Tuesday, September 3, 2013

கீழக்கரை நகராட்சி கூட்டம் !செய்தியாளர்களை புறக்கணித்தது ஏன்? நகராட்சி தலைவருக்கு துணை சேர்மன் கடும் கண்டனம்!


நகராட்சி துணை தலைவர் ஹாஜா முஹைதீன் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது,

ஒவ்வொரு முறையும் கீழக்கரை நகராட்சி கூட்டம் நடைபெறும் போது வழக்கமாக செய்தியாளர்களுக்கு கூட்டம் தொடர்பான அஜெண்டா நகராட்சி நிர்வாகம் மூலம் அனுப்ப்பட்டு செய்தியாளர்கள் கூட்டத்தில் பங்கேற்று செய்தி சேகரிப்பார்கள்.

ஆனால் இம்முறை ஜனநாயகத்தின் நான்காவது தூண் என்று அழைக்கப்படும் பத்திரிக்கைகளுக்கு செய்தி சேகரிக்க அனுமதி அளிக் மறுக்கும் விதமாக பத்திரிக்கையாளர்களுக்கு கூட்டம் தொடர்பான அஜென்டா மற்றும் அழைப்பு விபரம் அனுப்படவில்லை.இதனால் பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தில் கலந்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டு  கூட்டம் தொடர்பான நிகழ்வுகளை கீழக்கரை மக்கள் அறிந்து கொள்ள முடியாமல் ஆகி விட்ட்து.

இது குறித்து நகராட்சி தலைவரிடம் ராவியத்துல் காதரியாவிடம் நான் கேட்ட போது ஒரு தலை பட்சமாக செய்தி வெளியிடுகிறார்கள் அதனால் அனுப்பவில்லை  அடுத்த கூட்டத்திற்கு வேண்டுமானால் அனுப்பலாம் என்கிறார்.

இது முற்றிலும் தவறான அணுகுமுறை.செய்தியாளர்கள் தவறுகளை சுட்டிகாட்ட்த்தான் செய்வார்கள்..தலைமை பொறுப்பில் உள்ளவர் சகிப்பு தன்மையுடன் தவறுகள் இருப்பின் சீர்  செய்து மக்கள் பணியாற்ற வேண்டும்  இது குறித்து எனது கண்டனத்தை தெரிவித்து கொள்கிறேன் என்றார்


இது குறித்து  கவுன்சிலர் முஹைதீன் இப்ராஹிம் கூறுகையில்,

இது தொடர்பாக கூட்டம் நடைபெறும் போது பத்திரிக்கையாளர்களை அழைக்காததற்கு கண்டித்து கவுன்சிலர்கள் ஜெயபிரகாஷ்,சாஹீல் ஹமீது உள்ளிட்ட கவுன்சிலர்கள்  குரல் எழுப்பினோம்.

செய்தியாளர்களை புறக்கணித்தால் கூட்டத்தில் என்னென்ன திட்டங்கள் வைக்கப்பட்டன.எவ்வளவு தொகைக்கான ,தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன என்பதையெல்லாம் மக்கள் எப்படி தெரிந்து கொள்வார்கள்.
இது நகராட்சி தலைவரின் ஜனநாயக விரோத போக்கை காட்டுகிறது.தமிழகத்தில் எங்கும் இதுபோல்  நடைபெற்றிருக்க வாய்ப்பில்லை..

இதற்கு முன் பேரூராட்சியாக,நகராட்சியாக இருந்த போது எத்தனையோ பெரியவர்கள் தலைவர்களாக இருந்துள்ளார்கள் அவர்களின் நிர்வாகங்களில் குறைகள் நடைபெறும் போது பத்திரிக்கைகள் குறை கூறி எழுதியுள்ளார்கள் ஆனால் யாரும் இது போன்று செய்ததில்லை.பதவியில் இருப்பவர்களுக்கு பணிவும்,சகிப்புதன்மையும் அவசியம்.
பகிரங்கமாக நடைபெறும் கூட்ட நிகழ்வுகளை மக்களுக்கு இருட்டடிப்பு செய்யும் நோக்கத்தில் நடைபெற்றுள் இச்செயலால் கீழக்கரை நகர மக்களுக்கு நகராட்சி தலைவர் மீது நம்பிக்கையின்மையும்,சந்தேகத்தையும் அதிகப்படுத்தியுள்ளது.

