Friday, April 13, 2012

ந‌க‌ராட்சியை க‌ண்டித்து ந‌க‌ராட்சி அலுவ‌ல‌க‌ம் முன்பு குப்பை கொட்டும் போராட்ட‌ம்!க‌வுன்சில‌ர் அறிவிப்பு !

18வது வார்டு பகுதியில் குப்பைகளும், வாருகால்களில் தேங்கி இருக்கும் கழிவுகளும் அகற்றபடாமல் இருப்ப‌தாக க‌வுன்சில‌ர் முகைதீன் இப்ராகிம் தெரிவிக்கிறார்.

கீழக்கரை நகராட்சியின் 18வது கவுன்சிலர் முகைதீன் இப்ராகிம் தனது வார்டு புறக்கணிக்கப்படுவதாகவும் எனவே நகராட்சியை கண்டித்து நகராட்சி அலுவலகம் முன்பு குப்பை கொட்டு போராட்டம் நடத்த இருப்பதாக தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவ‌ர் வெளியிட்டுள்ள‌ செய்தியில் கூறியிருப்ப‌தாவ‌து,

கீழக்கரை நகராட்சி எனது 18வது வார்டு பகுதியில் குப்பைகளும், வாருகால்களில் தேங்கி இருக்கும் கழிவுகளும் அகற்றபடாமல் இருக்கின்றது. மேலும் என் வார்டு பகுதிகளில் துப்புரவு பணி முறையாக செய்வது கிடையாது. இது சம்மந்தமாக எனது வார்டு பொது மக்கள் என்னிடம் பல முறை புகார் செய்து உள்ளனர். இதனால் என் வார்டு பகுதியில் பெரும் அளவு சுகாதார கேடு ஏற்படுவதுடன், பொது மக்கள் நோய்களால் அவதி படுகின்றார்கள்.

இது பற்றி பலமுறை நகராட்சி நிர்வாகத்தில் கூறியும் இதுவரை முறையாக எந்த நடவடிக்கையும் நகராட்சி நிர்வாகம் மேற்கொள்வது கிடையாது. கீழக்கரை நகராட்சியின் மெத்தன போக்கை கண்டித்து என் வார்டு குறைகளை நகராட்சியின் கவனத்திற்கு கொண்டு செல்ல எனது வார்டு பகுதியில் உள்ள குப்பைகளை சேகரித்து 16.04.2012 திங்கட்கிழமை காலை 10 மணியளவில் நகராட்சி அலுவலகம் முன்பு கொட்ட இருக்கின்றேன்.

இந்த தகவலை தங்களது கவனத்திற்கு தெரியப்படுத்தி கொள்கிறேன் என்பதை இதன் மூலம் தெரிவித்து கொள்கிறேன்.

மேலும் அவ‌ர் கூறிய‌தாவ‌து,

தொட‌ர்ந்து என்னால் சிற‌ப்பாக‌ செய‌ப‌ட‌முடியாம‌ல் இருக்குமானால் க‌வுன்சில‌ர் ப‌த‌வியை ராஜினாமா செய்வேன் என்றார்.

இது குறித்து ந‌க‌ராட்சி தலைவ‌ர் ராவியத்துல் காத‌ரியா த‌ர‌ப்பில் கேட்ட‌ போது,

எல்லா வார்டுகளும் ஒரே மாதிரியான‌ கண்ணோட்ட‌த்துட‌ன்தான் ப‌ணிக‌ள் மேற்கொள்ள‌ப்ப‌டுகின்ற‌ன‌.கீழ‌க்க‌ரை ந‌க‌ர் முழுவ‌து சுகாதாரத்தை மேம்ப‌டுத்த‌ ப‌ல்வேறு ந‌ட‌வ‌டிக்கைக‌ளை ந‌க‌ராட்சி நிர்வாகம் எடுத்து வ‌ருகிறது.விரைவில் குப்பை கிட‌ங்கு ப‌ணிக‌ள் நிறைவ‌டைந்த‌வுட‌ன் குப்பை பிர‌ச்ச‌னைக்கு நிர‌ந்த‌ர‌ தீர்வு ஏற்ப‌ட்டு விடும்.18வ‌து வார்டு க‌வுன்சில‌ரின் குற்ற‌ச்சாட்டில் உண்மையில்லை இவ்வாறு அவ‌ர் த‌ர‌ப்பில் தெரிவிக்க‌ப்ப‌ட்ட‌து.

