Sunday, September 1, 2013

கீழக்கரை அருகே சிறுவனை வேலைக்கு அமர்த்தியவர் கைது!



சிறுவனை வேலைக்கு அமர்த்தியவரை போலீசார் கைது செய்தனர்.

கீழக்கரையை அடுத்துள்ள ஏர்வாடியில் குழந்தை தொழிலாளரை வேலைக்கு அமர்த்தி யிருப்பதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மயில் வாகனனுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரது உத்தரவின் பேரில் மனித வர்த் தக கடத்தல் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் ஜனார்த்த னன், சப்-இன்ஸ்பெக்டர்கள் அனிதா, சண்முகராஜேசுவ ரன் ஆகியோர் அங்கு விரைந்து சென்று அதிரடி சோதனை நடத்தினர்.
 அப்போது ஏர்வாடி மெயின்ரோடு பகுதி யில் உள்ள தனியார் ரத்த பரி சோதனை நிலையம் ஒன்றில் வேலைக்கு அமர்த்தப்பட்டி ருந்த கல்பார் பகுதியை சேர்ந்த தனிக்கொடி என்பவரது 13 வயது மகனை போலீசார் மீட்டனர்.

சிறுவனிடம் நடத்திய விசா ரணையில் தனது தந்தை தனிக்கொடிக்கு உடல் நிலை சரியில்லாமல் இருப்பதால் குடும்ப வறுமை காரணமாக சிறுவன் வேலைக்கு செல்வதா கவும், 7ம் வகுப்பு வரை படித்து விட்டு பாதியிலேயே வந்து விட்டதாகவும் தெரிவித்தான். இதனை தொடர்ந்து போலீசார் சிறு வனை மீட்டு குழந்தைகள் நலக்குழுமம் மூலம் காப்பகத் தில் சேர்த்தனர். மேலும் சிறு வனை வேலைக்கு அமர்த்திய ஏர்வாடி பகுதியை சேர்ந்த தாவூத் இபுராகீம் என்பவரது மகன் அகமது யாசின் (வயது 42) என்பவரை போலீசார் கைது செய்தனர.
குழ‌ந்தைக‌ள் ந‌ல‌த்துறை அதிகாரி ஒருவ‌ர் கூறுகையில்,

நாடு முழுவ‌தும் வீட்டு வேலைகள், உணவகங்கள், சாலையோர உணவகங்கள், கட்டுமானத் தொழில்,ஹோட்டல்கள், தங்கும் விடுதிகள், தேனீர்க் கடைகள் மற்றும் பிற இடங்களில் 14வயதுக்குட்பட்ட சிறுவர், சிறுமியரை வேலைக்கு அமர்த்துவது த‌டை செய்யப்ப‌ட்டுள்ளது

14
வயதுக்குட்பட்ட சிறுவர், சிறுமியரை வேலைக்கு அமர்த்துவது குற்றச் செயலாகும்.

இதுபோல 14 வயதுக்குட்பட்டவர்களை வேலைக்கு அமர்த்துவோர் மீதுசட்டப்படியான நடவடிக்கைக்கு உள்ளாவார்க‌ள்.
இந்தச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவோருக்கு ஒரு ஆண்டு சிறைத் தண்டனைஅல்லது ரூ.20,000 அபராதம் அல்லது இவை இரண்டும் சேர்த்து தண்டனைகிடைக்கும்.

 14
வயதுக்குட்பட்ட சிறுவர், சிறுமியரை வேலைக்கு அமர்த்துவதுசட்டப்படி குற்றம். அதுபோல செயல்படுபவர்கள் மீது 1986ம் ஆண்டு குழந்தைத்தொழிலாளர் (தடுத்தல் மற்றும் முறைப்படுத்தல்) சட்டத்தின் கீழ் ந‌ட‌வ‌டிக்கைக்கு உட்ப‌டுத்த‌ப்ப‌டுவார்க‌ள் என்றார்

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.