Sunday, August 11, 2013

திக்கிற்கு ஒன்றாகி விட்ட திடல் தொழுகை !ஆக்கம்:கீழைராஸா (எ) முகம்மது ராஜாக்கான்திக்கிற்கு ஒன்றாகி விட்ட திடல் தொழுகை.....
              ஆக்கம்: கீழைராஸா (எ) முகம்மது ராஜாக்கான்

ரொம்ப வருடங்களுக்குப் பிறகு பெருநாளை ஊரில் கொண்டாடப் போவதால், துபாயிலிருந்து கிளம்பும் போதே ஒரு இனம் புரியாத சந்தோசம் வந்து ஒட்டிக் கொண்டது. பலவருடங்களாக பார்க்காத நண்பர்களை காணப்போகிறோம் என்ற பூரிப்பு மனதை ஆட்கொண்டது.


அன்று பெருநாள் இரவு, வண்ண வண்ண விளக்குகளால் ஊரே ஜொலித்தது. விண்ணைத் தொட்ட ஆட்டோக்களின் ஹாரன் ஒலி…துணிக்கடை, கறிக்கடை, உணவகங்கள்.. ஆகியவற்றில் கட்டுப்பாடு மீறிய கூட்டமென்று…ஊரே பெருநாள் கொண்டாட்டங்களில் அல்லோகலப்பட்டது.

நானும் நண்பர்களும், கிரவுன் ஐஸ்கிரீமின் ரோஸ்மில்க்கை அருந்திய படி வெளியே வேடிக்கை பார்த்து கொண்டிருந்தோம்.

“என்ன மச்சான் எங்கே தொழப்போறே..” நண்பன் கேட்டான்.
“இது என்னடா கேள்வி, பழைய குத்பா பள்ளிக்குத்தான்… என்ன தான் கல்யாணத்துலே ஜாமாத் மாறினாலும், அங்கே தொழுதாத்தான் எல்லோரையும் பார்த்தது போல இருக்கும்”

”நீ..?”

”நான் திடலுக்குப் போறேன்”

“திடலுக்கா..?”

“ஆமா மச்சான் அது தான் நபி வழி..”

“எப்ப தொழுகை”

“காலை 7:30க்கு”

நண்பனின் போதனையில் நானும் திடலுக்குச் செல்ல முடிவெடுத்தேன்.
பெருநாள் காலை.... நீண்ட காத்திருப்புக்குப்பின் ஆட்டோ கிடைத்தது.

“தம்பி திடலுக்குப் போங்க” என்றேன்.

“எந்த திடலுக்கு காக்கா..?”

எனக்கு தூக்கி வாரிப் போட்டது…எந்த திடலுக்கா..? ஜமாத் தொழுகை தானே
வேறே வேறே, இதில் என்ன குழப்பம்..? என்று எண்ணிய படி

“தம்பி நான் ஜமாத்தை சொல்லவில்லை திடலை சொன்னேன்” என்றேன்.

“அது தான் எந்த திடல்னு கேட்கிறேன்” ஆட்டோக்கார தம்பி சற்றே டென்சன் ஆனான்.

“அப்படி எத்தனை திடல் இருக்கு..”

“500 பிளாட், தெற்குத்தெரு, வடக்குத்தெரு, கிழக்குத்தெரு…”

“இத்தனை திடலா..?!” என்று ஆச்சரியத்தை வெளியிட்ட நான், நண்பன்

கிழக்குத்தெரு என்பதால்…

”கிழக்குத்தெருவிற்கு போங்க தம்பி என்றேன்…”

”கிழக்குத்தெருவில் எந்தத் திடல்…?”

அடப்பாவிங்களா..? இது வேறேயா, அதுலே எத்தனை என்றேன்.

“கிழக்குத்தெரு ஜமாத், தவ்ஹீத் ஜமாத், KECT”

எனக்கு முடிவெடுக்கத் தெரியவில்லை…

“நீயே ஒரு திடலுக்குப்போ தம்பி..” என்றபடி ஆட்டோவில் அமர்ந்தேன்.
ட்ட்ட்ரூரூரூ என்ற சத்தத்துடன் ஆட்டோ கிளம்பியது.
அதற்கு ஈடு கொடுக்கும் வகையில் என் எண்ண ஓட்டங்களும் ஓட ஆரம்பித்தது…

“ ஜமாத்தை பிரித்தார்கள்…ஒன்றாக இருந்த ஜும்மாவை பிரித்தார்கள்…திடலைக் கொண்டு பெருநாள் தொழுகையை பிரித்தார்கள்…இப்போதோ திடலையே பிரித்து விட்டார்களே..? இது எங்கே போய் முடியுமோ…?...
ஆட்டோ நின்றது.

“இது என்ன திடல்”

“இது தவ்ஹீத் திடல் காக்கா”

திடலுக்குள் நுழைந்தேன்…

40,50 பேர் அமர்ந்திருந்தார்கள்…தட்டி வைத்து அடைக்கப்பட்ட மறைவிற்கு பின் சில பெண்கள் அமர்ந்திருந்தார்கள்…தொழுகை ஆரம்பிப்பதற்கான எந்த அறி குறியும் இல்லை…யாரும் தக்பீர் கூட ஓதவில்லை…”

சில நிமிடம் கழித்து, ஒரு நடுத்தர வயது பையன்,

தொழுகை குறிப்பிட்ட நேரத்திற்குள் ஆரம்பித்து விடும் அதுவரை எல்லோரும் சத்தம் வராதபடி மனதிற்குள் ’அல்லாஹ் அக்பர்’ அல்லாஹ் அக்பர் என்று கூறிக்கொண்டிருக்கவும்..என்று கூறி அமர்ந்து விட்டார்.