ஜனநாயக நெறிமுறையின் கழுத்தை நெறிக்கும் செயலாகும்.இச்செயலை செய்த நகராட்சி தலைவர்  மற்றும் துணை போன கமிஷனர் மீது தமிழக முதல்வர் நடவடிக்கை எடுத்து ஜனநாயகத்தை நிலைநாட்ட வேண்டும். என்றார்,

 

4 comments:

  1. மக்களிடம் தகவல்களை எடுத்து செல்லும் செய்தியாளரை தடுப்பது என்பது ஜன நாயகத்தை மீறும் செயலாகும் , இதனை வன்மையாக கண்டிக்கப்பட வேண்டியது , நகரட்சில் நடக்கும் அனைத்து நகர் மன்றம் கூட்டம் நிகழ்ச்சி லோக்கல் டிவி மூலம் ஒலிபரப வேண்டும் , kilakarail முக்கிய பகுதிகளில் நகராட்சி மூலம் மக்கள் கருத்து சேகரிப்பு பாக்ஸ் வைத்து அதில் விவாகம் நடத்த வேண்டும் ,

    ReplyDelete
  2. MLA கீழக்கரைஇல் ஆய்உ செய்யம் பொது எல்லாம் அது செய்வேன் இது செய்வேன் என்று சொல்வது வெறும் வாய் சாவட மட்டும் தான் அனால் ஒன்னும் நல்லது நடக்காது மக்களுக்கு ,

    1,மக்கள் வசிக்ககுடிய பகுதில் குப்பைகள் கொட்டபடுகிறது இது காலம் காலமாக நடக்கிறது,இதனால் பல நோய்கள் பரவுகிறது, இதற்க்கு ஏரியா MLA என்ற விதத்தில் வேறு வழி கண்டரா , நம்ம MLA?
    2,கீழக்கரை இல் தனி தாலுக்க அக்கபோறேன் சொன்னார் , இப்ப தனி தாலுக்க ஆபீஸ் என்ன ஆச்சு ?
    3,கீழகரைல் அணைத்து பகுதியும் குறிகிய பாதையாக இருக்கின்றது ,வாகனம் செல்லுவதற்கு மிக அதிகமான இடையுறு ஏற்படுகிறது, இதற்க்கு ஏதும் தீர்வு கண்டரா நாம் MLA ?
    4,கீழகரைல் சுற்று பரப்பு பெரிதாகி விட்டது (ஊரு பெரிதாகி விட்டது , மக்கள் தொகையும் அதிகமாகி விட்டது ) மக்கள் முக்கியமான பகுதிக்கு சென்று வர,மார்க்கெட் ,மீன் மார்க்கெட், போலீஸ் ஸ்டேஷன் , பேங்க் ,போஸ்ட் ஆபீஸ் , HOSPITAL,கடல்கரை ,ஸ்கூல்,காலேஜ் ,மசூதி,கோவில் ,சர்ச் ,ஆகிய பகுதிக்கு செல்ல,மினி பஸ் உண்ட ?அதற்கும் ஏதும் வழி கண்டரா MLA?
    5,கீழகரைல் டிகிரி படித்த பெண்கள் அதிகம் ,படித்த பெண்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்த ஏதும் நடவடிக்கை எடுத்தாரா MLA? ஒரு டீச்சர் ட்ரைனிங் காலேஜ் ஓபன் செய்வதற்கு குரல் கொடுத்தாரா நமது MLA?
    6,நமது ஊரில் உள்ள இளைய தலை முறைனர் எத்தனை நபருக்கு தொழில் வாய்ப்பு உதவி செயதார்?, அரசிடம் இருந்து தொழில் வாய்ப்பு பெட்று கொடுத்தாரா MLA?
    7,கீழகரைல் தொழ்லில் வளர்ச்சிக்கு என்ன நடவடிக்கை எடுத்தார் ? என்ன சாதித்தார் MLA?
    ஆயுஉ செய்கிறேன் ஆயு உ செய்கிறேன் என்று ஏன் வீண் பந்தா? நமது MLA க்கு ,ஏதும் சாதிக்க போவதில்லை என்பது மட்டும் நல்லா புரிகிறது கீழக்கரை மக்களுக்கும் , அவருக்கும் ,

