Monday, September 9, 2013

கீழக்கரை குத்பா கமிட்டி தலைவர் தேர்வில் ஒற்றுமையை வலுப்படுத்தும் விதமாக செயல்பட கோரிக்கை!கீழக்கரை அனைத்து ஜமாத்தை உள்ளடக்கிய அனைத்து ஜமாத் கூட்டமைப்பான குத்பா கமிட்டி தலைவராக இருந்த சதக் டிரஸ்ட் தலைவர் எஸ்.எம்.ஹமீது அப்துல் காதர் மறைவையோட்டி புதிய தலைவர் தேர்வு நடைபெறுகிறது.அனைத்து ஜமாத் நிர்வாகிகள் கூடி தேர்வு செய்வர்கள்.இதற்கான  பொறுப்பாளர்களாக கீழக்கரை டவுன் காஜி காதர் பக்ஸ் ஹுசைன் உள்ளிட்ட 3 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.இது குறித்து கீழக்கரை இஸ்லாமியா பள்ளிகளின் தாளாளர் எம்.எம்.கே முஹைதீன் இப்ராஹிம் வெளியிட்டுள்ள செய்தியில்,
கீழக்கரை குத்பா கமிட்டி தலைவர் என்ற பணி மிகவும் பொறுப்புமிக்க பணியாகும். நவாப் என்ற கவுரவ பதவி தற்காலத்திலும் உண்டு அதுபோல் இல்லாமல் இப்பதவியின் மூலம் கீழக்கரைக்கு தேவையான பல  நலப்பணிகளை  செய்யமுடியும்.

மேலும் இத்தேர்வு என்பது வெளிப்படையாக இருக்க வேண்டும்.அந்தந்த ஜமாத் நிர்வாகிகள் தங்களது ஜமாத் பெருமக்களின் கருத்துக்களை கேட்டு ஒருவரை முன்னிறுத்தி பிறகு அனைத்து ஜமாத் நிர்வாகிகள் மட்டும் ஒன்று கூடி ஒருவரை தேர்ந்து எடுக்க வேண்டும்.மேலும் எப்போது தேர்தல் நடைபெறுகிறது என்பதையும்,யார் யார் போட்டியிட விரும்புகிறார்கள், எவ்வாறு என்பதையும்  வெளிப்படையாக மக்களுக்கு உரியவர்கள் அறிவிக்க வேண்டும்.

சுழற்சி முறையில் அனைத்து ஜமாத்தை சேர்ந்தவர்களுக்கும் வாய்ப்பளிக்க வேண்டும்.கீழக்கரை அனைத்து ஜமாத்களின் ஒற்றுமையை வலுப்படுத்தும் வகையில் தேர்வு அமைய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்,

 

இது குறித்து சமூக ஆர்வலரும் துபாய் அஸ்வான் அமைப்பின் நிர்வாகிகளில் ஒருவரான ராஜாக்கா கூறுகையில்,
 
 

ஒரு குத்பா”, என்ற நிலை என்று மாறியதோ அன்றே குத்பா கமிட்டி வீரியம் இழந்து விட்டது என்பதே என் கருத்து.


குத்பா கமிட்டியை பொருத்தவரை ஒற்றுமையாக எடுக்க வேண்டிய முடிவு...ஊரின் ஒற்றுமைக்கு முன் உதாரணமாக செயல்பட வேண்டிய செயல்பாடு..அதில் ஜனநாயகத்தை புகுத்தி தேர்தல் போன்ற நிலை வந்தால் அது கண்டிப்பாக ஊரின் நலத்திற்கு ஆரோக்கியமானதாக இருக்காது. எனவே ஊரின் நலனில் அக்கரை கொண்ட, செல்வாக்கு நிறைந்த, அனுபவம் வாய்ந்த ஒருவரை, அனைத்து ஜமாத்தினரும் ஒன்றிணைந்து ஒரு மனதாக தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதே என் பேராசை....