”இறைவன் பெரியவன்” என்ற வரிகளை யாருக்கும் கேட்கா வண்ணம் மனதுக்குள் உச்சரிக்க வேண்டிய அவசியம் என்ன வந்தது..? என்ற கேள்வி என்னைத் துளைத்த வண்ணமிருந்தது.

குறிப்பிட்ட நேரத்தில் தொழுகை ஆரம்பிக்கப் பட்டது…தொழ வைக்க இமாம் தோரணையில் ஒருவரும் இல்லையே என்று எண்ணிக் கொண்டிருந்த வேளை, ஒரு 18, 20 வயது மதிக்கத்தக்க வாலிபர் தொழவைக்க முன் வந்தார்…வழக்கமான தொழுகை முறையிலிருந்து மாறி சில மாற்றங்களுடன் தொழுகை முடிந்தது.அதே வயது மதிக்கத்தக்க இன்னொரு இளைஞன் ஜூம்மா பிரசங்கத்தை தொடர்ந்து, வெள்ளிக்கிழமை பெருநாளில் இரண்டாவது ஜூம்மா நாம் வேண்டுமென்றால் தொழலாம், அது கட்டாய மில்லை என்ற அறிவிப்புடன் தொழுகை நிறைவுற்றது.

சலாம் கொடுக்க நான்கைந்து பேர்களைத்தவிர வேறு யாரும் தெரிந்தவர்கள் இல்லை..நண்பனும் இங்கே வரவில்லை.
தக்பீர் இல்லாத தொழுகை, கட்டித்தழுவுதலில்லாத சலாம் என பெருநாள் தொழுகையின் சுவாரஸ்யத்தை இழந்த ஒரு ஏமாற்றத்துடன், திடலை விட்டு வெளியேறினேன்.

இது தான் நபிவழித் தொழுகையா…? ஒற்றுமையாக ஒன்றாக தொழ வேண்டுமென்று தானே ஜமாத் என்ற முறையே ஆரம்பிக்கப்பட்டது…இப்படி சிதறி திக்கிற்கொரு திடலாக தொழவைப்பதை நான் நபிகள் ஆதரித்தார்களா..??

மேலோட்டமாக நபி வழி என்று கூறிக் கொண்டு, அதன் உள்நோக்கத்தை மறந்து விடுகிறார்களே…? என்ற படி மெயின் ரோடு நோக்கி நடந்தேன்…
”நோன்புப் பெருநாள் நபிவழித்திடல் தொழுகை” என்ற வரிகளிடன் அங்கே வைக்கப்பட்டிருந்த பெரிய பேனர் இன்று தான் என் கண்ணில் பட்டது.நான்கைந்து பேர் அதை வேடிக்கை பார்த்து கொண்டிருந்தார்கள்…

அங்கே வேடிக்கை பார்த்து கொண்டிருந்த பெரியவர் ஒரு விரக்தி சிரிப்புடன்
“திடல் தொழுகையில் நபி வழியை பற்றிப் பிடிப்பவர்கள்…ஒற்றுமையில் கோட்டை விட்டுவிட்டார்களே..!” என்று புலம்பிச்சென்றது இன்னும் என் காதுகளில் ஒலித்து கொண்டே இருக்கிறது

19 comments:

 1. ஊரைப்போய் தூரப்போடுங்கப்பா

  ReplyDelete
 2. This comment has been removed by the author.

  ReplyDelete
  Replies
  1. எல்லா இடத்திலும் ஊர் பிரச்சனை என்றுதான் கேள்விபட்டிருக்கிறேன்
   நமது ஊரில்தான் தெருவுக்குத்தெரு பிரச்சனை

   Delete
 3. நம்ம ஊரின் ஒற்றுமை இன்மை நான் பிறந்த காலம் முதல் பார்த்துகொண்டு இருக்கிறேன். பிரிவினை அதிகம் ஆய்கொண்டே போகிறது இனி ஒற்றுமை ஏற்படும் என்ற நம்பிக்கை குறைத்து கொண்டே போகிறது.

  ReplyDelete
 4. இஸ்லாமியர்களின் வெற்றி ஒற்றுமையில்தான் இருக்கிறது வேற்றுமையில் இல்லை என்பதை மக்கள் எப்போது புரிந்து செயல் படுகிறார்களோ அன்றுதான் இஸ்லாம் முழுமை பெரும் அது வரைக்கும் இந்த கோஷ்டி பிரச்சனை தீராது தொடர்ந்து கொண்டுதான் இருக்கும்

  ReplyDelete
 5. Anaithu islamiya iyakkathaium ondrinaikkum oru maperum kadchi uruvakka pada vendum, antha kadchin kil anaithu islamiya kadchikalum vedrumai marathu islamiya nalanai karuthi karuthil kondu odrumaiudan seyal pada vedum , appoluthuthan oru anil namathu urimaikural koduthu , namathu urimaikalai peruvathodu, indiavin islamiyarkal pathukapakaum, irukka mudium, islamiyar nalanaium pathukkaka mudium

  ReplyDelete
 6. பெரிய தாடியுடன் கணுக்கால் அளவுக்கு வெள்ளைக் கலரில் NIGHTY மாதிரி ஜிப்பாவப் போட்டுக்கிட்டு 8 முழத்தில பச்சைக் கலர் வேஷ்டிய தலையிலே முண்டாசு கட்டிக்கிட்டு மிஞ்சுன துண்டை முதுவுக்குப் பின்னாடி பின் தொடை அளவுக்குத் தொங்கப்போட்டுக்கிட்டு ஒரு ஆள் தொலவைக்கும்னு என்று எதிர்பார்த்து வந்த Bro. RajaaKhan Mohamed-க்கு பெருத்த ஏமாற்றம்......

