Tuesday, August 6, 2013

கீழக்கரையில் மீண்டும் பரவும் காய்ச்சல்!15க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி!


கீழக்கரையில்  மீண்டும் மர்ம காய்ச்சல் பரவுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். தற்போது 15க்கும் மேற்பட்டோர் மர்ம காய்ச்சலினால் பாதிக்கப்பட்டும், சுகாதாரத் துறையினரின் அலட்சியம் தொடர்வதாக பொதுமக்கள் கூறுகின்றனர்.

மீண்டும் மலேரி யா, சிக்கன்குனியா மற்றும் மர்ம காய்ச்சல் பரவி வருகிறது.
கீழக்கரையில் அகமது தெருவை சேர்ந்த ஹசன் மகள் முகமது நிஷ்மா (10), மகன் ஹபீப் முகமது நசீம் (7), எஸ்.என்.தெருவை சேர்ந்த சதக்கத்துல்லா மகள் ஆயிசத்து மர்ஜான் (17) உட்பட 15க்கும் மேற்பட்டோர் மர்ம காய்ச்சலினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் ராமநாதபுரம் மற்றும் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சுகாதார சீர்கேடு காரண மாக மர்ம காய்ச்சல் பரவி வருவது குறித்து நகராட்சி சுகாதாரத் துறை மற்றும் பொது சுகாதாரத் துறை அதிகாரிகளிடம் பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். இருப்பினும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று பாதிக்கப்பட்டவர்கள் கூறி வருகின்றனர்.

வடக்குத்தெரு முஹைதீனியா பள்ளி செல்லும் வழியில் குண்டும் குழியுமாக சாலை உள்ளதா கழிவுநீர் தேங்கி நிற்கிறது.சீர் செய்ய வேண்டுமென பாதுஷா கோரிக்கை விடுத்துள்ளார்

ஹசன் மற்றும் சதக்கத்துல்லா கூறுகையில்

, கழிவு நீர் கால்வாயில் குப்பைகள், பிளாஸ்டிக் கழிவுகள் குவிந்து கிடக்கின்றன. கால்வா யை தூர் வாரி பல மாதங்களாகிறது. இதனால் கழிவுநீர் வெளியேற வழியில்லை. கொசுக்களை ஒழிக்க புகை மருந்து அடித்தல், மருந்து தெளித்தல் உள்ளிட்ட தடு ப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. இதனால் மர்ம காய்ச்சல் பரவி வருகிறது,ரமலான் மாதத்தையோட்டி ஏராளமானோர் ஊர் திரும்பியுள்ள நிலையில் சுகாதார பணியில் தீவிர கவனம் செலுத்த வேண்டும் என்றனர்.
 

2 comments:

  1. பொதுவாக சுகாதாரத்தில் விழிப்புணர்வு அடைந்த ஊர்களையே டெங்கு காய்ச்சல் ஆட்டிப்படைக்கும்பொழுது,விழிப்புணர்வில்லாத கீழக்கரையில் சொல்லவா வேண்டும்.அதுவும் அக்டோபர்,நவம்பர் மாதங்கள் வர இருக்கிறது,ஆகவே கீழக்கரை மக்கள் கீழ்கண்ட செய்தியிலிருந்து குறைந்தபட்ச முன்னெச்சரிக்கை நடவடிக்கையாவது எடுத்து பலன்பெற வேண்டும்

    http://goldkingstl.blogspot.com/2012/11/blog-post_8694.html?spref=fb

    ReplyDelete
  2. பொதுவாக சுகாதாரத்தில் விழிப்புணர்வு அடைந்த ஊர்களையே டெங்கு காய்ச்சல் ஆட்டிப்படைக்கும்பொழுது,விழிப்புணர்வில்லாத கீழக்கரையில் சொல்லவா வேண்டும்.அதுவும் அக்டோபர்,நவம்பர் மாதங்கள் வர இருக்கிறது,ஆகவே கீழக்கரை மக்கள் கீழ்கண்ட செய்தியிலிருந்து குறைந்தபட்ச முன்னெச்சரிக்கை நடவடிக்கையாவது எடுத்து பலன்பெற வேண்டும்

    http://goldkingstl.blogspot.com/2012/11/blog-post_8694.html?spref=fb

    ReplyDelete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.