Monday, September 30, 2013

கீழக்கரை கடல் பகுதியில் கரை ஒதுங்கும் கடல் வாழ் அரிய உயிரனங்கள் !

கீழக்கரை அருகே பக்கீரப்பா தர்ஹா கடற்கரை பகுதியில் கரை ஒதுங்கிய கடல் வாழ் உயிரனம்
சில ஆண்டுகளுக்கு முன் கீழக்கரை அருகே மங்களேஸ்வரி கடற்கரை பகுதியில் ஒதுங்கிய திமிங்கலம்

மன்னார் வளைகுடா கடல் பகுதியில் கடந்த சில‌ ஆண்டுகளாக‌ டால்பின்கள்,கடல் பசு ஜெல்லி வகை மீன்கள் இறந்து கரை ஒதுங்குகின்றன.. அவற்றை பாது காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடல் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்திய கடல் பகுதியில் மிகுந்த‌ கடல் வளங்கள் நிறைந்து படர்ந்துள்ள அற்புதங்கள், மன்னார்வளைகுடாவில் உள்ளன. தமிழக மீன் உற்பத்தியில் 35 சதவீதம் மீன் உற்பத்தி, மன்னார் வளைகுடா கடலில் இருந்தே கிடைக்கிறது . கீழ‌க்க‌ரை ப‌குதி க‌ட‌ல் ப‌குதியும் ம‌ன்னார் வ‌ளைகுடாவை சேர்ந்த‌தாகும் ம‌ன்னார் வ‌ளைகுடாவில் 21 தீவுகளும் ஏராள‌மான‌ பவளப்பாறைகளும் உல‌கின் அரிவ‌கை உயிர‌ன‌ங்க‌ளும் இங்கு உள்ள‌து. கடல் உயிரின பெருக்கத்திற்கு ஆதாரமான பவளப்பாறைகளும் கடல்புற்களும் அதிகம் காணப்படுவதால் ஏராளமான உயிரினங்கள் அதிக‌ள‌வில் உள்ள‌து. இதில், அரிய வகை உயிரினங்களான பவள உயிரினங்கள்,ஜெல்லி வகை மீன்கள் கடல் பசு, கடல் ஆமைகள், கடல் குதிரைகள், கடல் அட்டைகள் போன்றவை வாழ்ந்து வருகின்றன.பாலூட்டி இன‌ங்க‌ளான‌ திமிங்க‌ல‌ங்க‌ல்,டால்பின்க‌ள் அதிக‌ள‌வில் உள்ள‌து அழிந்து வரும் இவ்வகை உயிரினங்களை பிடிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.தற்போது சாக்கடை நீர் கலப்பு,அரிய கடல் வாழ் உயிரின்ங்களை வேட்டையாடுதல் போன்ற வற்றால் இவ்வங்கள் அழிந்து வருகின்றன.இது குறித்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென கடல் ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இது  குறித்து கடல் ஆர்வலர் கூறியதாவது,

இது ஜெல்லி வகை மீனாக இருக்கலாம்.தற்போது இவ்வகை ஜெல்லி மீன்கள் கரை ஒதுங்குவது உலகளவில் சாதாரணமான ஒன்றுதான். இம்மாற்றம் நீரின் சூழ்நிலையில் தட்பவெப்ப மாற்றத்தினால் ஏற்படும் மாற்றத்தை குறிக்கிறது. ஜெல்லி மீன்கள் இறந்து ஒதுங்கியதற்கு தட்பவெப்ப நிலை மாற்றம் மற்றும் மனித செயல்பாடுகளினால் கடலில் கலக்க கூடிய கழிவு நீரினால் ஏற்பட்ட உயிர்உருப்பெருக்கம் ஆகியவை காரணமாக இருக்கலாம் என்றார்

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.