  எண்டே ரப்பே..... எப்போ யாங்கள் மார்கத்தை மார்க்கமாக விளங்கும்......

  ReplyDelete
 7. அருமையான செய்தி (நறுக்கென்று), இதை முழுவதும் படித்த பின்பு எனக்கு சிறு வயதில் பள்ளியில் படித்த நான்கு மாடு சிங்கம் கதை தான் ஞாபகத்திற்கு வருகிறது, மாடு யார் சிங்கம் யார் என்று சொல்லி புரிய வைக்க தேவையில்லை, எல்லாம் வல்ல இறைவன் நம் எல்லோரையம் பாதுகாப்பானாக ஆமீன்...

  ReplyDelete
 8. ஓர் ஊரில் ஒரு திடலில் தான் தொழ வேண்டும் என்றால், ஒரே பள்ளிவாசலில் தொழாமல் பல பள்ளிகளில் நீங்கள் தொழுவது ஏன்?

  அனைவரும் ஒரே இடத்தில் தான் தொழுமாறு மார்க்கம் கட்டளையிடவில்லை. இது ஒற்றுமையை குலைப்பதாக ஆகாது.

  ReplyDelete
 9. ஓர் ஊரில் ஒரு திடலில் தான் தொழ வேண்டும் என்றால், ஒரே பள்ளிவாசலில் தொழாமல் பல பள்ளிகளில் நீங்கள் தொழுவது ஏன்?

  அனைவரும் ஒரே இடத்தில் தான் தொழுமாறு மார்க்கம் கட்டளையிடவில்லை. இது ஒற்றுமையை குலைப்பதாக ஆகாது.

  ReplyDelete
 10. கீழக்கரை அலி பாட்சாAugust 12, 2013 at 7:37 PM

  o Mohamed Raseem , aadhangapadathaan mudikiradhu. Eduthusonnal NALLA sorkalaal aesukiraarkalae
  22 hours ago • Like • 4
  o

  Seeni Mohamed Riyaz Factu...factu.......factu
  22 hours ago • Like • 1
  o

  Anees Haque naam eppadi tolutom enbadhu mukkiyamillai nabi valiyil toluthom enbadhudhan mukkiyam.marumayil nanbargal varamatargal.otrumayaga oru tavara i seidhal adu sariyahi vidadhu.
  22 hours ago • Like • 1
  o

  Abdul Raheem கீழக்கரையில் இவ்வளவு குழப்பங்களா????? ஜும்மா தொழுகையை பிரித்ததில் இருந்து எல்லாமே பிரிந்து விட்டது.
  22 hours ago via mobile • Unlike • 5
  o

  Rajakhan Mohamed Anees Haque நான் யாரையும் குறை கூறவில்லை..குறைந்த ப்ட்சம் திடல் தொழுகை சரி என்பவர்கள் ஒன்றாக ஒரு திடல் தொழுகையாக நடத்தியிருக்கலாமே என்பது தான் என் போன்ற பொதுவானவர்களின் ஆதங்கம்..இன்ஷா அல்லாஹ் இனி வரும் காலங்களிலாவது இதை செயல் படுத்த முயற்சியுங்கள்...
  21 hours ago via mobile • Like • 5
  o

  Keelakarai Ali Batcha நீங்கள் உங்களின் மனக் குமுறலை எழுத்தில் வடித்து விட்டீர்கள்.அனேகர் உள்ளத்திற்குள் குமுறிக் கொண்டு இருக்கிறார்கள் ஊரில் சமுதாயத்தின் நிலை கண்டு. வல்ல நாயன் அனைவரையும் பாதுகாப்பானாக. ஆமீன்.துவா செய்வதை விட வேறு வழி தெரியவில்லை
  20 hours ago • Like • 7
  o

  Ahamed Kuthubdeen Raja Rajakhan Mohamed உங்களுக்கு ஏன் இந்த வேண்டாத வேலை? உங்க உம்மா வீட்டுக்கு பக்கத்தில் கீழக்கரையின் மிகப் பழமையான பள்ளி இருக்கிறது உங்க மனைவி வீட்டுப் பக்கத்தில் இந்த திடல்களைவிட பெரிய புது பள்ளிவாசல் இருக்கிறது இதில் ஒன்றில் மன உறுத்தல் இல்லாமல் நிம்மதியாக பெருநாள் தொழுதிருக்கலாம்!
  20 hours ago via mobile • Like • 1
  o

  Abdul Raheem Ahamed kuthubdeen @ எல்லோருக்கும் மன உறுத்தல் இல்லாமல் தொழுக வழி சொல்லுங்கள். Rajakhan அவர்கள் சொல்லுவது கீழக்கரை மக்களின் குமுறல். தயவுசெய்து தடுக்கவேண்டாம்.
  20 hours ago via mobile • Like • 3
  o

  Ahamed Kuthubdeen Raja Rajakhan Mohamed உங்கள் கட்டுரையில் ஒன்று விட்டுப் போய் விட்டது என்று நினைக்கிறேன். வசூல் ஏதும் நடக்கவில்லையா?
  20 hours ago via mobile • Like • 1
  o

  ReplyDelete
 11. கீழக்கரை அலி பாட்சாAugust 12, 2013 at 7:39 PM

  Abdul Raheem Ahamed kuthubdeen @ Rajakhan அவர்கள் நண்பர்களை சந்திக்க முடியவில்லை என்று கவலைபடுகிறார். நீங்கள் வசூலை பத்தி வருத்த படுகிறீர்கள். தயவுசெய்து புரிந்து கொள்ளுங்கள்.
  20 hours ago via mobile • Like • 1
  o

