Friday, September 6, 2013

கீழக்கரை அருகே குடியிருப்பு பகுதியில் 6 அடி நீள செந்நாகம் பிடிபட்டது!

 
கீழக்கரையை அடுத்துள்ள சின்ன ஏர்வாடியில் நேற்று 6 அடி நீள செந்நாகம் பிடிபட்டது.
சின்ன ஏர்வாடியை சேர்ந்தவர் செல்வராஜ். வீட்டின் பின்புறம் உள்ள காலி இடத்தில் வீடு கட்டுவதற்காக செங்கல் லோடு இறக்கி வைத்துள்ளார். அடுக்கி வைக்கப்பட்ட செ ங்கல்களில் பாம்பு உள்ள தாக செல்வராஜ் வனச்சர கர் ஜெயராமனுக்கு தகவல் கொடுத்தார்.
வனவர் இன்னாசி முத்து, வனகாப்பாளர் முத்துமாரன், வேட்டை தடுப்பு காவலர்கள் மகேந்திரன், நாராயணன், ராமர்ராஜா ஆகியோர் நேற்று பல மணி நேர போராட்டத்திற்கு பின்னர் செங்கற்களுக்குள் மறைந்திருந்த 6 அடி நீள நாகப்பாம்பை உயிருடன் பிடித்தனர்.
இது செந்நாகம் வகை யை சேர்ந்த பாம்பு என வனத்துறை ஊழியர் கள் தெரிவித்தனர். பின்னர் திருப்புல் லாணி கோரைக் கோட்டம் சதுப்பு நில காட் டில் அந்த பாம்பை உயிரு டன் விட்டனர்

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.