Monday, April 23, 2012

2-5-12அன்று கீழக்கரை நகராட்சி அலுவலகம் முன்பு கவுன்சிலர்கள் உண்ணாவிரதம்!



கீழக்கரை நகராட்சி 18வது வார்டு கவுன்சிலர் முகைதீன் இப்ராகிம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது,

கீழக்கரை நகராட்சியில் நிலவும் மெத்தன போக்கு மற்றும் நிர்வாக சீர்கேடுகளை கண்டித்தும், கீழ்க்கண்ட 10 அம்ச கோரிக்கையை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்றி தரக் கோரியும் கீழக்கரை நகராட்சி முன்பு 02.05.2012 புதன் கிழமை காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் நான் மற்றும் கீழ்கண்ட நகர்மன்ற கவுன்சிலர்களால் நடைபெற இருக்கின்றது.

கோரிக்கைகளின் விபரம்:-

1) கீழக்கரை நகராட்சியில் பொறுப்பு வகிக்கும் ஆணையர் நகர் மீது அக்கரை இன்றி செயல்படுவதால் இந்த நகராட்சிக்கு பொறுப்பான தனி ஆணையர் நியமிக்க கோரியும்.

2) கீழக்கரை நகராட்சியில் A கிரேடு அதிகாரிகளின் பற்றாக்குறையால் கீழக்கரை நகராட்சியின் செயல்பாடுகள் முற்றிலும் செயலிழந்து இருப்பதால் அந்த பதவிகளுக்கு உடனடியாக அதிகாரிகளை நியமனம் செய்யக் கோரியும்.

3) கீழக்கரை நகராட்சியில் சட்ட விதிகளுக்கு அப்பாற்பட்டு பொறுப்பற்ற முறையில் நீண்ட நாட்களாக பணிபுரியும் D கிரேடு ஊழியர்களை பணியிட மாற்றம் செய்து பொறுப்பான ஊழியர்களை நியமனம் செய்யக் கோரியும்.



4) கீழக்கரை நகரில் மக்கள் நலப்பணிகள் செய்வதற்கு மன்ற ஒப்புதல் பெற்று ஒப்பந்த புள்ளி (TENDER) நடந்த பின் இதுவரை வேலை நியமன ஆணை (WORK ORDER) கொடுக்காத நகராட்சி ஆனையர் மீது நடவடிக்கை மேற்கொள்ள கோரியும்.

5) மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் அறிவித்த பெண் பிரதிநிதிகளின் உள்ளாட்சி அமைப்புகளில் உறவினர் மற்றும் கணவரின் தலையீட்டை தடுத்து ஆணை பிறப்பித்ததை மதிக்காமல் மீறி செயல்படும் நபர்கள் மீது அரசு நடவடிக்கை மேற்கொள்ள கோரியும்.

6) கீழக்கரை தற்போது நகராட்சியாக உயர்ந்து இருப்பதால் நகரின் நலன் கருதி கூடுதல் நிரந்தர துப்புறவு தொழிலாளர்களை நியமனம் செய்யக் கோரியும்.

7) கீழக்கரை மக்கள் மலேரியா மற்றும் கொடிய நோய்களால் அவதிப்படுவதால் நகரின் அடிப்படை தேவைகளான குறிப்பாக கொசு மருந்து அடிப்பது, வாருகால்களில் தூர் வாருவது, சாலைகளில் தேங்கி இருக்கும் மணல்களை அகற்றுவது, தேவைப்படும் இடங்களில் பொது மக்கள் நலன் கருதி வேகத்தடை அமைப்பது, முறையாக குப்பைகளை அகற்றுவது இவைகளை உடனடியாக செயல்படுத்த சம்மந்தப்பட்ட அதிகாரிகள் கீழக்கரை நகராட்சிக்கு உத்தரவு செய்யக்கோரியும்.

8) நகருக்கு அரசு ஒதுக்கும் நிதி முழுமையாக மக்களை சென்றடைய ஒப்பந்தப்படி ஊழல் நடைபெறாமல் முறையாக வேலைகள் நடைபெறுகின்றதா என்பதை ஆய்வு செய்ய சிறப்பு அரசு பொறியாளர் தலைமையில் பொது அமைப்புகளில் பிரதிநிதிகள் குழு அமைக்க கோரியும்.

9) கீழக்கரை பொது மக்களுக்கு வழங்கப்படும் குடிநீர் நீர்தேக்க தொட்டி சுகாதாரம் இன்றி இடிந்து விழும் நிலையில் உள்ளதால் அதை உடனடியாக அகற்றி கூடுதல் கொள்ளலவு உள்ள நீர்தேக்க தொட்டி புதிதாக அமைக்க கோரியும்.


10) கீழக்கரை நகர் மன்ற கூட்டம் நடத்துவதற்கு சுமார் 72 மணி நேரத்திற்கு முன் மாமன்ற உறுப்பினர்களின் கவனத்திற்கு மன்ற நிகழ்ச்சி நிரல் (BOARD AJENDA) படிவத்தை முறையாக வழங்க கோரியும்.

கீழக்கரை நகர் மக்கள் நலன் கருதி நடைபெறும் இந்த உண்ணவிரத போராட்டத்தில் நான் மற்றும் 1. A.ரமேஷ் M.C 2. M.சாகுல் ஹமீது M.C 3. R.தங்கராஜ் M.C
4. S.A.அன்வர் அலி M.C 5. S.அஜ்மல் கான் M.C 6. M.S.முகம்மது மஜிதா பீவி M.C
7. M.L.அருஸியா பேகம் B.SC, M.C 8. A.H.ஹாஜா நஜ்முதீன் M.C 9. D.ஜெயபிரகாஷ் M.C ஆகிய கவுன்சிலர்கள் கலந்து கொள்ள இருக்கின்றார்கள் என்பதை இதன் மூலம் தெரிவித்து கொள்கின்றோம்.

இவ்வாறு அவ‌ர் கூறியுள்ளார்

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.