  Hameed Raja At rajakhan bro.tidal sari enbavargal mean sari dana kaka am i rite.kilakarai ka oru tidal na inum mika sandosam dana kaka inshallah allah nadu van
  20 hours ago • Like
  o

  Hameed Raja Kaka enoda thought nabi vali ya follow pandravangala encourage pananum becz this one of prophet way kaka .but some are discourage.adan feeling kaka.idu tani pata nabarin vali ilaya kaka.yours genious kaka.solunga pesalam.allah podumanavan but masjid la prayer pandravanga prayer seradunu nan kura vilai allah podumanavan kaka.but otrumai yaha wrong saidal adu wrong dana kaka.whoever whatever however am i rite i said common for all things.
  20 hours ago • Like
  o

  Jahufar Sadiq Periya dhaadiyudan Kanukkaal ALAVUKKU Jibba anindha oruvar 8 mulaththula pachaikkalar vesttiya thalaila suththik kattikkittu vandhu nippaaru avarukkup pinnaal nindru tholuvom ENDRU edhiparpudan vandha Bro. Rajakhanukku peruththa yemaatram ......
  20 hours ago via mobile • Like
  o

  Ahamed Kuthubdeen Rajahttp://www.facebook.com/unitedkilakarai/media_set?set=a.117577955020162.20638.100003038746513&type=3

  திடல் தொழுகை
  திடல் தொழுகையின் நோக்கத்தையே இவர்கள் கொச்சைப்படுத்துகிறார்கள்.... கீழக்கரையில் K...See More
  By: கீழக்கரை ஒற்றுமை
  Photos: 2
  20 hours ago • Like
  o

  Ahamed Abdul Kader Assalamu Alaikum.

  In the name of Allah, The most Gracious and The most Merciful.

  1.மற்ற பள்ளிகளில் தொழுவதை விட மஸ்ஜிதுன் நபவியில் தொழுவது 1000 மடங்கு நன்மை அதிகம்' (புகாரீ 1190) என்று சொன்ன நபி (ஸல்) அவர்கள், பெருநாள் தொழுகையைத் திடலில் தொழுததன் மூலம் திடலில் தொழுவதன் முக்கியதுவத்தைத் தெளிவுபடுத்தியுள்ளார்கள்.

  2. நபி (ஸல்) அவர்கள் நோன்புப் பெருநாளிலும், ஹஜ்ஜுப் பெருநாளிலும் (பள்ளிக்குச் செல்லாமல்) முஸல்லா என்ற திடலுக்குச் செல்பவர்களாக இருந்தனர். அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரீ (ரலி) நூல்கள்: புகாரீ 956, முஸ்லிம் 1472.

  3. இரு பெருநாட்களிலும் மாதவிடாய்ப் பெண்களையும் வீட்டில் இருக்கின்ற கன்னிப் பெண்களையும் (தொழும் திடலுக்கு) அனுப்புமாறும், அப்பெண்கள் வீட்டிலிருந்து வெளியாகி முஸ்லிம்கள் தொழுகின்ற இடத்திற்குச் சென்று அவர்களுடைய துஆவில் கலந்து கொள்ளுமாறும், தொழுமிடத்தை விட்டு மாதவிடாய்ப் பெண்கள் ஒதுங்கியிருக்குமாறும் நாங்கள் கட்டளையிடப்பட்டோம். பெண்களில் ஒருவர், 'அல்லாஹ்வின் தூதரே! எங்களில் எவருக்கேனும் அணிந்து கொள்வதற்கு மேலாடை இல்லை எனில் என்ன செய்வது?' என்றார். அதற்கு, 'அவளுடைய தோழி தனது (உபரியான) மேலாடையை இவளுக்கு அணியக் கொடுக்கட்டும்' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: உம்மு அத்திய்யா (ரலி) நூல்கள்: புகாரீ 351.

  Here prophet Mohammed PBUH said very clearly about how EID salah should be and wht is significant..so we have to follow ..it's crystal clear..and no point in talking 'n' numbers of eidka's and so on...if this hadeedh is followed then its a sunnah of Mohammed PBUM..and here in KLK peoples offer EID salah in lot of place in conjectn wit the prophet's hadeedh..as a Jumma salah..so is that wrong in that..?