இவ்வாறு அவர் கூறினார்
பழைய குத்பா பள்ளி ஜமாத்தை சேர்ந்த முக்கிய பிரமுகரும் சமூக ஆர்வலருமான அலிபாட்சா கூறியதாவது,

இன்றைய கீழக்கரை நகரின் கொடுமையான அவல நிலை: நகரில் அனைத்து நிக்காஹ் வைபவங்களில் ஏழை, பணக்காரன் என்ற பாகுபாடு இல்லாமல், டவுன் காஜியின் அனுமதிப் பெற்று சம்பந்தப்பட்ட் ஜமாஅத்தின் ஆலீம்,பெண் வலியின் வக்கீலாக இருந்து நிக்காஹ் செய்து வைக்கப்படுகிறது.

துரதிஷ்டவசமாக நிக்காஹ் ஒப்பந்தத்தில் பிரச்சனை ஏற்படும் பட்சத்தில், சம்பந்தப்பட்ட ஜமாஅத் நிர்வாகம் ஒரு தலைப் பட்சமாக நடந்து கொள்ளும் பட்சத்தில் நியாயமான மார்க்க வழி தீர்ப்புக்காக யாரிடம் முறையிடுவது? ஊரில் என்னென்ன வாய்ப்புகள் உள்ளன? கீழக்கரையில் உள்ள ஐக்கிய ஜமாஅத் கூட்டமைப்பு தலைமை இல்லாததால் செயல் படாமல் இருக்கிறது.அதன் தலைவாராக இருந்த மர்ஹூம் அல்ஹாஜ் செ.மு. ஹமீது அப்துல் காதர் காக்கா அவர்கள் வபாத்தாகி மூன்று நாற்பது நாட்கள் கடந்து விட்ட நிலையில் புதிய தலைவர் நியமிக்கப்படவில்லை.

இராமநாதபுரத்தில் இயங்கிய ஷரியத் கவுன்ஸிலும் மர்ஹூம் அல்ஹாஜ் கே.எஸ்.எம். சாகுல் ஹமீது அவர்கள் மற்றும் ம்ர்ஹூம் அல்ஹாஜ் கே.வி.எம். மெஜஸ்டிக் கரீம் காக்கா அவர்களின் மறைவுக்கு பின் செயல் இழந்து விட்டது.

இதனால் பாதிக்கப்பட்டவர்கள் மாற்று மத வக்கீல் மற்றும் நீதி மன்ற வாசலை தட்ட வேண்டியது உள்ளது. இந்த அவல நிலைக்கு யார் பொறுப்பு ஏற்பது? சிவில் மற்றும் குற்றவியல் வழக்காக இருந்தால் இராமநாதபுர்ம்,மதுரை சென்னை என்று வழக்கை கொண்டு செல்லலாம். ஆனால் மார்க்க தீர்வுக்கு மார்க்கத்தில் வழி முறைகள் இருந்தும் அமைப்புகள் முறையாக செயல் பட தவறுவதால் பாதிக்கப்பட்டவர்களுக்கு யார் தீர்வு சொல்லுவது? அதிலும் பாதிக்கப்பட்டவர் ஏழ்மை நிலயில் இருந்தாலோ, ஆண் ஆதரவு அற்ற பெண்ணாக இருந்தாலோ அவர்கள் விடும் கண்ணீருக்கு யார் பதில் சொல்லுவது? இரு கையால் மண்ணை அள்ளி தூவி விட்டு படைத்தவனிடம் மன்றாடுவதை தவிர வேறு வழி?

இஸ்லாமிய மார்க்கம் இப்படி தான் வழியுறுத்தி உள்ளதா? அல்குரானிலும், ஹதிஸ்களிலும் நமக்கு வழி காட்டுதலே இல்லையா?

