Monday, September 2, 2013

கீழக்கரை அருகே ஏர்வாடியில் மழை வேண்டி சிறப்பு தொழுகை

 

தமிழகத்தில் கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை பொய்த்து போனதால் சுமார் 10க்கும் மேற்பட்ட மாவட்டங் களில் நிலத்தடி நீர் மட்டம் வரலாறு காணாத வகையில் குறைந்துள்ளதாக கண்டறியப் பட்டுள்ளது. இதில் ராமநாதபுரம் மாவட்டம் முக்கிய இடத்தை பெற்றுள்ளது குறிப் பிடத்தக்கது.
 
மாவட்டத்தில் நிலத்தடி நீர்மட் டம் வெகுவாக குறைந்து விட் டது. பொதுமக்கள் நீர் ஆதாரம் இல்லாமல் தவித்து வருகின்ற னர். போர்வெல் மற்றும் ஆழ் குழாய் கிணறுகளில் நிலத்தடி நீர் வற்றிப்போனதால் தூர்வா ரும் பணியில் பொதுமக்கள் ஈடுபட்டு வருகின்றனர். இது தவிர நீர் ஆதாரம் உள்ள பகு திகளை கண்டறிந்து புதிய போர்வெல் அமைக்கும் முயற் சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
    இந்தச் சூழ்நிலையில் தற்போது வடகிழக்குப் பருவ மழையை மக்கள் மிகவும் எதிர்பார்த்துள்ளனர். இந்த ஆண்டாவது நல்ல மழை பெய்ய வேண்டும் என ஏர்வாடி பகுதியில்   சிறப்பு தொழுகையும் மற்றும்  அனைத்து மதத்தினரும் கலந்து கொண்ட சிறப்புப் பிரார்த்தனை நடைபெற்றது. 
    
இதையொட்டி நடத்தப்பட்ட பேரணியை ஏர்வாடி தர்கா முன் பகுதியில் தர்கா ஹக்தார் நிர்வாக சபைத் தலைவர் அம்ஜத்உசேன், செயலாளர் சாதிக்பாரூக் ஆலிம், உதவித் தலைவர் செய்யதுசிராஜுதீன் ஆகியோர் தலைமை ஏற்று தொடங்கி வைத்தனர். இஸ்மாயில் ஆலிம் துஆ ஓதினார். இந்தப் பேரணி நகரின் (3கிலோ மீட்டர்|) முக்கிய வீதிகள் வழியாக சென்று பள்ளிவாசல் ஊருணி பகுதியை அடைந்தது.
 
  நீரின்றி வறண்டு காணப்பட்ட அந்த ஊருணியின் மையப் பகுதியில் நூற்றுக்கணக்கான ஆண்களும் பெண்களும் மழை வேண்டி சிறப்புத் தொழுகை நடத்தினர்..ஏராளமானோர் தொழுகையில் கலந்து கொண்டனர்.
 
ஆலிம் ஜகுபர் சாதிக் தலைமையில் சிறப்பு பிரார்த்தனையும் நடைபெற்றது .இதில் தர்ஹா ஹக்தார் கமிட்டி உறுப்பினர் அஜ்மல் ரஹ்மான்,மாலிக் லெவ்வை,சோட்டை லெவ்வை,இருளாண்டி,பக்கிரி,நாகராஜ்,ராசு உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
 
சமீபத்தில் கீழக்கரையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் மழை வேண்டி சிறப்பு தொழுகை நடைபெற்றது

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.