Thursday, September 19, 2013

சேது எக்ஸ்பிரஸ் என்ஜின் பழுது! வழியில் நிறுத்தப்பட்டு 2 1/2 மணி நேரம் தாமதம்!


மானாமதுரை அருகே சேது எக்ஸ்பிரஸ் ரெயில் என்ஜின் கோளாறு கார ணமாக நடுவழியில் நின் றது. இதனால் சுமார் மணி நேரம் தாமதம் ஏற்பட்டது.
சென்னையில் இருந்து நேற்று முன்தினம் மாலை 5 மணிக்கு சேது எக்ஸ்பிரஸ் ரெயில் ராமேசுவரத்துக்கு புறப்பட்டு வந்தது. இந்த ரெயில் நேற்று நள்ளிரவு 1.45 மணியளவில் மானாமதுரை வந்தடைந்தது. அங்கிருந்து 2.05 மணிக்கு கிளம்பிய ரெயில் சுமார் 2 கிலோ மீட் டர் தூரம் வந்த நிலையில் கீழப்பசலை ரெயில்வே கேட் பகுதியில் திடீரென என்ஜின் பழுது காரணமாக நடுவழியில் நிறுத்தும் சூழ்நிலை ஏற்ப்பட்டது..

என்ஜின் டிரைவர் பழுதை சரி செய்ய முயன்றும் சரி செய்ய முடியவில்லை. இதைத் தொடர்ந்து அவர் மானா மதுரை ரெயில் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். அதனை தொடர்ந்து சரக்கு ரெயிலின் என்ஜின் கொண்டு வரப்பட்டு சேது எக்ஸ்பிரஸ் ரெயில் பின்னோக்கி இழுத்து மானாமதுரை ரெயில் நிலை யத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.

கன்னியாகுமரியில் இருந்து ராமேசுவரத்துக்கு செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலும், கோவை யில் இருந்து ராமநாதபுரம் வந்த வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயிலுக்காகவும் வழிவிடுவ தற்காக சேது எக்ஸ்பிரஸ் மானாமதுரை ரெயில் நிலை யத்திலேயே நீண்ட நேரம் நிறுத்தி வைக்கப்பட்டது. பின்னர் மதுரையில் இருந்து மாற்று என்ஜின் கொண்டு வரப்பட்டு அதிகாலை 4.45 மணிக்கு மானாமதுரையில் இருந்து மீண்டும் சேது எக்ஸ் பிரஸ் கிளம்பியது.

ரெயில் என்ஜின் பழுது காரணமாக சுமார் மணி நேரம் தாமதமாக சேது எக்ஸ் பிரஸ் ரெயில் நேற்று காலை மணிக்கு ராமநாதபுரம் வந்தது. இதனால் பயணிகள் பெரும் அவதியடைந்தனர்

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.