  ReplyDelete
 12. கீழக்கரை அலி பாட்சாAugust 12, 2013 at 7:40 PM

  Keelakarai Ali Batcha பெருநாள் தொழுகை என்பது தொழுகை அடுத்து குத்பா பயான் கேட்பது எனபது கட்டாய சுன்னத்து.இந்த வருடம் எனது அனுபவம். நான் ஒரு மூத்தகுடிமகன். மேலும் பை பாஸ் சர்ஜரி,முதுகு தண்டு அறுவை செய்தவன். மூட்டில் ஜவ்வுகள் சேதமடைந்து மூட்டு மாற்று அறுவை செய்யக் கூடிய நிலையில் உள்ளவன். நான் மதி தெரிந்த நாளிலிருந்து பெருநாளில் முதல் தொழுகையில் முதல் ஷப்பில் நின்று நிறைவேற்றக் கூடியவன்.இந்த வருடம் எங்கள் பழைய குத்பாப் பள்ளி ஜமாஅத்தில் மூன்று நேரங்களில் அதாவ்து 8 மணி, 9மணி ,10 மணிக்கு பெருநாள் தொழுகை வைக்கப்பட்டது. அதன் அபின் 10.30 மணிக்கு குத்பா பிரசங்கம். எனது பழக்கப்படி முதல் தொழகைக்கு செல்ல வேண்டுமானால் 7.30 க்கே போய்விட வேண்டும். அப்போது தான் தக்பீர் சொல்ல முடியும். பிறகு குத்பா பிரசங்கம் முடியும் 11 மணிவரை பள்ளியிலேபே தங்கி இருக்க வேண்டும் எனது நடக்க முடியாத இயலாமை காரணமாக இறைவன் பேரால் சபூர் செய்து கொண்டு..அதன் பின் ஊர் வழக்கப்படி நடுத்தெரு ஜும்மா பள்ளிக்கு இரண்டாம் குத்பா பிரசங்கம் கேட்க செல்ல வேண்டும்.. (இது தேவையா என்பதையும் தீனோர்கள் சிந்தித்து மாற்றம் செய்ய வேண்டும். ஒரு குத்பா பிரசங்கம் கேட்பது தானே கட்டாய சுன்னத்து). மேலும் இந்த வருடம் ஜும்மா தொழுகையும் சேர்ந்து கொண்டது. இதன் பின் எங்கள் பள்ளியில் பிறந்த பாலகனின் ஜனாஸா தொழுகை வேறு.ஆக், எந்து இயலாமைக் காரணமாக இந்த வருடம் முதல் முறையாக மூன்றாவ்து பெருநாள் தொழுகைக்கு சென்றதின் காரணமாக சலாம் கொடுக்க, முலாகத் செய்ய எனது உறவுகளை பார்க்க முடியவில்லை. அவர்கள் முதல் தொழுகைக்கு வந்து சென்று விட்டார்கள். அவர்கள் மட்டும் அல்ல அனேகர் முதல் தொழுகைக்கும் குத்பா பிரசஙகத்திற்கும் இடையே நிறைய இடைவெளி இருப்பதால் சுன்னத்தான குத்பா பிரசங்கம் கேட்பதை தவற விடுகிறார்கள். இதற்கு எந்த நடைமுறை பொருப்பு? சீராக சிந்தித்து இனி வரும் காலங்களில் சிறப்பாக தொழுது கொள்ள வல்ல நாயன் நல்வழி காட்டுவானாக .ஆமீன், ஆமீன், யாரப்பில் ஆல்மீன்.
  19 hours ago • Like • 4
  o

  Ahamed Kuthubdeen Raja தம்பி @Abdul Raheem இந்த நோன்பு பெருநாளில் கீழக்கரையில் எத்தனை திடல் தொழுகை தெரியுமா? ததஜ சார்பில் 3 திடல் தொழுகை இதஜ சார்பில் 1 திடல் தொழுகை KECT சார்பில் 1 திடல் தொழுகை கிழக்கு தெரு ஜமாஅத் சார்பில் 1 திடல் தொழுகை தெற்கு தெரு ஜமாஅத் சார்பில் திடல் தொழுகை கடற்கரை பள்ளி ஜமாஅத் சார்பில்1 திடல் தொழுகை வடக்கு தெருவை சார்ந்த சகோதரர்களால் 1 திடல் தொழுகை ஆக மொத்தம் 9 திடல் தொழுகை இதுவா நபி வழி, இது தவிர அனைத்து பள்ளிகளிலும் பெருநாள் தொழுகை.....இயக்கங்களும் சங்கங்களும் ஏன் பெருநாள் தொழுகை நடத்துகின்றன? இதன் நோக்கம் என்ன? ஜமாஅத்துகள் நடத்தும் பெருநாள் தொழுகை போதாதா? கிழக்குத்தெருவில் மட்டும் 3 தொழுகை தொழுகை ஏன்? திடல் தொழுகையின் நோக்கமே அடிபட்டு போகிறது. இதுவா நபி வழி...இனி குடும்பத்திற்கு ஒரு திடல் தொழுகை வராதது தான் பாக்கி .
  19 hours ago • Like • 6
  o

  Jahufar Sadiq @Ahmed Kuthubdeen Raja kaka, Oru EID Tholugaiyai 3 Installmentla mudiththu Oru Oru Tholugai mudindhu Rendu Nabar Towel-a pidithukkondu podunga Nallaa periya nottaap podunga ENDRU ketkum vasool Rajaakalaiyaa ILLE mudindhadhap podungannu sinnach chinna Vaaliyath thookki kittu varuvangale ANDHA vasoolach cholreengala?
  19 hours ago via mobile • Like
  o

  Gajini Muhd sako Ahamed Kuthubdeen Raja உங்கள் கருத்து நூறு சதவீத உண்மை ...பிரிவினை கூட்டங்கள் ஆளுக்கொரு நீதி பேசி தன்னிலையையும் ஒற்றுமையையும் பிய்த்து எறிகிறார்கள்
  19 hours ago • Like
  o

  Keelakarai Ali Batcha பெருநாள் அன்று பள்ளிகளில் வசூல் செயவது நிர்வாகத்திற்காக அல்ல. இன்றைய கொடுமையான விலைவாசியில் கட்டுபடியாகாத சம்பளத்தில் நம்மை மட்டுமே நம்பி ஊர் விட்டு ஊர் வந்து தீன் சேவகம் செய்யும் ஆலீம் களுக்கும், மோதீன்களுக்குக் பங்கிட்டு அளிக்கவே அன்றி வேறு எதற்கும் இல்லை. நம்மை போன்றே அவர்களுக்கும் வாழ்க்கை நடைமுறை பிரச்சனை உள்ளது என்பதை யாரும் மறுக்க முடியாது. மேலும் நம்மை நம்பி நாடி வந்தவர்கள். மேலும் கீழக்கரைக்கு பெத்த பெயர் உள்ளதே. அதையும் காப்பற்ற வேண்டுமே. அதனால் தான் சில இடங்களில் தண்டிச்சு வசூல் செய்கிறார்கள்.
  19 hours ago • Like • 4
  o

