை தொடர வேண்டும் என்ற ஆதங்கத்தோடு மீண்டும் பதிவு செய்கிறோம். வண்ணான் துறையின் இரு மருக்கிலும் உள்ள அனைத்து காட்டு கருவேல் மரங்கள், பனை மரங்கள் வேரோடு சாய்க்கப்பட வேண்டும்.விளம்பர பலகைகளும் நீக்கப்பட வேண்டும்.

    இதன் பின் இப்போது கற்பனை செய்து பாருங்கள். அந்த வளைவு ரோடு எப்படி காட்சி தரும் என்று.

    இப்போது குறிப்பாக ராம்நாதபுரத்திலிருந்து பஸ்ஸில் வரும் போது கூட வலைவில் உள்ள வாகனங்கள் பார்வைக்கு தெரிவதில்லை. உள்ளூர் வாசிகளுக்கு சாலையின் அமைப்பு தெளிவாக தெரியும். ஆனால் வெளியூர் வாசிகளுக்கு......

    விபத்து ஏற்படும் முன் நடவடிக்கையை மேற் கொள்வார்களா? அல்லது வழக்கம் போலத்தானா?

    ReplyDelete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.