Sunday, September 15, 2013

கீழக்கரை மஹ்தூமியா மற்றும் இஸ்லாமியா பள்ளிகளின் மாணவ,மாணவியர் சாதனை!

 
 
வட்டார விளையாட்டு போட்டிகளில் பழைய குத்பா பள்ளி ஜமாத் மஹ்தூமியா உயர்நிலைப் பள்ளி மாணவிகள் வெற்றி பெற்றுள்ளனர்.
 
இப்பள்ளியின் 9ம் வகுப்பு மாணவி முகமது அஸ்பியா செஸ் போட்டியில் மாவட்ட அளவில் 2ம் இடத்தை பிடித்தார். இதன் மூலம் இவர் மாநில போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.
 
10ம் வகுப்பு மாணவி செல்வப்பிரியா குண்டு எறிதல் மற்றும் தட்டு எறிதல் போட்டிகளில் முதலிடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளார். மாணவிகள் முகமது அஸ்பியா மற்றும் செல்வபிரியாவை பள்ளி தாளாளர் ஹமீது சுல்தான், தலைமை ஆசிரியர் கிருஷ்ணவேணி மற்றும் உடற்கல்வி ஆசிரியர் ஆனந்த் ஆகியோர் பாராட்டினர்.
 
பரமக்குடி கேஜே மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட அளவிலான செஸ் போட்டிகள் நடந்தன. இதில் 17 வயதிற்கு உட்பட்ட ஆடவர் போட்டியில் கீழக்கரை இஸ்லாமியா மெட்ரிக் பள்ளி மாணவர்கள் மாவட்ட அளவில் அசீம் ரஹ்மான் முதலிடத்தை பிடித்தார்.
 
இதே பள்ளி மாணவர் கோகுலநாதன் 2ம் இடத்தை பிடித்தார். மகளிர் 19 வயதிற்கு உட்பட்டோர் பிரிவில் இப்பள்ளி மாணவி சலோம் முதலிடத்தை பிடித்தார். ஆடவர் பிரிவில் செய்யது நபாய்தீன் 3ம் இடத்தை பிடித்தார். இவர்கள் அனைவரும் மண்டல போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.
மண்டல அளவில் மாணவர் ஜுபைர்கான் 100மீட்டர் ஒட்டம்  மற்றும் 200 மீட்டர் ஓட்டம் ,குண்டு எறிதல் உள்ளிட்டவைகளில் ஜூனியர் அளவில் முதலிடம் பெற்று சாம்பியன் பட்டம் வென்றார்.தொடர் ஓட்டத்திலும் வெற்றி பெற்றார்
 
சீனியர் பிரிவில் 100 மீட்டர் ஓட்டத்தில் மாணவர் முராபிக் 2மிடம் பெற்றார்.உயரம் தாண்டுதலில் செய்யது அஹமது 2ம் இடம் பெற்றார்
சூப்பர் சீனியர் பிர்வில் வட்டு எறிதலில் மாணவர் மதார் நெய்னா முதலிடமும்,குண்டு எறிதலில் மாணவர் ரசீன் அஹமது முதலிடமும் ,வட்டு எறிதலில் 2மிடமும் பெற்றார்.
 
வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளையும் பயிற்சி அளித்த ஆசிரியர்கள் சசிகுமார் மற்றும் ஜெயாவையும் பள்ளி தாளாளர் முகைதீன் இபுராகிம் மற்றும் முதல்வர் மேபல் ஜஸ்டஸ், நிர்வாக அலுவலர் மலைச்சாமி ஆகியோர் பாராட்டினர்
 
 

1 comment:

  1. கீழக்கரை அலி பாட்சாSeptember 15, 2013 at 11:33 PM

    மாணவச் செல்வங்களின் போட்டோக்களையும் பதிவு செய்திருந்தால் அவர்களும் அவர்களின் பெற்றோரும் சுற்றமும் எல்லையில்லா மகிழச்சியில் திளைத்திருப்பார்கள்.

    ReplyDelete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.