  ReplyDelete
 13. கீழக்கரை அலி பாட்சாAugust 12, 2013 at 7:41 PM

  Keelakarai Ali Batcha பெருநாள் தொழுகை என்பது தொழுகை அடுத்து குத்பா பயான் கேட்பது எனபது கட்டாய சுன்னத்து.இந்த வருடம் எனது அனுபவம். நான் ஒரு மூத்தகுடிமகன். மேலும் பை பாஸ் சர்ஜரி,முதுகு தண்டு அறுவை செய்தவன். மூட்டில் ஜவ்வுகள் சேதமடைந்து மூட்டு மாற்று அறுவை செய்யக் கூடிய நிலையில் உள்ளவன். நான் மதி தெரிந்த நாளிலிருந்து பெருநாளில் முதல் தொழுகையில் முதல் ஷப்பில் நின்று நிறைவேற்றக் கூடியவன்.இந்த வருடம் எங்கள் பழைய குத்பாப் பள்ளி ஜமாஅத்தில் மூன்று நேரங்களில் அதாவ்து 8 மணி, 9மணி ,10 மணிக்கு பெருநாள் தொழுகை வைக்கப்பட்டது. அதன் அபின் 10.30 மணிக்கு குத்பா பிரசங்கம். எனது பழக்கப்படி முதல் தொழகைக்கு செல்ல வேண்டுமானால் 7.30 க்கே போய்விட வேண்டும். அப்போது தான் தக்பீர் சொல்ல முடியும். பிறகு குத்பா பிரசங்கம் முடியும் 11 மணிவரை பள்ளியிலேபே தங்கி இருக்க வேண்டும் எனது நடக்க முடியாத இயலாமை காரணமாக இறைவன் பேரால் சபூர் செய்து கொண்டு..அதன் பின் ஊர் வழக்கப்படி நடுத்தெரு ஜும்மா பள்ளிக்கு இரண்டாம் குத்பா பிரசங்கம் கேட்க செல்ல வேண்டும்.. (இது தேவையா என்பதையும் தீனோர்கள் சிந்தித்து மாற்றம் செய்ய வேண்டும். ஒரு குத்பா பிரசங்கம் கேட்பது தானே கட்டாய சுன்னத்து). மேலும் இந்த வருடம் ஜும்மா தொழுகையும் சேர்ந்து கொண்டது. இதன் பின் எங்கள் பள்ளியில் பிறந்த பாலகனின் ஜனாஸா தொழுகை வேறு.ஆக், எந்து இயலாமைக் காரணமாக இந்த வருடம் முதல் முறையாக மூன்றாவ்து பெருநாள் தொழுகைக்கு சென்றதின் காரணமாக சலாம் கொடுக்க, முலாகத் செய்ய எனது உறவுகளை பார்க்க முடியவில்லை. அவர்கள் முதல் தொழுகைக்கு வந்து சென்று விட்டார்கள். அவர்கள் மட்டும் அல்ல அனேகர் முதல் தொழுகைக்கும் குத்பா பிரசஙகத்திற்கும் இடையே நிறைய இடைவெளி இருப்பதால் சுன்னத்தான குத்பா பிரசங்கம் கேட்பதை தவற விடுகிறார்கள். இதற்கு எந்த நடைமுறை பொருப்பு? சீராக சிந்தித்து இனி வரும் காலங்களில் சிறப்பாக தொழுது கொள்ள வல்ல நாயன் நல்வழி காட்டுவானாக .ஆமீன், ஆமீன், யாரப்பில் ஆல்மீன்.
  19 hours ago • Like • 4
  o

  Ahamed Kuthubdeen Raja தம்பி @Abdul Raheem இந்த நோன்பு பெருநாளில் கீழக்கரையில் எத்தனை திடல் தொழுகை தெரியுமா? ததஜ சார்பில் 3 திடல் தொழுகை இதஜ சார்பில் 1 திடல் தொழுகை KECT சார்பில் 1 திடல் தொழுகை கிழக்கு தெரு ஜமாஅத் சார்பில் 1 திடல் தொழுகை தெற்கு தெரு ஜமாஅத் சார்பில் திடல் தொழுகை கடற்கரை பள்ளி ஜமாஅத் சார்பில்1 திடல் தொழுகை வடக்கு தெருவை சார்ந்த சகோதரர்களால் 1 திடல் தொழுகை ஆக மொத்தம் 9 திடல் தொழுகை இதுவா நபி வழி, இது தவிர அனைத்து பள்ளிகளிலும் பெருநாள் தொழுகை.....இயக்கங்களும் சங்கங்களும் ஏன் பெருநாள் தொழுகை நடத்துகின்றன? இதன் நோக்கம் என்ன? ஜமாஅத்துகள் நடத்தும் பெருநாள் தொழுகை போதாதா? கிழக்குத்தெருவில் மட்டும் 3 தொழுகை தொழுகை ஏன்? திடல் தொழுகையின் நோக்கமே அடிபட்டு போகிறது. இதுவா நபி வழி...இனி குடும்பத்திற்கு ஒரு திடல் தொழுகை வராதது தான் பாக்கி .
  19 hours ago • Like • 6
  o

  Jahufar Sadiq @Ahmed Kuthubdeen Raja kaka, Oru EID Tholugaiyai 3 Installmentla mudiththu Oru Oru Tholugai mudindhu Rendu Nabar Towel-a pidithukkondu podunga Nallaa periya nottaap podunga ENDRU ketkum vasool Rajaakalaiyaa ILLE mudindhadhap podungannu sinnach chinna Vaaliyath thookki kittu varuvangale ANDHA vasoolach cholreengala?
  19 hours ago via mobile • Like
  o

  Gajini Muhd sako Ahamed Kuthubdeen Raja உங்கள் கருத்து நூறு சதவீத உண்மை ...பிரிவினை கூட்டங்கள் ஆளுக்கொரு நீதி பேசி தன்னிலையையும் ஒற்றுமையையும் பிய்த்து எறிகிறார்கள்
  19 hours ago • Like
  o