பெண் மககளுக்கு ரசூலே கரீம் ஸல்லலாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிகாட்டுதலில் கல்வி ஞானத்தை கொடுக்க முயற்சிக்கின்றோம். ஆனால் சில தருதலைகள் கல்வியை கற்பதை விட்டு விட்டு சீரிய சமுதாய அமைப்புக்கு தேவை இல்லாததை கற்றார்கள்.அதன் பரிமாண வளர்ச்சி இப்போது எதில் போய் நிறுத்தி உள்ளது? இன்று ஜாமாஅத்களில் ஏராளமான விவாஹ முறிவு வழக்குகள் கிடப்பில் உள்ளன. குறிப்பாக பெண் ஆணை வேண்டாம் என குலா கேட்கும் வழக்குகள் அதிகமாக உள்ளது.என்ன ஒரு காலத்தின் கோலம்? மார்க்கம் இதை தான் கற்று கொடுத்ததா?

குமர்களில் ஆண், பெண் பேதமில்லை. எந்த விவாஹ ஒப்பந்ததில் மார்க்க வழியில் இரு சாடசிகளை வைத்துக் கொண்டு பெண்ணின் முழு சம்மத்துடன் நிக்காஹ் செய்து வைக்கப்படுகிறது? மார்க்கத்ததை நமது வசதிக்கு ஏற்ப மாற்றிக் கொள்வதால் அல்லல் படுகிறோம். இதில் ஜமாஅத் நிர்வாகிகளின் பாரபட்சமான நிர்வாகச் சீர்கேடுகள். ஏக நாயன் நம் அனைவரையும் காத்து அருள் பாலிப்பானாக. ஆமீன்
இவ்வாறு அவர் கூறினார்

12 comments:

 1. ஜஹாங்கிர் ஆலிம் பெருந்தகை சொன்னது போல குத்பா கமிட்டி என்பதை மாற்றி அனைத்து ஜமாத் கூட்டமைப்பு என்று வைக்க வேண்டும்.
  கீழக்கரை பொது காரியங்களுக்கு அதிகமான சொத்துக்களையுர்ம் செல்வங்களையும் தந்தவர்கள் மேலத்தெரு மக்கள் அதனடிப்படையில் ஊரின் பொதுவான தலைமைக்கு வருவதற்கான வாய்ப்பை வழங்கலாம்.அதே நேரத்தில் அவர்கள் மற்ற ஜமாத்களுக்கும் வாய்ப்பு வழங்கி வழிகாட்டி நல்லதொரு முன்னுதாரணத்தை வழங்கினால் அல்லாஹ் அவர்களின் நன்மதிப்பை மேலும் உயர செய்வான்

  ReplyDelete
  Replies
  1. மேலத்தெரு மக்கள் மட்டுமே பொது காரியங்களுக்கு சொத்துக்களை வழங்கியது போன்றும் மற்ற தெரு மக்கள் எதுவும் செய்யாதது போன்ற தோறனையில் எழுதப்பட்டுள்ள இந்த கருத்து கண்டனத்துக்குறியது.

   Delete
  2. பணம் படைத்தவர்களின் கட்டு பாட்டுக்குள் உள்ளது ஜமாஅத் கிடையாது , மக்களின் கட்டு பாட்டுக்குள் இருபதுதான் ஜமாஅத் , பணம் படைத்தவர்கள் மட்டும் ஜமாஅத் நிர்வாகத்தில் தலை இட வேண்டும் என்பது முட்டாள்தனம் ,ஜமாஅத் நிர்வாகத்தில் அணைத்து தரப்பு மக்களும் பங்கு பெற வேண்டும் , வாய்ப்பு அள்ளிக்க வேண்டும் ,

   Delete
 2. கமிட்டிக்கு என்ன பெயர் வைப்பது என்பதை விட அதன் செயல்பாடுகள் என்ன என்பதே முக்கியம். என்னை பொருத்தமட்டில் இந்த கமிட்டி தலைவர் பதவி என்பது ஒரு கவுரவ பதவியாகவே இருந்து வந்துள்ளது, இனிமேலும் அப்படி தான் தொடரும் என நினைக்கிறேன். அதனால் தான் இப்பதவிக்கு செல்வந்தர்கள் வர சம்மதிக்கிறார்கள்! நாம் நமது வேலையை பார்ப்பது நல்லது என்று நினைக்கிறேன்.

