
கீழக்கரை நகராட்சி தலைவர் ராவியத்துல் காதரியா சென்னை சென்று கீழக்கரையில் பல்வேறு நல திட்டங்களை செயப்படுத்த கோரி சம்பந்தப்பட்ட அமைச்சர்களை சந்தித்து வலியுறுத்தி மனு அளித்துள்ளதாக கீழக்கரை நகராட்சி தலைவர் தரப்பில் செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கூறப்பட்டுள்ளதாவது..
கீழக்கரையை தனி தாலுகாவாகும் என அரசு அறிவித்துள்ளது.அந்த அறிவிப்பை விரைந்து செயல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி வருவாய் துறை அமைச்சர் செங்கோட்டையனிடம் வலியுறுத்தினார். விரைவில் இதற்கான நடவடிக்கைகள் முடுக்கி விடப்படும் என்று அமைச்சர் உறுதியளித்துள்ளார்

கீழக்கரையில் பாதாள சாக்கடை திட்டத்தை விரைந்து செய்லபடுத்தவும்,நகராட்சிக்கு கூடுதல் துப்புரவு பணியாளர்களை நியமிக்கவும் கோரி உள்ளாட்சி துறை அமைச்சர் முனுசாமியை சந்தித்து வலியுறுத்தினார். அனைத்தையும் கவனித்து விரைவில் ஆவண செய்வதாக அமைச்சர் கூறினார்

கீழக்கரையில் புதிய தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்தி தருமாறு தொழில்துறை அமைச்சர் தங்கமணியிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.இக்கோரிக்கையை கவனத்தி கொண்டு ஆவண செய்யப்படும் என்றதோடு தொழில் தொடங்க முன் வருபவர்களுக்கு அரசு நிச்சயம் தேவையான அனைத்து உதவிகளை செய்யும் என்று அமைச்சர் உறுதியளித்துள்ள
கீழக்கரையில் 80 சதவீதத்துக்கும் மேல் மின் கம்பங்கள் பழுதடைந்து உள்ளது.நகரின் பெரும்பாலான இடங்களில் நடந்து செல்லும் மக்களின் தலையை உரசும் அளவுக்கு பல இடங்களி வயர்கள் தொங்குகிறது.இவை அனைத்தையும் மாற்றி புதியதாக அமைக்கவும் மற்றும் மின் தொடர்பான பல்வேறு பிரச்சனைகளையும் தீர்க்க வேண்டும் என வலியுறுத்தி மின்சாரத்துறை அமைச்சர் விஸ்வநாதனிடம் வலியுறுத்தப்பட்டது.அவர் இது குறித்து ஆவண செய்யப்படும் என்றார்.
நகராட்சி தலைவர் ராவியத்துல் காதரியா கூறியதாவது, .கீழக்கரைக்கு நலனுக்கு தேவையானவற்றை செய்து தருவதாக அமைச்சர்கள் உறுதியளித்துள்ளனர் என்றார்.
ஏற்கனவே போய் சந்திச்சதுக்கே விடையே காணோம்... மறுபடியுமா?
ReplyDeleteGood Work ..... Keep it chairman amma ... answer will come soon sultan
ReplyDelete