Tuesday, April 17, 2012

கீழக்கரை பகுதியில் கள் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை! காவல்துறை எச்ச‌ரிக்கை!(படம்)


பனங்கள் விற்பனைக்கு தடை குறித்தும், மீறி யாராவது விற்பனை செய்தால் புகார் தெரிவிப்பது பற்றியும் திருப்புல்லாணி காவல்நிலையத்தில் பொதுமக்களுக்கு அறிவுரை தருகிறார் இன்ஸ்பெக்டர் இளங்கோவன்.

பனங்கள் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மீறி விற்பனை செய்தால் பொதுமக்கள் புகார் தரலாம் போலீசார் தெரிவித்துள்ளனர்.

கீழக்கரை , திருப்புல்லாணி மற்றும் சுற்றுப்பகுதி கிராமப்புறங்களில் பனங்கள் விற்பனை ஜோராக நடப்பதாக புகார்கள் வந்தன. இதையடுத்து, திருப்புல்லாணி காவல் நிலையத்தில் அப்பகுதியில் உள்ள கிராமங்களான சக்திபுரம், பெரியபட்டிணம், காடுகாவல்காரன் வலசை, சேதுகரை, மேதலோடை ஆகிய பகுதிகளில் உள்ளோரை அழைத்து இன்ஸ்பெக்டர் இளங்கோவன் அறிவுரை வழங்கினார்.

அவர் கூறுகையில், “பனை மரத்தில் இருந்து கிடைக்கும் பதநீரை வியாபாரம் செய்யுங்கள். பெண்கள் ஓலைபாய், ஓலை பெட்டிகள் தயார் செய்து வியாபாரம் செய்யுங்கள். கள் விற்பனை செய்யக்கூடாது. மீறி விற்பனை செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்,” என்றார். “தடையை மீறி யாராவது கள் விற்பனை செய்தால், 84289 90028, 90438 33408 ஆகிய எண்களுக்கு போன் செய்து புகார் தெரிவிக்கலாம். தகவல் தருபவர்களின் பெயர் ரகசியமாக வைக்கப்படும்,” என் றார்.

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.