கீழக்கரை முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரியில்,மாநில தொழில் நுட்ப இயக்குனரகம் தேசிய சேவை திட்டம் சார்பில் மண்டல அளவிலான பாலிடெக்னிக் மாணவர்களுக்கான என்.எஸ்.எஸ்.,தின நிகழ்ச்சி நடைபெற்றது.
கல்லூரி இயக்குனர் ஹபீப் முகம்மது சதக்கத்துல்லா தலைமையில்,சென்னை முகம்மது சதக் மருத்துவக்கல்லூரி இயக்குனர் ஹமீது இபுராகிம் முன்னிலை வகித்தார். கல்லூரி முதல்வர் பேராசிரியர் அலாவுதீன் வரவேற்றார்.ராமநாதபுரம் எம்,எல்.ஏ., ஜவாஹிருல்லா என்.எஸ்.எஸ்.,சேவைகள் குறித்து பேசினார்.
ஆளுமை வளர்ச்சி,தலைமை பண்புகள் குறித்து நெல்லை மனிதவள ஆராய்ச்சி மேம்பாட்டு மைய நிறுவன இயக்குனர் எஸ்.மணியன், வேலை வாய்ப்பு திறன் குறித்து மைக்ரோ சிறு மற்றும் நடுத்தர வளர்ச்சி நிறுவன அலுவலர் தூத்துக்குடி ஜெயசெல்வம் பேசினர்.
முகம்மது சதக் இன்ஜினியரிங் கல்லூரி முதல்வர் முகம்மது ஜகாபர்,செய்யது ஹமீதா கலைக்கல்லூரி முதல்வர் அபுல்ஹசன் சாதலி,முகம்மது சதக் தஸ்தகீர் மெட்ரிக்., மேல்நிலைப்பள்ளி இயக்குநர் ஹூசைன் ஜலால் ஆகியோர் பங்கேற்றனர்.
மண்டல அளவில் 20 பாலிடெக்னிக் கல்லூரிகளை சேர்ந்த 100க்கும் அதிகமான மாணவர்கள் விழாவில் கலந்து கொண்டனர்.தனித்திறன் போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. திட்ட அலுவலர் வேல்முருகன் நன்றி கூறினார்.
No comments:
Post a Comment
செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.