Thursday, September 12, 2013

சாலையில் தேங்கும் கழிவுநீரால் தொற்றுநோய் பரவும் அபாயம்!


கீழக்கரை நகரில் பல சாலைகளில் கழிவுநீர் நிரந்தரமாக தேங்கி நிற்பதால் தொற்றுநோய்கள் பரவும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
கீழக்கரையில் கழிவுநீர் கால்வாய்கள் பல பகுதிகளில் சிலாப் கொண்டு மூடப்படாமல் திறந்த நிலையில் உள்ளன. இதனால் கால்வாய்களில் குப்பைகளால் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் செல்ல வழியில்லாமல் தேங்கி நிற்கிறது. சாலை மட்டமும், கால்வாய் மட்டமும் சமமாக உள்ளதால் பல இடங்களில் கால்வாய்களில் இருந்து வெளியேறும் கழிவுநீர் சாலைகளில் தேங்கி நிற்கிறது.

சாலைகளில் நிரந்தரமாக கழிவுநீர் தேங்கி நிற்பதால், கொசு உற்பத்தி அதிகரித்து காய்ச்சல், மலேரியா, வயிற்றுப்போக்கு உள்ளிட்ட தொற்றுநோய்கள் பரவி வருகின்றன. 20வது வார்டு பகுதியில் சி.எஸ்.ஐ சர்ச், ஸ்கூல் பின்புறம் உள்ள சாலையில் ஏராளமான வீடுகள் உள்ளன.
இந்த சாலையில் கழிவுநீர் நிரந்தரமாக தேங்கி நிற்கிறது. இதனால் நோய் பரவும் அபாயம் உள்ளதாக இப்பகுதி மக்கள் நகராட்சி சுகாதார ஆய்வாளரிடம் பலமுறை புகார் செய்துள்ளனர். இருப்பினும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

சிஎஸ்ஐ சர்ச் பகுதியை சேர்ந்த அலெக்சாண்டர் கூறுகையில், �கால்வாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக வெளியேற வழியில்லாமல் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. பள்ளி மாணவ, மாணவிகள் கழிவுநீரில் நடந்து செல்ல வேண்டியுள்ளது. மேலும் கொசு உற்பத்தியும் அதிகரித்து வருகிறது.

இது குறித்து பலமுறை நகராட்சி சுகாதார ஆய்வாளரிடம் புகார் தெரிவித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சாலையில் தேங்கி நிற்கும் கழிவுநீரை அகற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்� என்றார்.  

3 comments:

 1. இது கீழக்கரை மக்களின் அறியாமை , விழிப்புணர்வு , ஒற்றுமை இன்மைய காட்டுகிறது,இது போன்று சுகாதாரம் கேடு இருக்கும் பொது அப்பகுதி பொது மக்கள் ஒன்று கூடி நகராட்சி நிர்வாகத்தை முற்றுகை இட வேண்டும் , தாங்களின் உரிமைகளை , அனைவரும் ஒன்று கூடி உரிமை குரல் கொடுத்து உரிமைனை பெற்று கொள்வதே சிறந்த ஆறிவு ,ஒன்று பட்டாள் உண்டு வாழ்வு ,
  இது போன்ற சுகாதார கேட்டினால் டெங்கு , மலேரியா , போன்ற நோய்கள் ஏற்படும், குழதைகள் , முதியவர்கள் ஊயிர் இழப்பும் ஏற்படலாம் , இன் நோய் அப்பகுதில் உள்ள மக்களுக்கு விரைவில் பரவகுடிய நோய்கள் ,
  இது போன்ற சுகாதாரம் கேட்டினால் மக்களுக்குத்தான் இழப்பு அதிகம் , எனவே அப்பகுதி பெண்கள் , உடனடியா நகராட்சிய முற்றுகையிட்டு போராடம் நடத்த வேண்டும் , சுகாதாரம் கேட்டினை சரி செய்ம் வரைம,
  கீழக்கரைஇல் நிறைய தொண்டு நிர்வாகம் , சங்கம் , மக்கள் நலம் அமைப்பு, அரசியல் கட்சிகள் உள்ளது இவைகள் எல்லாம் என்ன செய்து கொண்டு இருக்கிறது ? கண்ணை மூட்டி கொண்டு இருகிறதா ?

  ReplyDelete
 2. மங்காத்தாவின் தங்கச்சி மகன்September 12, 2013 at 7:06 PM

  இந்த செய்தி பொய்யுரையாகும்.இது போன்ற சுகாதார குறைபாடுகள் அறவே இல்லாதததினால் தானே இந்தியாவின் திட்டக் கமிஷனின் துணைத் தலைவர் மாண்டேக் அலுவாலியா அவரின் பிரத்தியோக உபயோகத்திற்காக இருந்த கழிவறையை ரூபாய் 35 லட்சம் செலவழித்து பராமரித்து நாட்டின் பொருளாதாரத்தை நிலை நிறுத்தியது போல நகராட்சியும் ஊரைச்சுற்றி ஒன்பது பொது கழிப்பிடங்களை பொது மக்களுக்காக 54 லட்ச செலவில் கட்ட டெண்டர் விட இருக்கிறார்கள்.

  துத்தேரி......

  ReplyDelete
 3. கீழக்கரை அலி பாட்சாSeptember 12, 2013 at 9:14 PM

  இது எல்லாம் எங்களுக்கு முக்கியமில்லை.படித்தவர்கள் எதையாவது சொல்லிக் கொண்டு இருங்கள். இப்போது எங்களுக்கு 54 லட்சம் செலவில் 9 பொது கழிப்பிடம் கட்டுவது தான் பிரதான முக்கியம். விஷ கொசுக்களை ஒழிக்க, உற்பத்திக்கு காரணமாக இருக்கும் வழிந்தோடும் வாறுகால் கழிவு நீர்களை மூடி போட்டு தடை செய்வது எல்லாம் எங்களுடைய வேலை இல்லை.நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள். வாறுகால் மூடி போட்டால் சில லட்சங்களைத் தான் பார்க்க முடியும். பொது கழிப்பிடம் கட்டினால் பல லட்சங்கள பார்ப்போம்ல!!!!

  ReplyDelete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.