:

9 comments:

  1. கீழக்கரை 18வது வார்டு கவுன்சிலர் நகராட்சியின் மெத்தன போக்கையும், கீழக்கரை நகரில் நிலவும் சுகாதார கேட்டையும் கருத்தில் கொண்டு நகராட்சி அலுவலகம் முன்பு குப்பையை கொட்டி நகராட்சியின் கவனத்திற்கு கீழக்கரை நகரின் நிலையை உணர்த்த நினைப்பது பாராட்டுக்குரியது. கீழக்கரையை சுற்றி வந்தால் சுகாதாரத்தின் உண்மையை நிலையை அறியலாம். மேலும் அவர் புகைப்பட ஆதாரத்துடன் தான் இச்செய்தியை அனுப்பியுள்ளார் என்பதை அறிய முடிகிறது. இச்செய்தி வந்த பின் தான் சம்மந்தப்பட்ட இடங்களில் அதிரடியாக துப்புரவு செய்யப்பட்டுள்ளது.

    ReplyDelete
  2. அ.அப்துல் ரஹ்மான்April 14, 2012 at 1:23 PM

    Friday 13 April 2012
    ந‌க‌ராட்சியை க‌ண்டித்து ந‌க‌ராட்சி அலுவ‌ல‌க‌ம் முன்பு குப்பை கொட்டும் போராட்ட‌ம்!க‌வுன்சில‌ர் அறிவிப்பு !
    18வது கவுன்சிலர் முகைதீன் இப்ராகிம் க‌வுன்சில‌ர் ப‌த‌வியை ராஜினாமா க‌வுன்சில‌ர் ப‌த‌வியை ராஜினாமா செய்வேன் என்றார்.

    18வ‌து வார்டுபொது மக்களுக்கு அன்பான கோரிக்கை:-
    முகைதீன் இப்ராகிம்(18வது கவுன்சிலர்)செய்ய ராஜினாமா வேண்டும் என்றுஎதிர்பார்க்கிறோம்.

    விரைவில் அவரை மாற்றி'

    புதிய 18வது கவுன்சிலர் தேர்வு செய்ய புதியதாக அமைக்கவும் சிற‌ப்பாக‌ நியாயமான கிடைக்க வாய்ப்புள்ளது.என்பதை தங்களது கவனத்திற்கு இதன் மூலம் தெரிவித்து கொள்கிறேன்.

    இப்ப‌டிக்கு.
    அ.அப்துல் ரஹ்மான்(18வ‌து வார்டு வாக்காள‌ர்) நடுத்தெரு.

    ReplyDelete
  3. நேர்மையானவன் என்றுமே வளைந்ததாக சரித்திரம் இல்லை ......
    அவர் வளைந்து கொடுக்கவும் தேவையில்லை .......வார்டின் நலன் கருதி செய்யும் அவரின் முயற்சிக்கு பரடம்மல் இருந்தாலும் பரவா இல்லை குறைந்த பட்சம் குற்றம் சாடாமல் இருந்தால் நன்றாக இருக்கும் .... வெளிநாடு சென்று உழைக்கும் தகுதி இருந்தும் தான் மக்களுக்கு சமுக சேவை செய்ய வேண்டும் ஏன்ற உன்னத லட்சியத்தில் பயணம் செய்யும் இந்த வீரனை துற்றமல் இருந்தால் அதுவே இவருக்கு செய்யும் நன்றியாக இருக்கும்.

    சற்று யோசித்து பாருங்கள் தங்களோ வெளிநாட்டில் இருந்து கொண்டு கருத்து தெரிவித்து கொண்டு இருகிறிர்கள் ......... வெளிநாட்டில் இருந்து கொண்டு யெல்லாம் பேசலாம் ....முடிந்தால் உள்ளுரில் வேலை செய்து பாருங்கள் அப்பறம் தெரியும் அதுவும் சமுக சேவை செய்யுங்கள் பார்போம் !!!
    முடியாது தோழா உங்களால் ....... தயவு செய்து துற்றமல் இருங்கள் !! இறைவன் போதுமானவன் !!

    இவன் .... 18 வார்டு வாக்காளர்

    ReplyDelete
  4. நேர்மையானவன் என்றுமே வளைந்ததாக சரித்திரம் இல்லை ......

  5. Intha Counsilar oru sarianaa comedy peesu ivar face pathale teriyuthu....ivar ippaditaan sila samayathula intha mathri comedi pannuvaaru..

    ReplyDelete
  6. Appericate your boldness

    ReplyDelete
  7. yaah sheikh mohideen ibrahim. We will always support you. Go ahead.

    vidiyal pirapathai yaaraalum thaduthu vida mudiyaathu..

    Keelai Vaiko

    ReplyDelete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.