ராமநாதபுரம் மாவட்டம்
கீழக்கரை சாலைதெரு பகுதியை சேர்ந்த மாணவர் முஹம்மது ஆகில் (15) இவர் சென்னை முத்தியால்பேட்டை பள்ளியில் பயின்று வருகிறார்..இவரது தந்தை நூஹ் இப்ராஹிம் ஆவார்.
உயரம் தாண்டுதல்
போட்டிகளில் ஆர்வமுடைய இவர் ஜீனியர் பிரிவிலான போட்டிகளில் மாநிலம் மற்றும் தேசிய அளவில்
பங்கேற்று உயரம் தாண்டும் போட்டிகளில் இளம் வயதிலேயே சாதனைகள் படைத்து வருகிறார்.
மாநில அளவிலான
போட்டிகளில் பெற்ற வெற்றிகள்
2012ம் ஆண்டில் கிருஸ்ணகிரியில் நடைபெற்ற போட்டிகளில்
தடகளத்தில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் பெற்றார்.
2012-2013ம் ஆண்டுகளில்
திருச்சியில் நடைபெற்ற தமிழ்நாடு அளவிலான விழா விளையாட்டு போட்டியில் உயரம் தாண்டுதலில்
1.78 மீட்டர் தாண்டி முதலிடம் பெற்றார்.
2013ம் ஆண்டு திருவண்ணாமலையில்
நடைபெற்ற 28வது ஜீனியர் அளவிலான போட்டியில் 1.98 மீட்டர் உயரம் தாண்டி சாதனை படைத்து
முதலிடம் பெற்றார்
2012ம் ஆண்டு கொச்சினில்
நடைபெற்ற ஜீனியர் தடகள போட்டியில் 2ம் இடம் பெற்றார்.1.83 மீட்டர் உயரம் தாண்டினார்.
2012ம் ஆண்டு புனேயில்
நடைபெற்ற போட்டியில் 3ம் இடம் பெற்றார்.1.83 மீட்டர் உயரம் தாண்டினார்.
2012ம் ஆண்டு லக்னோவில்
நடைபெற்ற போட்டியில் 3ம் இடம் பெற்றார்.1.88 மீட்டர் உயரம் தாண்டினார்.
2013ம் ஆண்டு மதுரையில்
நடைபெற்ற போட்டியில் 2ம் இடம் பெற்றார்.1.86 மீட்டர் உயரம் தாண்டினார்.
தொடர்ந்து பல்வேறு
போட்டிகளில் பங்கேற்று வெற்றிகளை குவித்து வரும் இம்மாணவரை பல்வேறு தரப்பினரும் பாராட்டி
உற்சாகப்படுத்தி வருகின்றனர்.
இன்னும் அதிகம்
சாதிக்க வேண்டும்.இறைவன் அருளாளும் பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள்,பயிற்சியாளர்கள் தரும்
ஊக்கத்தினால் என்னால் இதில் ஈடுபட முடிகிறது.உயரம் தாண்டுதலில் உலக அளவில் நம் நாட்டின்
சார்பில் பங்கேற்று வெற்றி பெற வேண்டும் என்பதே எனது ஆவல்.
உங்கள் பாராட்டுக்களை தெரிவிக்க... ஆகில் மொபைல் எண்.... +91 8015706804
அல்ஹம்துலில்லாஹ்! என் மண்ணின் மைந்தனின் சாதனை கண்டு உள்ளம் மகிழ்ந்தேன். அல்லாஹ் அவரின் எல்லா வெற்றிகளுக்கும் துணை நிற்பானாக! ஆமீன்.
ReplyDelete-ஜமீல் முஹம்மது பின் முஹைதீன் அப்துல் காதர்.
தம்பி முகம்மதுஆகில்.
ReplyDeleteவலிமை மிக்க உந்தன் சிறகுகளை விரித்து விட்டாய். உன் எண்ணம் ஈடேற்றம் அடைய வல்ல ரஹ்மான் கருணை புரிவானாக.ஆமீன்
தம்பி முகம்மதுஆகில்.
ReplyDeleteவலிமை மிக்க உந்தன் சிறகுகளை விரித்து விட்டாய். உன் எண்ணம் ஈடேற்றம் அடைய வல்ல ரஹ்மான் கருணை புரிவானாக.ஆமீன்