Sunday, November 10, 2013

ஏர்வாடியில் மன நல சிகிச்சை மையம் !அமைச்சர் தொடங்கி வைத்தார்!


அமைச்சர் சுந்தர்ராஜன் ஏர்வாடியில் மருத்துவ சிகிச்சை மையத்தை துவக்கி வைத்து பேசினார்

பைல்(பழைய) படம்


கீழக்கரையை அடுத்துள்ள ஏர்வாடியில் தமிழ்நாடு சுகாதாரத்துறையின் கீழ் இயங் கும் மருத்துவம்-ஊரக நலப் பணிகள் மற்றும் ஏர்வாடி தர்கா நிர்வாகத்தின் சார்பில் பிரார்த்தனையுடன் கூடிய மருத்துவ சிகிச்சை என்று அழைக்கப்படும் தவா-துவா திட்ட தொடக்க விழா நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் நந்த குமார் தலைமை தாங்கினார். மாவட்ட மனநல திட்ட ஒருங் கிணைப்பாளர் ராமசுப்பிர மணியன் வரவேற்று பேசி னார். இத்திட்டத்தின் கீழ்

அமைக்கப்பட்டுள்ள மனநல சிகிச்சை மையத்தை அமைச் சர் சுந்தர்ராஜன் திறந்து வைத்து பேசியதாவது:-


முன்னோர்கள் நோயால் பாதிக்கப்படும் போது வழி பாட்டுடன் கூடிய மருத்துவ சிகிச்சையை மேற்கொள்வது வழக்கம். இதேபோல ஏர்வாடி தர்காவில் மனநலம் பாதிக் கப்பட்டவர்களுக்கு பிரார்த் தனையுடன் கூடிய மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட உள் ளது. இந்தியாவில் முதன்முத லாக குஜராத் மாநிலத்தில் உனாவா கிராமத்தில் மிரா தத்தார் தர்காவில் இதே போன்று பிரார்த்தனையுடன் கூடிய மருத்துவ சிகிச்சை அளிக்கப்படும்.

இதனை முன்னுதாரண மாக கொண்டு ஏர்வாடியில் மனநல மருத்துவமனை தொடங்க டாக்டர் பெரியார் லெனின் தலைமையில் மருத் துவ குழுவினரும் தர்கா நிர் வாகத்தினரும் குஜராத் மாநி லத்துக்கு சென்று 3 நாட்கள் ஆய்வு மேற் கொண்டனர். தவா-துவா திட்டத்தின் கீழ் ஏர்வாடி தர்காவில் மனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற வரும் நோயாளிகளுக்கு பிரார்த்தனை முடிவில் ஆலோசனையும், உளவி யல்- மனரீதியான தகவல் சேகரிப்பும், மருத்துவ சிகிச் சையும் அளிக்கப்படுகிறது.

இதன் பின் நோய் குண மான பின்னர் சமூகத்தோடு ஒன்றினைந்து வாழ்வதற்கு ஏற்ற வகையில் பயிற்சி அளிக் கப்படுகிறது. பொதுவாக நம் எண்ணங்கள் நிறைவேறாத போது தான் மனதில் அழுத் தம் அதிகமாகிறது.

இவ்வாறு அழுத்தம் அதிகமாகும் போது மனநோய் ஏற்படும். பெரும் பாலான மனநோய்கள் மன அழுத்ததால் ஏற்படுவதால் மனிதனுக்கு மன அமைதி முக் கியம். தற்கொலைக்கு முய லு பவர்கள் கூட மன நிலை பாதிப்பால் தான் அந்த முடி வுக்கு வருகின்றனர். தென்னிந் தியாவில் முதன் முதலில் தொடங்கப்பட்டுள்ள இந்த மையத்தில் சிறந்த மனநல சிகிச்சை அளிக்கப்பட உள் ளது. இந்தியா-ஆஸ்திரேலியா கூட்டு முயற்சியின் கீழ் ஆர். எஸ்.மங்கலம், மண்டபம் பகு தியில் பரிச்சார்த்த முறையில் விரிவான மனநல திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.


இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில் தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு வாரிய தலை வர் முனியசாமி, மாவட்ட ஊராட்சி தலைவர் சுந்தர பாண்டியன், ராம்கோ தலை வர் முருகேசன், மத்திய கூட் டுறவு வங்கி தலைவர் ஜெய ஜோதி, மனநல மருத்துவர் பெரியார் லெனின், கடலாடி யூனியன் தலைவர் மூக் கையா ஆகியோர் பேசினர்.

 இதில் ஏர்வாடி ஊராட்சி தலைவர் முகமது அலி ஜின்னா, தர்கா தலைவர் அம்ஜத் உசேன், செயலாளர் செய் யது பாரூக் ஆலிம், துணை தலைவர் செய்யது சிராஜு தீன், நிர்வாக சபை உறுப் பினர்கள் அஜ்மூர் ரகுமான், துல்கருணை பாட்சா உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மருத்துவ இணை இயக்குனர் பழனிநாதன் நன்றி கூறினார்.

2 comments:

  1. அவ்லியாக்களுக்கு(?) மகிமைலாம் இல்லை என்று தாமதமாக புரிந்து இருக்கிறார்கள்..

    ஹூசைன்

    ReplyDelete
  2. கீழ்க்கரை அலி பாட்சாNovember 10, 2013 at 9:48 PM

    சில காலத்திற்கு முன் ஏர்வாடியில் சங்கிலியால் கட்டப்பட்ட மன நோயாளிகள் பலர் கரிக்கட்டையாக எரிந்து சாம்பலான கொடூர சம்பவத்தை பத்திரிகை வாயிலாக அறிந்த உச்ச நீதி மன்றம் தானாக முன் வந்து வழக்கை பதிவு செய்து கூறிய தீர்ப்பில் ஒரு அம்சம் நாட்டின் எத்தப் பகுதியிலும் மன நோயாளிகளை எந்த கட்டதிலும் சங்கிலியால் கட்டக் கூடாது என வேதையுடன் தீர்ப்பளித்தது,

    ஆனால் நேற்று ஏர்வாடியில் அமைச்சர், மாவட்ட ஆட்சியாளர் கலந்து கொண்ட கூட்டத்திற்கு அருகிலேயே ஒரு மன நோயாளி சங்கிலியால் மரத்துடன் கட்டபட்டு இருந்ததாக இன்றைய தினகரனில் (10/11/13 மதுரை பதிப்பு) செய்தி வெளியாயிருந்தது.

    என்ன கொடுமை இது. அங்கே காவல் துறையின்ர் யாருமே இல்லையா? அவர்கள் தீர்ப்பை பற்றி அறியாதவர்களா?

    கடந்த ஆகஸ்ட் 14-ம் தேதிக்கு முன் நெடுஞ்சாலையில் உள்ள டஸ்மாக் கடைகளை அகற்ற உயர்நீதி மன்றம் விதித்த கெடுவை இது வரை தமிழ்நாடு அரசு நிர்வாகம்அமல் படுத்தாதது போல் இதையும் புறக்கணித்து விட்டர்களோ? அவர்கள் வாழ்க வாழ்கவே

    ReplyDelete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.