Thursday, September 5, 2013

பேச்சு போட்டி! தாசீம்பீவி அப்துல்காதர் மகளிர் கல்லூரி முதலிடம்!

old(file) picமாணவி பஹூஜத் குபுரா சாலிஹ் ஹுசைன்
 
 கீழக்கரை தாசீம்பீவி அப்துல்காதர் மகளிர் கல்லூரியில் நடந்த பேச்சுப்போட்டியில், மாணவி பஹூஜத் குபுரா முதலிடம் பெற்று மாநில போட்டிக்கு தகுதி பெற்றார். கோவை சாந்தலிங்க அடிகளார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும், கீழக்கரை தாசீம்பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரி சார்பில் மாவட்ட அளவிலான கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான பேச்சுப் போட்டி நடந்தது. கல்லூரி முதல்வர் சுமையா தலைமை வகித்தார்.
 
தமிழ்த்துறை தலைவர் அகிலா வரவேற்றார். 10 கல்லூரிகளை சேர்ந்த மாணவர்கள் பங்கேற்றனர். நடுவர்களாக பட்டிமன்ற பேச்சாளர் வாசு, ராமநாதபுரம் சேதுபதி அரசு கலை கல்லூரி பேராசிரியர் கிளிராஜ், தேவிபட்டினம் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ராஜகண்ணு இருந்தனர்.
 
தாசீம்பீவி அப்துல் காதர் கல்லூரி மாணவி பஹூஜத்து குபுரா முதலிடத்தையும், செய்யது ஹமீதா கலை கல்லூரி மாணவி உமா மகேஸ்வரி இரண்டாம் இடத்தையும் பெற்றனர். பேராசிரியர் எஸ்தர் நன்றி கூறினார்.

 

3 comments:

  1. என் அன்பு மனைவி, முதுகலை மாணவி 'பஹ்ஜத் குபுரா' அவர்கள் மென் மேலும் பல வெற்றிகள் பெற மனதார வாழ்த்துகிறேன்.

    வாழ்த்துக்களுடன் கீழை இளையவன்

    ReplyDelete
    Replies
    1. நமது ஊரில் பட்டம் படித்த பெண்கள் எண்ணிக்கை அதிகம் , அவர்கள் படித்த படிப்பின் மூலம் ஏதும் பயன் உண்ட ? என்றல் உண்மைகள் எந்த பயனும் இல்லை , அவர்கள் பெற்ற பட்டத்தின் மூலம் தமது குடும்பத்தில் உள்ள ஏழ்மை போக்கவோ , அல்லது அன்றாட வாழ்க்கைக்கு தேவையான பணத்தினை சமதிபதற்கோ வழி இன்றி விழி பிதிங்கி நிற்கின்றார்கள் , அவருகளுக்கு ஊரில் வருமனதைனை கிடைக்க கூடிய தொழில் வாய்ப்பு உள்ளதா? இல்லை கலுரிகளில் வெறும் படத்தினை சொல்லி கொடுபதற்க்கு பதில் கை தொழில் கற்று கொடுக்கலாம் , கல்லூரில் வெறும் பேச்சி போட்டி நடத்துவதற்கு பதில் மாணவிகளுக்கு , கல்வி படிப்பிற்கு பின் வருமானம் தரக்கூடிய வேலை வாய்ப்பு உருவக்கிகொடுக்கலாம் , மாணவிகளுக்கான ஆசிரியர் கல்வி பயிற்சி கல்லுரி திறப்பது பற்றி யோசிக்காலம் ,

      Delete
  2. நமது ஊரில் பட்டம் படித்த பெண்கள் எண்ணிக்கை அதிகம் , அவர்கள் படித்த படிப்பின் மூலம் ஏதும் பயன் உண்ட ? என்றல் உண்மைகள் எந்த பயனும் இல்லை , அவர்கள் பெற்ற பட்டத்தின் மூலம் தமது குடும்பத்தில் உள்ள ஏழ்மை போக்கவோ , அல்லது அன்றாட வாழ்க்கைக்கு தேவையான பணத்தினை சமதிபதற்கோ வழி இன்றி விழி பிதிங்கி நிற்கின்றார்கள் , அவருகளுக்கு ஊரில் வருமனதைனை கிடைக்க கூடிய தொழில் வாய்ப்பு உள்ளதா? இல்லை கலுரிகளில் வெறும் படத்தினை சொல்லி கொடுபதற்க்கு பதில் கை தொழில் கற்று கொடுக்கலாம் , கல்லூரில் வெறும் பேச்சி போட்டி நடத்துவதற்கு பதில் மாணவிகளுக்கு , கல்வி படிப்பிற்கு பின் வருமானம் தரக்கூடிய வேலை வாய்ப்பு உருவக்கிகொடுக்கலாம் , மாணவிகளுக்கான ஆசிரியர் கல்வி பயிற்சி கல்லுரி திறப்பது பற்றி யோசிக்காலம் ,

    ReplyDelete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.