Monday, April 16, 2012

குப்பை கொட்டும் போராட்ட அறிவிப்பு!க‌வுன்சில‌ரை பிடித்து சென்ற‌ போலீசார் !(படம்)


காவல் நிலையத்தில் கவுன்சிலர் முகைதீன் இப்ராகிம்

கீழக்கரை நகராட்சியின் 18வது கவுன்சிலர் முகைதீன் இப்ராகிம் தனது வார்டு புறக்கணிக்கப்படுவதாகவும் எனவே நகராட்சியை கண்டித்து இன்று(16-04-2012) நகராட்சி அலுவலகம் முன்பு குப்பை கொட்டு போராட்டம் நடத்த இருப்பதாக தெரிவித்திருந்தார். http://keelakaraitimes.blogspot.com/2012/04/blog-post_9500.html


இந்நிலையில் இன்று காலை கவுன்சிலர் முகைதீன் இப்ராகிம் வீட்டிற்கு சென்ற போலீசார் அவரை விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்து செல்லப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார்.இத‌னால் க‌வுன்சில‌ர் கைது செய்ய‌ப்ப‌ட்டார் என்று செய்தி ப‌ர‌வியது.இதனால் க‌வுன்சில‌ர்க‌ள் உள்ளிட்ட‌ ப‌ல‌ர் காவ‌ல்நிலைய‌த்தில் குவிந்தன‌ர்.



இது குறித்து கவுன்சிலர் முகைதீன் இப்ராகிம் கூறியதாவது,

என்னை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்ற கீழக்கரை போலீசார் குப்பை கொட்டும் போராட்ட‌த்திற்கு அனும‌தியில்லை என்றும் போராட்டம் நடத்த கூடாது என்றும் கூறி சுமார் 2 ம‌ணி நேரத்திற்கு மேல் காவல் நிலையத்தில் உட்கார‌ வைத்தன‌ர்.கைது செய்ய‌ப‌டுவோம் என்ற‌ எண்ண‌த்தில் தான் சென்றேன். பின்ன‌ர் காவ‌ல் நிலைய‌த்திலிருந்து விடுவித்து அனுப்பி விட்ட‌ன‌ர்.ஆனாலும் விரைவில் மக்கள் நலனை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் நடத்துவேன் என்றார்.

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.