கீழக்கரை ரோட்டரி
சங்கம் ,மஹம்மது பாலிடெக்னிக் ரோட்ராக்ட் சங்கம் மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை
இணைந்து நட த்திய சிறுநீரக முகாம் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
கல்லூரி முதல்வர்
அலாவுதீன் தலைமை வகித்து துவங்கி வைத்தார்.ரோட்டரி சங்க நிர்வாகிகள் செய்யது ராசிக்தீன்,சுப்ரமணியன்
,ஹசன் ,சுந்தரம் ,அஹம்து இப்ராஹிம் முன்னிலை வகித்தனர்.
இதில் சிறுநீரக
கற்களால் ஏற்படும் நோய்களுக்கு மருத்துவர்கள் முரளி,கிரண்,கான்முஹம்மது ஆகியோர் கலந்து
கொண்டு 48 பயனாளிகளுக்கு பரிசோதனையும் சிகிச்சையும் அளித்தனர்.
ஏற்பாடுகளை ஒருங்கினைப்பாளர்
பாலசுப்பிரமணியன் மற்றும் ரோட்ராக்ட் சங்க ஆலோசகர் மரியதாஸ் செய்திருந்தனர்
No comments:
Post a Comment
செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.