Monday, April 16, 2012

வேக கட்டுப்பாடு,யூனிபார்ம் உள்ளிட்ட‌ விதிமுறை மீறல்!14 ஆட்டோக்களுக்கு அபராதம்!


பைல் படம்-கீழக்கரையில் அதிக பள்ளி குழந்தைகளுடன் ஆபத்தான ஆட்டோ பயணம்

கீழக்கரை ப‌குதியில் 500க்கும் மேற்பட்ட ஆட்டோக்களும் நூற்றுக்கணக்கான ஆம்னி வேன்களும் இயக்கப்படுகிறது. எப்சி காலவதியாகி புதுபிக்காமலும் ,ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனங்கள் இயக்கப்படுவதாக குற்றச்சாட்டுக்கள் நிலவி வந்த நிலையில் நேற்று ஆர்டிஓ குலோத்துங்கன் கீழக்கரை பகுதியில் வாகனங்களை திடீர் சோதனை செய்தார் இதில் எப்சி காலவதியாகி இயக்கபட்ட இரண்டு ஆட்டோக்களை பறிமுதல் செய்து கீழக்கரை காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.

மேலும் அதிவேகம் மற்றும் யூனிபார்ம் அணியாமல் ஓட்டியது என 14 ஆட்டோக்களுக்கு ரூ500 அபராதம் விதித்தார்

இது குறித்து சுல்தான் என்பவர் கூறுகையில் ,


பள்ளி நேரத்தில் ஆர்டிஓ சோதனை செய்து அதிகமான குழந்தைககளை ஏற்றி செல்லும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.கம்பிகளில் உட்கார்ந்து பயணம் செய்யும் குழந்தைகள் கீழே விழுந்து விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவவே இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.