Thursday, September 26, 2013

ஹாக்கி போட்டி! கீழக்கரை முஹம்மது சதக் கல்லூரி சாம்பியன் பட்டம் வென்றது!

அண்ணா பல்கலை, 16வது மண்டல ஹாக்கி போட்டி ராமநாதபுரம் செய்யது அம்மாள் பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது.ஏராளமான கல்லூரிகள் பங்கேற்றது.
இறுதிப் போட்டியில், கீழக்கரை முகம்மது சதக் இன்ஜி., கல்லூரி அணி, மதுரை லதா மாதவன் இன்ஜி., கல்லூரி அணியும் விளையாடின. இதில் 5-4 என்ற கோல் கணக்கில், முகம்மது சதக் இன்ஜி., கல்லூரி அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றது
.விளையாட்டு வீரர்கள், உடற்கல்வி இயக்குனர்கள் சுரேஷ் குமார், கோவிந்தம்மாள் ஆகியோரை கல்லூரி தலைவர் யூசுப் சாகிப், இயக்குநர்கள் ஹபீப் முகம்மது சதக்கத்துல்லா, ஹூசைன் ஜலால், நூருல் தாபீஸ், நூருல் தாபிஸ்,முதல்வர் முகம்மது ஜகாபர் ஆகியோர் பாராட்டினர்.


No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.