Wednesday, September 11, 2013

வட்டார விளையாட்டு போட்டி ! கீழக்கரை முஹைதீனியா பள்ளி மாணவ,மாணவியர்கள் சாதனை

OLD Picture
 
ராமநாதபுரம் மாவட்டம் உத்தரகோசமங்கை அரசு மேல்நிலைபள்ளியில் நடந்த கீழக்கரை வட்டார அளவிலான குழு மற்றும் தனித்திறன் போட்டிகளில் கீழக்கரை முகைதீனியா மெட்ரிக் பள்ளி மாணவ, மாணவிகள் சாதனை படைத்தனர்.
 
வாலிபால் 14 வயதிற்கு உட்பட்டோர் பிரிவில் இப்பள்ளி மாணவ, மாண விகள் முதலிடத்தை பிடித்தனர். 14 வயதிற்கு உட்பட்டோருக்கான செஸ் போட் டியில் இப்பள்ளி மாணவி பியர்ஸ் துபிலா முதலிடத்தையும். மாணவர் முகை தீன் கருணை 3வது இடத்தையும் பிடித்தனர். 100 மீ, 200 மீ ஓட்டத்தில் 19 வயதிற்கு உட்பட்டோருக் கான பிரிவில் மாணவர் ரியாலுதீன் 2ம் இடத்தை பிடித்தார். இவர் உயரம் தாண்டுதலில் 3ம் இடத்தை பிடித்தார்.
குழு இறகுபந்து போட்டியில் இப்பள்ளி அணி ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவில் 2ம் இடம் பிடித்தது. 17 வய திற்கு உட்பட்டோர் ஒற்றை யர் பிரிவில் முதலிடத்தை யும், இரட்டையர் பிரிவில் 2ம் இடத்தையும் இப்பள்ளி மாணவர்கள் பிடித்தனர்.
எறிபந்து போட்டியில் 17 மற்றும் 19வயதிற்கு உட்பட்ட மாணவிகளுக் கான பிரிவில் 2ம் இடத்தை பிடித்தது. தட்டு எறியும் போட்டியில் மாணவி பரஹத் ஹப்னா 3ம் இடத்தை பிடித்தார்.
வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை பள்ளியின் தாளாளர் மௌலா முகை தீன், வடக்கு தெரு ஜமாஅத் துணைத்தலைவர் அகமது மிர்ஷா, செயலாளர் முகைதீன் இபுராகிம் தம்பி வாப்பா, கவ்விக்குழு உறுப்பினர்கள், பள்ளியின் முதல் வர் தேவி புவனேஷ்வரி, துணை முதல்வர் ஜெகநாத சேதுபதி, உடற்கல்வி ஆசிரியர்கள் ராமர், அமுதா மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள் பாராட்டினர்.

3 comments:

  1. Congratulation to the physical education department,pricipal,vice principal,management and parents...and my special wishes to winners and all participants....

    ReplyDelete
  2. We wish to thanks to the all parents who wish to co operate for this achievements,this is the begining please wait and see our progress in future....

    ReplyDelete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.