  ReplyDelete
 3. கீழக்கரை அலி பாட்சாSeptember 10, 2013 at 6:50 PM

  அல் குர்ஆன் வசனம்: 9:18
  எவர்கள் அல்லாஹ்வையும் இறுதிநாளையும் நம்பிக்கை கொண்டு தொழுகையையும் கடைப்பிடித்து, ஜகாத்தும் கொடுத்து வருவதுடன், அல்லாஹ்வை அன்றி மற்றெவருக்கும் பயப்படாமலும் இருக்கிறார்களோ, அவர்கள்தான் அல்லாஹ்வுடைய பள்ளிகளைப் பராமரிக்கத் தகுதியுடையவர்கள். இத்தகையவர்கள்தாம் நேரான வழியில் இருப்பவர்கள்.

  9:18 إِنَّمَا يَعْمُرُ مَسَاجِدَ اللَّهِ مَنْ آمَنَ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ وَأَقَامَ الصَّلَاةَ وَآتَى الزَّكَاةَ وَلَمْ يَخْشَ إِلَّا اللَّهَ ۖ فَعَسَىٰ أُولَٰئِكَ أَن يَكُونُوا مِنَ الْمُهْتَدِينَ

  ReplyDelete
 4. கீழக்கரை அலி பாட்சாSeptember 10, 2013 at 9:25 PM

  இன்றைய கீழக்கரை நகரின் கொடுமையான அவல நிலை: நகரில் அனைத்து நிக்காஹ் வைபவங்களில் ஏழை, பணக்காரன் என்ற பாகுபாடு இல்லாமல், டவுன் காஜியின் அனுமதிப் பெற்று சம்பந்தப்பட்ட் ஜமாஅத்தின் ஆலீம்,பெண் வலியின் வக்கீலாக இருந்து நிக்காஹ் செய்து வைக்கப்படுகிறது.

  துரதிஷ்டவசமாக நிக்காஹ் ஒப்பந்தத்தில் பிரச்சனை ஏற்படும் பட்சத்தில், சம்பந்தப்பட்ட ஜமாஅத் நிர்வாகம் ஒரு தலைப் பட்சமாக நடந்து கொள்ளும் பட்சத்தில் நியாயமான மார்க்க வழி தீர்ப்புக்காக யாரிடம் முறையிடுவது? ஊரில் என்னென்ன வாய்ப்புகள் உள்ளன? கீழக்கரையில் உள்ள ஐக்கிய ஜமாஅத் கூட்டமைப்பு தலைமை இல்லாததால் செயல் படாமல் இருக்கிறது.அதன் தலைவாராக இருந்த மர்ஹூம் அல்ஹாஜ் செ.மு. ஹமீது அப்துல் காதர் காக்கா அவர்கள் ஷஹிதாகி மூன்று நாற்பது நாட்கள் கடந்து விட்ட நிலையில் புதிய தலைவர் நியமிக்கப்படவில்லை.

  இராமநாதபுரத்தில் இயங்கிய ஷரியத் கவுன்ஸிலும் மர்ஹூம் அல்ஹாஜ் கே.எஸ்.எம். சாகுல் ஹமீது அவர்கள் மற்றும் ம்ர்ஹூம் அல்ஹாஜ் கே.வி.எம். மெஜஸ்டிக் கரீம் காக்கா அவர்களின் மறைவுக்கு பின் செயல் இழந்து விட்டது.

