Tuesday, September 24, 2013

பேஸ்புக் மூலம் வேலை வாய்ப்புக்கு வழிகாட்டும் கீழக்கரை இளைஞர் !




பேஸ்புக் மூலம் வேலை வாய்ப்புக்கு வழிகாட்டும் பாரட்டுக்குறிய கீழக்கரை இளைஞர் !

இன்றைய உலகில் மக்களிடையே சமூக வலைதளங்கள் முக்கிய இடம் பிடித்துள்ளது.பேஸ்புக்,டிவிட்டர் போன்ற இத்தளங்களை ஒவ்வொருவரும் அவரவர் விருப்பத்திற்கேற்க உபயோகப்படுத்துகிறார்கள். இவர்களில் ஒரு பகுதியினர் மக்களுக்கு பயன் தரும் வகையில் இத்தளங்களை பயன் படுத்துகின்றனர்.
அவர்களில் ஒருவராக  ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையை சேர்ந்த எஸ்.கே.வி. சேக் என்ற இளைஞர் பேஸ்புக் தளத்தில் "கீழக்கரை கிளாஸிபைட்" என்ற பெயரில் https://www.facebook.com/KilakaraiClassified#!/kilakaraiclassifiedgroup பக்கத்தை உருவாக்கி உலகின் பல பகுதிகளில் கிடைக்கும வேலைவாய்ப்பு செய்திகளை இப்பக்கத்தில் அன்றாடம் தொகுத்து அளித்து வருகிறார்.ஆயிரக்கணக்கானோர் இப்பக்கத்தில் இணைந்துள்ளனர்.
 இதன் மூலம் வேலை தேடும் பலருக்கு பேருதவியாக இப்பக்கம் திகழ்கிறது.பலர் இப்பக்கத்தின் மூலம் செய்தி பெற்று வேலை வாய்ப்பை பெற்றுள்ளார்கள். எவ்விதமான சுய விளம்பரமுமின்றி இவர் செய்து வரும் பணியினை பலரும் பாராட்டுகின்றனர்

துபாயில் தனியார் வங்கி ஒன்றில் பணியாற்றி வரும் எஸ்.கே.வி.சேக் இது குறித்து கூறியதாவது,


பணி நேரம் முடிந்து கிடைக்கும் நேரத்தில் பயனுள்ள வகையில் ஏதாவது செய்ய வேண்டும் என்ற அடிப்படையில் இப்பக்கத்தை தொடங்கினேன்.இதன் மூலம் பலருக்கு உதவிகரமாக இருப்பது மனதுக்கு மகிழ்ச்சியாக உள்ளது.இதில் வெளியிட்டுள்ள வேலைவாய்ப்பு செய்தியை பார்த்து நேர்முக தேர்விற்கு சென்று செலெக்ட் ஆகி பணி கிடைத்தது என்று என்னிடம் சம்பந்தப்பட்டவர்கள்  தகவல் தரும் போது கிடைக்கும் சந்தோசத்திற்கு அளவிருக்காது.ஆயிரக்காணக்கானோர் இதை விட பல மடங்கு சேவை செய்து வருகிறார்கள்.நாங்கள் செய்து வருவது அதில் ஒரு துளிதான் என்றார்.

11 comments:

  1. பிரதிபலன் பாராமல் செய்யும் பணிக்கு இறைவனிடம் நிச்சயமான கூலி உண்டு. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. மிஸ்டர் எஸ்.கே.வி சேக் அவர்களின் பணி சிறக்க வாழ்த்துகிறேன்.இதன்மூலம் பலபேர் பயனடைவார்கள்.அதேபோல் இன்னும் சிலர் பயனடைய வாய்ப்புகள் இருக்கிறது,அவர்கள் யாரென்றால் இன்றைய கணினி யுகத்தில் எளிதாக மக்களை ஏமாற்றக்கூடிய நபர்கள் இணையதளத்தில் வலம்வருகிறார்கள்(scam job website) கனடாவில் வேலை,அமெரிக்காவில் வேலை,லண்டனில் வேலை என்று.இந்த நபர்கள் எளிமையாக ஈமெயிலில் நேர்முகத்தேர்வு என்று சொல்லிக்கொண்டு வேலை தருவதற்கு முன்பாக பணம்பறிக்க பார்ப்பார்கள்,எனவே சகோதரர் வேலைவாய்ப்பு செய்தியை தொகுத்து வழங்குபோது beware of scam job websiter என்று பொதுவாக போட்டுக்கொள்வது நல்லது

    ReplyDelete
  3. மிஸ்டர் எஸ்.கே.வி சேக் அவர்களின் பணி சிறக்க வாழ்த்துகிறேன்.இதன்மூலம் பலபேர் பயனடைவார்கள்.அதேபோல் இன்னும் சிலர் பயனடைய வாய்ப்புகள் இருக்கிறது,அவர்கள் யாரென்றால் இன்றைய கணினி யுகத்தில் எளிதாக மக்களை ஏமாற்றக்கூடிய நபர்கள் இணையதளத்தில் வலம்வருகிறார்கள்(scam job website) கனடாவில் வேலை,அமெரிக்காவில் வேலை,லண்டனில் வேலை என்று.இந்த நபர்கள் எளிமையாக ஈமெயிலில் நேர்முகத்தேர்வு என்று சொல்லிக்கொண்டு வேலை தருவதற்கு முன்பாக பணம்பறிக்க பார்ப்பார்கள்,எனவே சகோதரர் வேலைவாய்ப்பு செய்தியை தொகுத்து வழங்குபோது beware of scam job websiter என்று பொதுவாக போட்டுக்கொள்வது நல்லது

    ReplyDelete
  4. Congrats my dear brother and my wishes for you

    ReplyDelete
  5. ஹமீது ரஹ்மான்September 25, 2013 at 1:48 PM

    அருமை தம்பி ஷேக் அவர்களின் பணி சிறக்க என் மனங் கனிந்த வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. Thanks for Brother Hameed Yasin and Keelakarai Times Team.!

    ReplyDelete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.