
கீழக்கரையிலிருந்து ராமநாதபுரம் செல்லும் அரசு பஸ்களில் அரசு நிர்ணயித்த கட்டணம் ரூ 9 ரூபாய் ஆனால் ஆனால் அரசு பஸ் கண்டக்டர்கள் ரூ10 வசூல் செய்வதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகிறார்கள்.இது குறித்து கண்டக்டரிடம் பயணிகள் விளக்கம் கேட்டால் வேறு பஸ்சில் பயணம் செய்யுங்கள் என்று அலட்சியமாக பதில் கூறுகிறார்களாம்.இதனால் தனியார் பஸ்களை நாடக்கூடிய சூழ்நிலைக்கு தள்ளப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து சமூக நல நுகர்வோர் சேவை இயக்கத்தின் செயலாளர் தங்கம் ராதாகிருஸ்ணன் கூறுகையில் ,
தமிழக அரசு பன்மடங்கு உயர்த்தியுள்ளதை தாங்க முடியாமல் பொது மக்கள் சிரமப்படும் சூழலில் தற்போது அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதலாக கண்டக்டர்கள் வசூல் செய்கின்றனர்.
இது குறித்து ராமநாதபுரம் அரசு டவுன் பஸ்களின் மேலாளரிடம் புகார் தெரிவித்துள்ளோம் .ஆனால் இது வரை எந்த நடவடிக்கையும் இல்லை.எனவே பொது மக்களின் நலன் கருதி மாவட்ட ஆட்சியர் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment
செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.