கீழக்கரையில் (29/09 ஞாயிறு)மழை வேண்டி மஹ்தூமியா பள்ளி வளாகத்தில் தொழுகை!
ராமநாதபுரம் ,பணைக்குளம்,பரமக்குடி கீழக்கரை மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் மழை இன்றி கிணறுகள் வற்றி தண்ணீர் இன்றி சிரமப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இஸ்லாமியர் மழை வேண்டி சிறப்பு தொழுகையில் பங்கேற்றனர்.கீழக்கரையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் மழை தொழுகை நடைபெற்றது.
தற்போது பழைய குத்பா பள்ளி ஜமாத் சார்பில் வரும் ஞாயிறு காலை 8 மணி யளவில் மஹ்தூமியா பள்ளி வளாகத்தில் தொழுகை நடைபெற உள்ளது.அனைவரும் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.பெண்களுக்கு தனி இட வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது.
ரஹீமாகவும் ரஹ்மானாகவும் இருந்து அருள் மழை பொழியும் யா அல்லா, யா ரப்பே, ஏகனே, எங்கள் நாயனே
ReplyDeleteஆன்றோர்களும், சான்றோர்களும், தரும சீலர்களும் (கடந்த ரமலான் நிகழ்வுகளே சாடசி) நிறைந்து வாழும் வாழும் கீழக்கரையில் இன்ஷா அல்லா எதிர் வரும் ஞாயிறு காலையில் பழைய குத்பாப் பள்ளிதெரு மஹ்தூமியா பள்ளி வளாகத்தில் நடைபெற இருக்கும் மழைக்கான தொழுகையிலும், பிரார்த்தனையிலும் பங்கு கொள்ள ஆண்களும், பெண்களும் அணி அணியாக திரள இருக்கிறோம்.
அவ்வமையம் ஆதவனைக் கண்ட பனிமலை உருகுவது போல உள்ளம் உருக மழை வேண்டி இரு கரம் ஏந்தி இறைஞ்சுவோம். அதனை கபூல் செய்து எங்களை ரட்சிப்பாயாக. நீரின்றி நாங்கள் ப்டும் துயரங்களை (குறிப்பாக எங்கள் பெண் மக்கள்) படைத்த நீயே நன்கு அறிவாய். அதற்கு பரிகாரம் அளிப்பவன் நிச்சயமாக, திண்ணமாக நீ ஒருவன் மாத்திரமே.
உனை மறந்து, ரசூலே கரீம் சொன்ன மார்க்க வழி முறைகளை மனதளவில் அறிந்தும் எதிர்மறையாக செயல் படுபவர்களின் மீதுள்ள கோபத்தின் காரணமாக ஏனையோரை தண்டித்து விடாதே.அதனை தாங்கிக் கொள்ளும் சக்தி நிச்சயமாக எங்களுக்கு இல்லை.
நீயோ மன்னிப்பாளன். உனது ஹபீப் கண்மணி செய்யதினா முகம்மது நபி ஸல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்களின் உம்மத்கள் பாவ மன்னிப்பு கோருவதையும், தேவைகளை உன்னிடம் பொருப்பு சாட்டுவதையும் பெரிதும் விரும்புவன்.
1:5 إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينُ
1:5. (அல்லாஹ்வே!) நாங்கள் உன்னையே வணங்குகிறோம்; உன்னிடமே உதவி தேடுகிறோம்
1:6 اهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمَ
1:6. நீ எங்களை நேரான வழி யில் நடத்துவாயாக!
எங்கள் கண்ணீரை பன்னீராக மாற்றுவாயாக யா ரப்பில் ஆலமீனே. ஆமீன் ஆமீன் யாரப்பில் ஆலமீன்.
ஜமாஅத் தலைவர்களை ஜமாஅத்தை சேர்த்த 18 வயது நிரப்பிய அனைத்து ஆண் பெண்கள் ஓட்டு மூலமாக தேர்வு செய்ய வேண்டும் , ஒவ்வரு ஜமாத்தில் பெண்களுக்கு என தனி அமைப்பு உருவாக்க வேண்டும், அதின் தலைவர் ஒரு பெண்ணாக இருக்க வேண்டும் , ஜாமத்தின் அணைத்து கூட்டத்திலும் இந்த பெண்களின் அமைப்பை கலந்து கொள்வதற்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் , இதன் மூலம் பெண்கள் தங்களுக்கு ஏற்படும் கொடுமைகளை சுற்றி காட்டி தங்களின் உரிமைகளை பேணி கொள்ள முடியும் ,
ReplyDeleteஜாமத்தை சேர்த்த அணைத்து தெருவிலும் தெருமக்களால் ஜமாஅத் தலைவர் போட்டிக்கு 45 முதல் 60 வயது வரை ஒரு நபர் தேர்ந்து எடுத்து , அணைத்து தெருக்களிலும் தேர்ந்து எடுக்க பட்ட நபர்களை குழுக்கள் முறைகள் நான்கு நபர்களை தேர்ந்து எடுத்து இதில் ஒருவரை மக்களின் ஓட்டு முறைகள் படி ஒரு நபரை ஜமாஅத் தலைவர்களாக தேர்ந்து எடுக்க வேண்டும் , இதன் மூலம் ஒரு ஜமாத்தில் வேறு பாடு இன்றி அணைத்து தெரு நபர்கள் தலைவராகும் வாய்ப்பு கிடைக்கும் ,