  இதனால் பாதிக்கப்பட்டவர்கள் மாற்று மத வக்கீல் மற்றும் நீதி மன்ற வாசலை தட்ட வேண்டியது உள்ளது. இந்த அவல நிலைக்கு யார் பொறுப்பு ஏற்பது? சிவில் மற்றும் குற்றவியல் வழக்காக இருந்தால் இராமநாதபுர்ம்,மதுரை சென்னை என்று வழக்கை கொண்டு செல்லலாம். ஆனால் மார்க்க தீர்வுக்கு மார்க்கத்தில் வழி முறைகள் இருந்தும் அமைப்புகள் முறையாக செயல் பட தவறுவதால் பாதிக்கப்பட்டவர்களுக்கு யார் தீர்வு சொல்லுவது? அதிலும் பாதிக்கப்பட்டவர் ஏழ்மை நிலயில் இருந்தாலோ, ஆண் ஆதரவு அற்ற பெண்ணாக இருந்தாலோ அவர்கள் விடும் கண்ணீருக்கு யார் பதில் சொல்லுவது? இரு கையால் மண்ணை அள்ளி தூவி விட்டு படைத்தவனிடம் மன்றாடுவதை தவிர வேறு வழி?

  இஸ்லாமிய மார்க்கம் இப்படி தான் வழியுறுத்தி உள்ளதா? அல்குரானிலும், ஹதிஸ்களிலும் நமக்கு வழி காட்டுதலே இல்லையா?

  பெண் மககளுக்கு ரசூலே கரீம் ஸல்லலாஹு அலைஹி வ ஸல்லம் அவர்களின் வழிகாட்டுதலில் கல்வி ஞானத்தை கொடுக்க முயற்சிக்கின்றோம். ஆனால் சில தருதலைகள் கல்வியை கற்பதை விட்டு விட்டு சீரிய சமுதாய அமைப்புக்கு தேவை இல்லாததை கற்றார்கள்.அதன் பரிமாண வளர்ச்சி இப்போது எதில் போய் நிறுத்தி உள்ளது? இன்று ஜாமாஅத்களில் ஏராளமான விவாஹ முறிவு வழக்குகள் கிடப்பில் உள்ளன. குறிப்பாக பெண் ஆணை வேண்டாம் என குலா கேட்கும் வழக்குகள் அதிகமாக உள்ளது.என்ன ஒரு காலத்தின் கோலம்? மார்க்கம் இதை தான் கற்று கொடுத்ததா?

  குமர்களில் ஆண், பெண் பேதமில்லை. எந்த விவாஹ ஒப்பந்ததில் மார்க்க வழியில் இரு சாடசிகளை வைத்துக் கொண்டு பெண்ணின் முழு சம்மத்துடன் நிக்காஹ் செய்து வைக்கப்படுகிறது? மார்க்கத்ததை நமது வசதிக்கு ஏற்ப மாற்றிக் கொள்வதால் அல்லல் படுகிறோம். இதில் ஜமாஅத் நிர்வாகிகளின் பாரபட்சமான நிர்வாகச் சீர்கேடுகள். ஏக நாயன் நம் அனைவரையும் காத்து அருள் பாலிப்பானாக. ஆமீன்

  ReplyDelete
 5. அனைத்து ஜமாத் கூட்டமைப்பு பதவிக்கு போட்டியிடுபவர்கள் முதலில் அவர்கள் தெரு ஜமாத்தில் உறுப்பினராக இருக்க வேண்டும். அப்படி பார்த்தால் மேலத்தெருவில் ஜமாத் என்று கிடையாது, தெருவில் ஜமாத்தே இல்லாதவர்கள் எப்படி அனைத்து ஜமாத் கூட்டமைப்பில் சேர முடியும். வேண்டும் என்றால் அனைத்து சங்கங்கள் கூட்டமைப்பு ஆரம்பித்து அதற்க்கு தலைவர் ஆகலாம்.