    ReplyDelete
  3. கீழகரைல் மெயின் ரோடு மிக குறிகிய பாதையாக இருப்பதால் ,முக்கு ரோட்டில் இருந்து பைத்துல்மால் வழியாக கடல்கரை வரைம ரோடினை விரிவு படுத்த வேண்டும், இப்பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றுவதோடு ,மெயின் ரோட்டில் வாகனம் செல்வதற்கு இடையுறாக இருக்கும் பிரவைட் பில்டிங் வீடு , வெட்று இடத்தினை நகராட்சி கையகம் படுத்தி , முக்கு ரோட்டில் இருத்து கடல் கரை வரையும் உள்ள பாதை இருவழி பாதையாக மற்ற வேண்ட்டும் ,மற்றும் மெயின் ரோட்டில் இருந்து முஸ்லிம் பஜ்சர் வழியாக அப்பா பள்ளி மற்றும் க்ஹைரதுள் ஜலாலிய ஸ்கூல் வரைம பாதைகளை விரிவு படுத்த வேண்டும் , மெயின் ரோடில் இருத்து புதிய பஸ் ஸ்டாண்ட் செல்லும் பாதை மிக குறிகிய பாதையாக இருப்பதால் அப்பகுதில் உள்ள பில்டிங் அரசு கையகம் படுத்துவதை தவிர வேறு வழி இல்லை ,
    கீழகரைல் முக்கிய பாதைகளை விரிவு படுத்துவதோடு , பள்ளி , கல்லுரி , போலீஸ் ஸ்டேஷன் , அரசு மருத்துவமனை , டெலிபோன் ஆபீஸ் , மசூதி , கோவில் , சர்ச்சு, கடல்கரை , மீன் மார்க்கெட், மற்றும் அருகில் உள்ள கிராம மக்கள் வந்து செல்வதற்கு வசதியாகவும் மினி பஸ் அதிகம் அளவில் இயக்க வேண்டும் , மற்றும் 500 பிளாட் , புது கிழக்கு தெரு , மீனாட்சி புறம் , பழைய குத்பபள்ளி , புதிய பேருந்து நிலையம் , பழைய பேருந்து நிலையம் ஆக்கிபகுதிகளை மினி பஸ் செல்லும் பாதையாக மாற்றி தர வேண்டும் ,இந்து பஜ்சர் மிக குறிகிய பாதையாக இருபதாலும் , பல வருடம் கடந்த பில்டிங்கும் மக இருப்பதால் , மார்கெட்டை அப்பகுதில் இருந்து வேறு ஓரு பகுதிக்கு மற்ற வேண்டும் ,