பெண்களே உங்கள் ஜாமத்தை நோக்கி செல்லுகள் உரிமைகளை கேளுகள் ,அழ வேண்டாம் , கண்ணீர் சிந்த வேண்டாம், கொடுமைகளை அனுபவிக்க வேண்டாம் , இறைவனுக்கு பயந்து தனது கற்பை மட்டும் பேணி பாதுகாத்து கொள்ளவேண்டு, ஜமாஅத் தலைவர்களை ஜமாஅத்தை சேர்த்த 18 வயது நிரப்பிய அனைத்து ஆண் பெண்கள் ஓட்டு மூலமாக தேர்வு செய்ய வேண்டும் , ஒவ்வரு ஜமாத்தில் பெண்களுக்கு என தனி அமைப்பு உருவாக்க வேண்டும், அதின் தலைவர் ஒரு பெண்ணாக இருக்க வேண்டும் , ஜாமத்தின் அணைத்து கூட்டத்திலும் இந்த பெண்களின் அமைப்பை கலந்து கொள்வதற்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் , இதன் மூலம் பெண்கள் தங்களுக்கு ஏற்படும் கொடுமைகளை சுற்றி காட்டி தங்களின் உரிமைகளை பேணி கொள்ள முடியும் ,ஜமாத்தில் முடிவுகள் எடுப்பதில் பெண்களும் பங்குபெற வேண்டும் , பெண்களுக்கும் முவுகள் தீர்மானம்கள் எடுப்பதில் பங்கு பெற வாய்ப்புகள் (உரிமைகள் ) கொடுக்க பட வேண்டும் , இதன் மூலம் பெண்கள் சமுகத்தில் தங்களுக்கு ஏற்படும் கொடுமைகளில் இருந்து தங்களை பாதுகாத்து கொள்ள முடியும் ,
பல பெண்கள் குடிகாரன் கணவனாலும் , வேலைக்கு செல்லாத கணவனாலும் , போதிய வருமானம் இன்றி அல்லல் படுகிறார்கள் , ஜாமத்தில் தற்போது சரியான கூட்டமைப்பு இல்லாத காரணத்தினால் பெண்கள் புறகணிக்க படுகிறார்கள் , குடும்ப வழக்குகள் மலைகள் போன்று எல்லா ஜமாத்திலும் குவிந்து கிடக்கிறது தீர்ப்பு வழங்காமல் ,
கீழகரைல் அணைத்து பெண்கள் சேர்ந்து கீழக்கரை பெண்கள் நலன் அமைப்பு ஏற்படுத்தலாம் , இதன் மூலம் ஒரு பெண்ணை திருமணம் செய்து அந்த பெண்மூலம் குழந்தைகளை பெற்றும் குடும்பத்தை கவனிக்காமல் மது சூது விபசாரம் என்று திரியும் திமிர் பிடித்த ஆண்கள் எல்லாரையும் சூலுக்கு எடுக்க வேண்டும் ,
பெண்கள் தங்களுக்கு வேண்டிய உரிமைகளை இந்த அமைப்பு மூலம் உரிமை குரல் கொடுத்து , உரிமைகளை பெற்று கொள்ளலாம் ,
அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு
ReplyDeleteவல்ல ரஹ்மானின் சாந்தியும் சமாதானமும் குறைவின்றி நம் அனைவரும் மீது உண்டாவதாக, ஆமீன்.
இன்ஷா அல்லா விடியப் போகும் காலைப் பொழுது (29/09/2013 ஞாயிறு) நாம் அனைவரும் ஆவலுடன் எதிர் பார்த்திருக்கும் இனிய பொன்னான நேரம். மழை இன்மையால் ஏற்பட்டிருக்கும் துன்பத்திற்கு ஏக இறையோனிடம் பரிகாரம் தேடி தொழுது மன்றாட இருக்கும் அரிய சந்தர்ப்பம்.
அவ்வமையம் எனதருமை கீழ்க்கரை வாழ் இஸ்லாமிய சகோதர, சகோதரிகளே, இளைய சமுதாயமே, பழைய குத்பாப் பள்ளி தெரு மஹ்தூமியா பள்ளி வளாகத் திடலில் பழைய குத்பாப் பள்ளி ஜமாஅத் ஏற்பாட்டில் அனைத்து ஜமாஅத்தினரும் பங்கேற்க இருக்கும் மழைத் தொழுகையிலும் அதனை தொடர்ந்து கல்பு உருக கண்ணீர் மல்க படைத்த நாயனிடம் பொருப்பு சாட்டி பரிகாரம் கேட்கும் துவாவிலும் அலை அலையாக திரண்டு வந்து பங்கேற்க அன்புடன் வேண்டி விரும்பிக் கேட்டுக் கொள்கிறேன்.
குறிப்பாக பெண்மணிகளின் பங்கு அதிகம் அதிகமாக இருக்க வேண்டும் என்பது எனது தீராத ஆவல்.காரணம் வீட்டு கிணறுகளில் நீரின்மையால் படும் வேதனை, துன்பங்களால் அதிகம் பாதிப்புக்கு உள்ளாவது ஆண்களை விட பெண்களே என்பதை யாரும் மறுப்பதற்கில்லை.
வஸ்ஸலாம்.