  ReplyDelete
 6. கீழக்கரை அலி பாட்சாSeptember 12, 2013 at 8:13 PM

  ஊரில் கூடிய மட்டும் அனைத்து ஜமாஅத் அமைப்புகளிலும் ஜனநாயக அமைப்புக்கு மாறாக மார்க்க நெறி அறியாதவர்களின் அடவாடித்தனமான பொதுவாக குரல் ஓட்டு மூலம் நிர்வாகச் சபை தேர்ந்தெடுக்கப்படுகிறது. அதன் பின் மிகக் குறுகிய காலத்திலேயே நிர்வாகச்சபை செய்லிலந்து ஒன்று அல்லது இரண்டு பேரின் சுய அதிகாரத்தின் கீழ் இயங்குகிறது. கேட்டால் யாரும் செயல் கூட்டத்திற்கு வருவதில்லை. நாங்கள் என்ன செய்வது? பதவி காலம் வரை நிர்வாகச் சபை நடத்தி செல்ல வேண்டுமே?

  இத்னால் நாம் அறிவது என்னவென்றால் கற்றறிந்தவர்களும், மறுமை நாள், படைத்தவன் அச்சமின்றி உள்ளவர்களே பெரும்பாலோர் அல்லாவின் பள்ளி நிர்வாகத்தை ந்டத்திகின்றனர் என்பது கண்கூடு.

  இது இப்படி இருக்க,இத்தகைய அமைப்பிலிருந்து வருபவர்கள் தான் ஐக்கிய ஜமாஅத் கூட்டமைப்பு தலைமையையும் தேர்ந்தெடுக்க வேண்டிய தர்ம சங்கடமான தவிர்க்க முடியாத சூல்நிலை.ஆக, இங்கேயும் ஆதிக்கப் போட்டி.இந்த நிலையில் ஒற்றுமையுடன் தலைமையை தேர்ந்தெடுப்பார்கள் என எப்படி எதிர் பார்க்க முடியும்? அது தான் இப்போது நடந்து கொண்டிருக்கிறது. இதன் காரணமாகவே முன்னாள் தலைமை மரணித்து மூன்று மாதக் காலத்திற்கு மேலாகியும் தேர்ந்தெடுக்க முடியாத அவல நிலை. ஷரியத் கவுன்ஸிலுக்கும் இதே நிலைமை தான்.

  ஜமாஅத் அமைப்பு என்பது இஸ்லாமிய வாழ்வு நெறிமுறையில் ஒரு உன்னதமான அங்கம். ஆனால் ஊரில் கொச்சைப் படுத்திக் கொண்டிருக்கிறார்கள். ஒற்றுமையை பிரதானமாக வலியுறுத்துவது இஸ்லாம். ஆனால் இன்றைய நடைமுறையில் குறிப்பாக ஜமாஅத் நிர்வாகத் தேர்வில்.....அந்தோ பரிதாபம். இத்தகைய நிலை கெட்ட மனிதர்களிடமிருந்து நம்மை காத்தருள ஏக வல்ல ரப்பிடம் துவாச் செய்வோமாக.ஆமீன்.

  அல் குர்ஆன் வசனம்: 9:18
  எவர்கள் அல்லாஹ்வையும் இறுதிநாளையும் நம்பிக்கை கொண்டு தொழுகையையும் கடைப்பிடித்து, ஜகாத்தும் கொடுத்து வருவதுடன், அல்லாஹ்வை அன்றி மற்றெவருக்கும் பயப்படாமலும் இருக்கிறார்களோ, அவர்கள்தான் அல்லாஹ்வுடைய பள்ளிகளைப் பராமரிக்கத் தகுதியுடையவர்கள். இத்தகையவர்கள்தாம் நேரான வழியில் இருப்பவர்கள்.

  9:18 إِنَّمَا يَعْمُرُ مَسَاجِدَ اللَّهِ مَنْ آمَنَ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ وَأَقَامَ الصَّلَاةَ وَآتَى الزَّكَاةَ وَلَمْ يَخْشَ إِلَّا اللَّهَ ۖ فَعَسَىٰ أُولَٰئِكَ أَن يَكُونُوا مِنَ الْمُهْتَدِينَ

  மனம் இருந்தால் நிச்சயமாக மார்க்கம் உண்டு. மேற்கோள் காட்டிய இறை வசனத்தை மனதில் கொண்டு செயல்பட்டால் நிச்சயமாக வெற்றி நமதே.