  Keelakarai Ali Batcha பெருநாள் அன்று பள்ளிகளில் வசூல் செயவது நிர்வாகத்திற்காக அல்ல. இன்றைய கொடுமையான விலைவாசியில் கட்டுபடியாகாத சம்பளத்தில் நம்மை மட்டுமே நம்பி ஊர் விட்டு ஊர் வந்து தீன் சேவகம் செய்யும் ஆலீம் களுக்கும், மோதீன்களுக்குக் பங்கிட்டு அளிக்கவே அன்றி வேறு எதற்கும் இல்லை. நம்மை போன்றே அவர்களுக்கும் வாழ்க்கை நடைமுறை பிரச்சனை உள்ளது என்பதை யாரும் மறுக்க முடியாது. மேலும் நம்மை நம்பி நாடி வந்தவர்கள். மேலும் கீழக்கரைக்கு பெத்த பெயர் உள்ளதே. அதையும் காப்பற்ற வேண்டுமே. அதனால் தான் சில இடங்களில் தண்டிச்சு வசூல் செய்கிறார்கள்.
  19 hours ago • Like • 4
  o

  ReplyDelete
 14. கீழக்கரை அலி பாட்சாAugust 12, 2013 at 7:42 PM

  Keelakarai Ali Batcha > Jahufar Sadiq தம்பி, ஆலீம் களுக்கு தொழுகை நடத்தும் கடமை மட்டும் இன்றி காலை, மாலையில் சிறுவர், சிறுமியர்களுக்கு ஓத கற்று கொடுப்பது, ஜமாஅத் குடிகளின் விருப்பப்படி ஹத்தம், பத்திஹா ஓத செல்லுவது . ஜனாஸா அடக்க காரியங்களில் ஈடுபாடுவது போன்ற பணிகளும், மோதீன்களுக்கு பாங்கு மற்றும் இகாமத்து சொல்லுவது. ஆண் ஜனாஸாகளை குளிப்பாட செல்லுவது, பள்ளியை சுத்தப்படுத்துவது, ஹவூதுகளை சுத்த்ப்படுத்தி நீர் நிறப்புவது போன்ற பணிகள் உள்ளது.அதுவும் எங்களது பழைய குத்பா பள்ளி பெரிய ஜமாஅத்தாக இருப்பதால் பணிகள் தொடராக இருந்து கொண்டே இருக்கும். ஆகையால் அவ்ர்களுக்கு சிறு தொழில் திட்டம் சாத்தியப்பட்டு வராது என்பது எனது பணிவான கருத்தாகும்.
  18 hours ago • Like • 3
  o

  Ahamed Abdul Kader Refer my previous text of hadeedh about EID salah of Prophet Mohammed PBUH...in that I could say EID salah in eidka's...because prophet order all womens even they have the menses problems to come eidka for hear biaann...and participating in duaa's..which in not possible in masjid...and it's crystal clear hadeedh from prophet...so from that hadeedh I could say if we offer EID in masjid we are doing against of prophets guidance...so Allah will guide and show us in right way and obeying prophet Mohammed PBUH fully...Insha allah...
  18 hours ago via mobile • Like • 2
  o

  Jassim Haniffa ”இறைவன் பெரியவன்” என்ற வரிகளை யாருக்கும் கேட்கா வண்ணம் மனதுக்குள் உச்சரிக்க வேண்டிய அவசியம் என்ன வந்தது..? என்ற கேள்வி என்னைத் துளைத்த வண்ணமிருந்தது....adapakkiyala
  17 hours ago • Like
  o

  Ahamed Kuthubdeen Raja Narrated AbuHurayrah (RA): The rain fell on the day of 'Id (festival) , so the Prophet (Sal) led them (the people) in the 'Id prayer in the mosque. ..Abu Dawud Book 002, Hadith Number 1156.
  17 hours ago • Edited • Like • 1
  o

  Yasar Arafath இஸ்லாமியர்களின் வெற்றி ஒற்றுமையில்தான் இருக்கிறது வேற்றுமையில் இல்லை என்பதை மக்கள் எப்போது புரிந்து செயல் படுகிறார்களோ அன்றுதான் இஸ்லாம் முழுமை பெரும் அது வரைக்கும் இந்த கோஷ்டி பிரச்சனை தீராது தொடர்ந்து கொண்டுதான் இருக்கும் ....

  அருமையான் பதிவு கீழை ராசா அவர்களே
  17 hours ago • Like • 2
  o

  Sulthan Seyed Ibrahim @raja kaka.. Ur hadeeth may be an exception.. !! But real sunnah is to offer prayer in thidal..
  @yasar bhai otrumai endru solli nam nabi kaatitharatha oru seyalai seivathu nanmaiya? Elloraium paarthu salam solli jollya pesuvatharkaga nabi valiyai vidalama??

  Anaivarum koodi vatti or varathatchanai vaangum oru ooril athu thavaru endru oru iruvar athai thavirthaal otrumai kulaiyathaan seiyyum. Atharkaga otrumai seerkulaiyuthu endru solli naamum athai aatharipathu entha vithathil nyayam?
  15 hours ago via mobile • Like • 1
  o

  Sulthan Seyed Ibrahim Athupola ore palliyil nabi valiku maaraha tholugai nerathai kanakkil kollamal. Angu ulla makkalin nerathurku 3 or 4 thadavai tholugai nadakuthe??! Ithu nabi valiya? Perunaal tholugaiyim neram enna vendru avargaluku theriuma????

