Friday, September 13, 2013

கீழக்கரை அருகே எருது கட்டு விழா !


கீழக்கரை அருகே உள்ள காஞ்சிரங்குடி மேலவலசை ஸ்ரீ அய்யனார் கோயிலில் 253வது ஆண்டு எருது கட்டு விழா நடந்தது.

கோயில் நிர்வாகி கிழவன் தலைமை வகித்தார்.ஊர் தலைவர் பால்சாமி, காஞ்சிரங்குடி பக்கீர் அப்பா தர்ஹா கமிட்டி தலைவர் அன்வர், ஊராட்சி தலைவர் காளிமுத்து ஆதித்தன், ஒன்றிய கவுன்சிலர் சரண்யா நாகநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

இதில் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த 30க்கும் மேற்பட்ட காளைகள் களம் இறக்கப்பட்டன. 80க்கும் மேற்பட்ட வீரர்கள் காளைகளை பிடிக்க முயன்றனர்.


ஏற்பாடுகளை விழா ஒருங்கிணைப்பாளர் மதுரை வீரன் செய்திருந்தார். கீழக்கரை இன்ஸ்பெக்டர் கணேசன் தலைமையில் எஸ்.ஐ கோட்டைசாமி மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

1 comment:

  1. இதை வேற மக்கள் கூடி நின்னு வேடிக்கை பார்கிறது முட்டாள் ஜனகள் , ஒரு மாட்டை 10 அல்லது இருபது பேர்கள் சேர்த்து அடக்குவத வீரம் ? ஒரு மாடை ஒத்தைக்கு ஒத்தைய நின்னு அடக்கினாள் தெரியும் இவன் வீரம் என்னனு ,
    மாட்டை விரடுபவனை , இது போன்று மாடுகள் கூட்டத்தில் மாடுகள் அவனை விரட்டினால் அவனுக்கு எப்படி இருக்கும் ,
    வாய் இல்லாத ஜீவனை கொடுமை படுதுபவனை , மாடு மூட்டி சாக வேண்டும் ,

    ReplyDelete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.