Thursday, September 19, 2013

கீழக்கரை அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் நியமிக்க கோரி ஜவாஹிருல்லாஹ்.எம்.எல்.ஏ அமைச்சருடன் சந்திப்பு!


கீழக்கரை அரசு மருத்துவமனையில் அரசு மருத்துவர்கள் பற்றாக்குறையால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகிவ் வருகிறார்கள்.இது குறித்து நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடப்பட்டு இருந்தது.இது தொடர்பாக கீழக்கரைம்ஸ் உள்ளிட்ட பல்வேறு ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது.பார்க்க.... http://keelakaraitimes.blogspot.ae/2013/09/blog-post_9592.html

இந்நிலையில் கீழக்கரை அரசு மருத்துவமனையில் மருத்துவர்களை நியமிக்க அமைச்சரை நேரில் சந்தித்த ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் ஜவாஹிருல்லாஹ் வலியுறுத்தல்

இன்று சென்னை தலைமை செயலகத்தில்  மக்கள் நல வாழ்வு துறை அமைச்சர் கே சி வீரமணியை ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் பேரா எம் எச் ஜவாஹிருல்லாஹ் நேரில் சந்தித்து கீழக்கரை அரசு மருத்துவமனையில் மருத்துவர்களை நியமிக்க கோரி மனு அளித்தார் அதில் குறிப்பிட்டு உள்ளதாவது:

எனது இராமநாதபுரம் தொகுதிக்கு உட்பட்ட, கீழக்கரை அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் பற்றாக்குறையால் நோயாளிகள் பெரும் அவதிக்குள்ளாகிவருவதாக பொதுமக்கள் என்னிடம் புகார் தெரிவிக்கின்றனர். கீழக்கரை அரசு மருத்துவமனையில் 2 பெண் மருத்துவர்கள் உட்பட 6 மருத்துவர்கள் பணியில் இருந்து வந்தனர்.

தற்போது 3 மருத்துவர்கள் மட்டுமே இருப் பதால் நோயாளிகள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டியுள்ளதாகவும், கீழக்கரை அரசு மருத்துவமனையில் கீழக்கரை, மாயாகுளம், புல்லந்தை, முள்ளுவாடி, காஞ்சிரங்குடி, பாரதிநகர், மங்களேஸ்வரி நகர், திருப்புல்லாணி உட்பட ஏராளமான கிராமங்களிலிருந்து வெளிநோயாளிகளாக 500-க்கும் மேற்பட்டோர் தினமும் வந்து செல்வதாகவும், உள்நோயாளிகளாக 40 முதல் 60 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும், சர்க்கரை மற்றும் இருதய நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கு தனித்தனியே மருத்துவர்கள் இருந்ததாகவும், ஆனால் தற்போது குழந்தைகள் நல மருத்துவர்கள் இருவரும் பொது மருத்துவர் ஒருவர் மட்டுமே இருக்கின்றனர் எனவும் மேலும் புறநோயாளிகள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருப்பதால் நோயாளிகளில் சிலர் மயக்க நிலைக்கு தள்ளப் படுகின்றாதவும் தெரிவிக்கின்றனர்.

இது குறித்து பதிலளித்த அமைச்சர் உடனடியாக மருத்துவர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.