Friday, April 13, 2012

தாசிம் பீவி கல்லூரியில் ஆராய்ச்சி குறித்து ச‌ர்வ‌தேச‌ க‌ருத்த‌ர‌ங்க‌ம் !



கீழக்கரை,

கீழக்கரை தாசிம்பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரியில் தற்கால ஆய்வாளர் ஆராய்ச்சி குறித்த பன்னாட்டு கருத்தரங்கம் நடந்தது. கல்லூரிவளாகத்தில் நடந்த கருத்தரங்கை உதவி பேராசிரியர் ஹபீஸா கிராஅத் ஓதி துவங்கி வைத்தார். காரைக்குடி அண்ணா பல்கலைக்கழக டீன் கருத்த பாண்டியன் தலைமை வகித்து பேசினார். கல்லூரி முதல்வர் சுமையா வரவேற்றார். துணைமுதல்வர் நாதிராபானுகமால், ஜிஆர்யூ காந்தி கிராம் மூத்த ஆராய்ச்சியாளர் சாமுவேல் காகூகோ முன்னிலை வகித்தனர்.

அண்ணா பல்கலைக்கழக டீன் கருத்தபாண்டியன் பேசுகையில், “ஆய்வு என்பது, 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு திருக்குறளில் திருவள்ளுவர் சொன்னது போல மெய்பொருள் காண்பது அறிது என்பதற்கிணங்க இருக்கவேண்டும். பல ஆராய்ச்சிகள் மேற்கொண்டு உண்மை பொருளை கண்டுபிடித்து கூறுவதே சிறந்த ஆய்வு,” என்றார். வணிகவியல் துறை தலைவர் ஜாஸ்மின் நன்றி கூறினார். ஏற்பாடுகளை துறைத்தலைவர்கள், அலுவலர்கள் செய்திருந்தனர்.

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.