    ReplyDelete
  4. விண்ணப்பித்த அறுபது நாள்களுக்குள் புதிய குடும்ப அட்டை வழங்கப்படும்’ என கடந்த தி.மு.க. ஆட்சியின்போது அறிவிக்கப்பட்டது. ஆனால் துல்லியமாக இரண்டு மாதங்களுக்குள் வழங்கப்படவில்லை என்றாலும், சில மாதங்கள் கழித்தாவது, விண்ணப்பித்த தகுதியுள்ள அனைவருக்கும் புதிய அட்டைகள் கிடைத்துவந்தன. இதனால் புதுமணத் தம்பதிகள் – குறிப்பாக ஏழைகள் – நிம்மதியடைந்தனர். இப்போதும் அதே நிலையாவது நீடிக்கும் என எதிர்பார்த்திருந்தோருக்கு புதிய ஆட்சியில் புதிய குடும்ப அட்டை வழங்கும் விஷயத்தில் மட்டும் மிகுந்த ஏமாற்றமே கிடைத்துவருகிறது. குடும்ப அட்டைகள் வைத்திருப்போருக்கு ரேஷன் பொருள்கள், விலையில்லா மின்விசிறி, மிக்ஸி, கிரைண்டர் தொடங்கி பல்வேறு சலுகைகள் இந்த ஆட்சியில் அள்ளி வழங்கப்படுகின்றன. ஆனால் அவற்றில் ஒன்றைக்கூடப் பெறமுடியாத உச்சபட்ச சோகத்தில் உள்ளனர், புதிய குடும்ப அட்டை கேட்டு விண்ணப்பித்துக் காத்திருப்பவர்கள். அதிமுக அரசு பதவியேற்றதிலிருந்து சில மாதங்கள் வரை புதிய அட்டைகள் வழங்கப்பட்டு வந்தன. ஆனால், 2011-ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்துக்குப் பின்னர் புதிய அட்டைகள் வழங்கப்படவில்லை. மாநிலம் முழுவதும் இதே நிலைதான் நீடிக்கிறது. குடும்ப அட்டைகளில் பெயர்கள் நீக்கம் செய்தல், சேர்த்தல் போன்ற பணிகள் தொடர்ந்து தடையின்றி நடைபெற்று வருகின்றன. இப்போது அறிவிக்கப்பட்டுள்ள “அம்மா திட்டத்தின்’ மூலமும் அந்தப் பணி செவ்வனே செயல்படுத்தப்படுகிறது. ஆனால் புதிய அட்டைகள் வழங்குவது தொடர்பாக அறிவிப்புகள் ஏதும் வெளியாகவில்லை. இதனால், 2012 ஜனவரி மாதம் தொடங்கி இந்த ஒன்றரை ஆண்டுகளாக விண்ணப்பித்துக் காத்திருப்போரும், விண்ணப்பிப்போரும் மாவட்ட, வட்ட வழங்கல் அலுவலகங்களுக்கு அலைந்து திரிவதுதான் மிச்சம். புதிய அட்டை கோரி விண்ணப்பித்து, சில மாதங்கள் கழிந்த பின்பும் வழங்கப்படாததால் பொறுமையிழந்த, மதுரையைச் சேர்ந்த இளைஞர், வழக்குத் தொடர்ந்து நீதிமன்றம் மூலம் குடும்ப அட்டை பெற்றுள்ளார். வட்ட வழங்கல் அலுவலகத்தில் முறையான ஆவணங்களுடன் விண்ணப்பிக்கும் ஒருவர் எந்தவித பதிலும் வீட்டுக்கு வரவில்லையே என 60 நாள்களையும் தாண்டிக் காத்திருந்து, சென்று விசாரித்தால் ஆவணங்களைச் சரிபார்த்து மாவட்ட வழங்கல் அலுவலகத்துக்கு அனுப்பிவிட்டதாகக் கூறுகின்றனர், அங்குள்ள அலுவலர்கள். மாவட்ட வழங்கல் அலுவலகத்துக்குச் சென்று விசாரித்தாலோ, “வரும்…வரும்’ என்ற பதிலே எப்போதும் கிடைக்கிறது. இல்லையெனில் “மொத்தமாக அச்சிடக் கொடுக்கப்பட்டுள்ளதாகவும், பணி