Monday, September 2, 2013

மயில் வேட்டை! 3 பேர் கைது !3 பேர் தப்பி ஓட்டம்!



 
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை வனச்சரகம் உத்திரகோசமங்கை உள்ளிட்ட அடர்ந்த காட்டுப்பகுதிகளில் இரை தேடும் மயில்களை சிலர் வேட்டையாடிச் செல்வதாக விருதுநகர் உதவி வனப்பாதுகாவலர் ஆனந்தக்குமாருக்கு தகவல் கிடைத்தது.  இதன் பேரில்  அவரது தலைமையில் வனவர் செல்லச்சாமி, வனக்காவலர்கள் வடமலையான், செந்தில்ராகவன் உள்ளிட்ட வன ஊழியர்கள் உத்திரகோசமங்கை பகுதியில் இன்று அதிகாலை 1.30 மணியளவில் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

. அங்கு கடலாடி அருகே வீரம்பலை சேர்ந்த சார்லஸ், 43, எகோவா, 32, கிருஸ்டோபர், 35, சகோயி, 30, சத்தியராஜ்,25, பிரதீஸ் குமார், 25 ஆகிய ஆறு பேர் கொண்ட கும்பல் மயில்களை வேட்டையாடி கொண்டிருந்தனர்.

இதில் கடைசி மூன்று பேர் தப்பித்து ஓட்டம் பிடித்தனர்.


இறகுகள் அறுக்கப்பட்டு நிலையில் இருந்த 10 மயில்களில் நான்கு மயில்கள் இறந்த நிலையில் கிடந்தது.மற்ற ஆறு மயில்களையும் கீழக்கரை கால்நடை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

வேட்டையாட பயன்படுத்திய ஹெட் லைட்,வலை,இரு சக்கர வாகனங்கள் மூன்று ஆகியவைகளை பறிமுதல் செய்து கீழக்கரை வன அலுவலர் ராஜேந்திரனிடம் ஒப்படைத்தனர்.வனத்துறையினர் நடத்திய விசாரணையில்,இறைச்சிக்காக மயில்களை வேட்டையாடி வருவதாகவும்,கிலோ 700 ரூபாய்க்கு விற்பனை செய்வதாகவும் தெரிவித்தனர்

 

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.