  ReplyDelete
 7. ஜமாஅத் தலைவர்களை ஜமாஅத் சேர்த்த 18 வயது நிரம்பியவர்கள் அனைவரும் ஓட்டூ மூலம் வாக்களித்து தேர்தேடுபதே சரியான ஒரு முறையாக இருக்கும் , இதுதான் எதிகாலத்திற்க்கு ஆரோகியமான கூடாமைப்பு அமைவதற்கு நல்ல வழி ,
  இது போன்று பெண்களின் உரிமை பாதுகாப்புக்கும் , வன் கொடுமைகளில் இருந்து பெண்களை பாதுகாப்புக்கும்,ஜமாத்தில் பெண்கள் அமைப்பு ஏற்படுத்த வேண்ட்டும் ,

  ReplyDelete
 8. எ. அஹ்மத் யாசின் அவர்களே , செய்திகளுக்கு மக்களின் கருத்தகள் அனைத்தும் பிரசுதிக்க (கமெண்ட் இல் போட வேண்டும் ) யாரு மனது புண்படுகிறது என்பது முக்கியம் இல்லை மக்களின் கருத்து என்ன என்பது தான் முக்கியம் , நான் தங்களின் செய்திக்கு கஷ்டம் பட்டு பலமுறை சிந்தித்து கருத்து எழுதினால் சில கருத்துகளை கமென்ட் இல் போடுகிறிர்கள் , எது முக்கியமான கருத்துன்னு நான் நினைகிறானோ அக் கருத்தினை விட்டு விடுகிறிர்கள், இனி உங்கள் நியூஸ் க்கு கருத்து இல்
  எழுதுவதற்கு விருப்பம் இல்லை , தங்களின் நியூஸ் படிப்தற்கு பற்று குறைத்து விருப்பம் இல்லாமல் போய்விட்டது என்பதை வேதனை உடன் தெரிவித்து கொள்கிறேன் ,

  ReplyDelete
 9. அன்பான பெயர் கூற விரும்பாத
  உங்களின் கருத்துக்கு நன்றி!
  முன்னதாக உங்களின் அத்தனை கருத்துக்களும் வெளியிடப்பட்டுள்ளது.

  கீழக்கரையின் முக்கியமான பிரச்சனைகள் குறித்து கருத்துக்கள் எழுதும் போதும்,அமைப்புகளை குறிப்பிட்டு எழுதும் போது உங்கள் பெயரை வெளியிடுவது அவசியமாகிறது. வருத்தப்பட வேண்டாம்..நல்ல கருத்துக்களை எழுதும்போது பெயரில்லாமல் எழுதுவதால் அக்கருத்துக்களுக்கு வலிமை குறைந்து விடுகிறது.

  நல்ல கருத்துக்களை சொல்லும் போது நீங்கள் உங்கள் பெயரை வெளியிடலாமே? இது குறித்து கருத்து தெரிவிக்க விரும்பினால் உங்கள் தொடர்பு விபரங்களை hameedyas@gmail.com ஈமெயில் அனுப்பி தாருங்கள் .

  ReplyDelete
  Replies
  1. சும்மா கூட்டத்துல அதுவும் ஓடுற ஓட்டத்துல கூவிக்கொண்டு போகிற மாதிரி.... அது என்ன Anonymous என்கிற பெயரைத் தாங்கிக்கொண்டு..... கருத்துச் சொல்லவிரும்புகிறவர்கள் நான்தான்.... என்னோட பெயர் இதுதான் என்று தைரியமாச் சொல்லும்போதுதானே.... வாசிபவர்களுக்கும் ஒரு பிடிப்பு இருக்கும்.... Clarification என்று வரும்போது நம்ம கருத்தை எடுத்துச் சொல்வதில், இதன் காரணமாகத்தான் இப்படி சொன்னேன் / எழுதினேன் என்று சொல்லப்போறோம்.... எதில் என்ன யோசனை, எதுக்கு அட்ரெஸ் இல்லாத Anonymous.....

   Delete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.