முடிந்ததும் வீட்டுக்கு பதில் வரும்’ என்றும் வழக்கமான பதிலே கிடைக்கிறது. நிகழாண்டு ஜனவரியிலோ, “குடும்ப அட்டைகளைப் புதுப்பிக்க உள் தாள்கள் ஒட்டும் பணி நடைபெறுவதால் புதிய அட்டைகள் வழங்கும் பணி நிறுத்தப்பட்டுள்ளதாகக்’ கூறப்பட்டது. உள் தாள்கள் ஒட்டும் பணி முடிந்தும் ஒன்றரை மாதங்கள் கடந்துவிட்டன. இப்போதும் அந்த விண்ணப்பங்களின் நிலை “கிணற்றில் இட்ட கல்தான்!’ தமிழகம் முழுவதும் “ஆதார்’ அட்டை திட்டத்துக்கு புகைப்படம் எடுக்கும் பணி பரவலாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதில் பெயர் சேர்க்க வேண்டுமானால், மக்கள்தொகைக் கணக்கெடுப்பு ரசீதுடன் குடும்ப அட்டையும் அவசியம் என வலியுறுத்தப்படுகிறது. குடும்ப அட்டை இல்லாமல் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு ரசீது மட்டும் இருந்தால் அவர்கள் “ஆதார்’ அட்டை திட்டத்தில் புகைப்படம் எடுத்துக்கொள்ள அனுமதிக்கப்படுவதில்லை. இதனால் குடும்ப அட்டை கோரி விண்ணப்பித்திருப்போர் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளனர் என்பதை மறு(றை)ப்பதற்கில்லை. சொந்த வீட்டில் குடியிருப்போருக்கு முகவரி மாற்றம் இல்லாததால் விண்ணப்பித்துவிட்டு எத்தனை ஆண்டுகள் வேண்டுமானாலும் காத்திருக்கலாம். ஆனால் வாடகை வீடுகளில் வசிக்கும் ஏழைகள் புதிய அட்டை கோரி விண்ணப்பித்துவிட்டு, வட்டம் விட்டு வட்டமோ, மாவட்டம் விட்டு மாவட்டமோ மாறிச் சென்றிருந்தால் அவர்களின் நிலை? அவர்களின் பெயர் நீக்கச் சான்றிதழ்களின் கதி? விண்ணப்பித்த பெரும்பாலான (அப்போதைய) புதுமணத் தம்பதிகள் இப்போது இரண்டு ஆண்டுகளைக் கடந்து பெற்றோர்களாக மாறியிருக்கலாம். புதிய குடும்ப அட்டைகள் கிடைத்தால்தான் தங்கள் குடும்பத்தின் புதிய உறுப்பினர்களையும் அதில் பதிந்துகொள்ள ஏதுவாக இருக்கும். தமிழகத்தில் 1,95,90,377 ரேஷன் அட்டைகள் உள்ளன. இவற்றில் 1,93,90,357 அட்டைகள் 2013-ம் ஆண்டில் புதுப்பிக்கப்பட்டுள்ளன. 1.6.2011 முதல் 28.2.2013 வரை 1,51,137 போலி அட்டைகள் நீக்கப்பட்டுள்ளன . வாழ்க்கையை புதுமணத் தம்பதிகள் எத்தனை உற்சாகமாகத் தொடங்கினாலும் குடும்ப அட்டைகளில் தங்கள் பெயர்கள் பதிவாவதன் மூலமே “குடும்பத் தலைவன்-தலைவி’ என்ற வாழ்வின் மற்றொரு பரிமாண நிலையை அடைகின்றனர். வங்கிக் கணக்கு, சான்றிதழ்கள், உதவித்தொகைகள், நலத்திட்டங்கள் என அனைத்துக்கும் குடும்ப அட்டைகள் அத்தியாவசியம் என்பதால் புதிய குடும்ப அட்டைகள் வழங்க அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கை.

    ReplyDelete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.