  Ennai porutha varai, oor ellam onna sernthu otrumaiyaga madhu kudipathai vida. Vevveru tea kadaiyil sendru tea kudipathu nandru!!!!
  15 hours ago via mobile • Like • 1
  o

  Ahamed Kuthubdeen Raja Sulthan Seyed Ibrahim i agree performing Eid prayer in open space is Sunnah...please show me a hadees performing eid prayer at many grounds in a small town for every 50 or 100 people is Sunnah & Show me any hadees performing Eid prayer at Masjid is prohibited.
  15 hours ago via mobile • Like • 4
  o

  Yasar Arafath சபாஷ் சரியான கேள்வி
  15 hours ago • Like • 2
  o

  Sulthan Seyed Ibrahim Kaka!! Please share ur thought about eid prayer time first...
  15 hours ago via mobile • Like
  o

  Ahamed Kuthubdeen Raja Dear Sulthan Seyed Ibrahim your last comment comparison is highly objectionable.
  15 hours ago via mobile • Like • 1
  o

  Sulthan Seyed Ibrahim What comment kaka?
  15 hours ago via mobile • Like
  o

  Jahufar Sadiq I think, Kaka means that "Madhu & Tea"
  15 hours ago via mobile • Like • 1

  ReplyDelete
 15. கீழக்கரை அலி பாட்சாAugust 12, 2013 at 7:43 PM

  Sulthan Seyed Ibrahim If he means that comment.. I definitely say im not comparing it with our prayers. Im frankly speakin about common happening around in the name of unity!!!!
  15 hours ago via mobile • Like
  o

  Jahufar Sadiq If we share our thoughts and Opinions in a proper manner, may be it will help us to understand more and also help us improve our knowledge about Islam & Sunnah.... ALLAH SUBUHANVATH THAALAA will save from Bidhath Inn Sha ALLAH.....
  15 hours ago via mobile • Like • 1
  o

  Ahamed Kuthubdeen Raja I don't know about maximum time allowed for Eid prayer..But I think no one prayed in Israq time including all thidal prayers at Kilakarai.
  15 hours ago via mobile • Like
  o

  Jahufar Sadiq @ sultan ibrahim are you here in Riyadh? Let me have ur contact no...
  15 hours ago via mobile • Like
  o

  Sulthan Seyed Ibrahim Yes. Kaka 0503599866. But right now i m in makkah for a week
  15 hours ago via mobile • Like
  o

  Ahamed Kuthubdeen Raja Sulthan Seyed Ibrahim. Did you pray Eid prayer in open specific Eid ground or in Masjid at Makkah.
  15 hours ago via mobile • Like
  o

  Sulthan Seyed Ibrahim Kaka.. That time i was in madina. We dont have enough space inside masjid so I prayed eid outside the masjid. Not only me but most..

  As you know, Whats happenin at makka or madina doesnt matter. But followin sunnah is the best way kaka.
  14 hours ago via mobile • Like • 1
  o

  Ahamed Kuthubdeen Raja May be for people like you, happenings in Haram doesn't matter. For people like me, it matters as we believe it is "also" acceptable Sunnah.
  11 hours ago via mobile • Like
  o

  Keelakkarai Tntj கட்டுரை ரசிக்கும்படி இருக்கிறது ஆனால் உண்மை நிலை சகோதரருக்கு புரியவில்லை... எனபது அவருடைய வார்த்தைகளில் இருந்து விளங்குகிறது...
  8 hours ago • Like
  o

  Keelakkarai Tntj மொத்த கட்டுரையின் சாரம்சமே ஒற்றுமை இல்லை எனபது தான்... இந்த ஒற்றுமை பற்றி திருக்குரானிலோ நபி மொழியிலோ ஆதாரம் காட்டி சொல்லி இருந்தால் நன்றாக இருந்திருக்கும்,...
  8 hours ago • Like • 1
  o

  ReplyDelete
 16. //Did you pray Eid prayer in open specific Eid ground or in Masjid at Makkah//

  நபி (ஸல்) காலத்தில் திடலில் தொழுததற்கு இக்கட்டுரையிலே ஆதாரம் கொடுக்கப்பட்டுள்ளது.

  இப்போது அங்கு திடலில் தொழுதாலும் தொழாவிட்டாலும் மார்ர்க்கம் நபி (ஸல்) காலத்தில் உள்ளது மடடுமே...

  ReplyDelete
 17. kilakarai il therukku erandu memberkal select seiythu oru sankam(unity) arambikalam, ethan mulam weekly oru meeting mulam kilakarai in makkal pirachannai thirkapadalam,

  ReplyDelete
 18. அருமையான கட்டுரை. மனதை வருடியது. சிலர் காசு பணம் சேர்க்க வேண்டி தனி தனியாக இயக்கங்களை அவர்களாகவே ஆரம்பித்து கொண்டு அல்லாவின் பேரால் இஸ்லாத்தை துண்டு துண்டா கூறு போடுகிறார்கள். இதில் உறுப்பினர் என்று சில உம்மா வாப்பாவை மதிக்காத மெத்த படித்த மேதாவிகள், நானும் இஸ்லாத்தின் பக்கம் தான் இருக்கிறேன் என்று காட்டி கொள்ள முற்படும் ரெட்டை வேடம் போடுபவர்கள் தான் அதிகம். இந்த இயக்கத்தில் ஆதாயம் இல்லை என்றால் புதிய இயக்கம் ஆரம்பித்து அதில் முக்கிய பங்கு வகிகிறார்கள். என்னை பொறுத்தவரை யாரும் இதில் அல்லாஹுக்ககவோ, மறுமைக்காகவோ பாடு படுவதாக தெரியவில்லை. எப்போது நாம் ஒரு ஜமாஅத் கீழே வருவோமோ அப்போது தான் ஊரும், நாடும், இந்த ஊர் மக்களும் நன்மை அடைவார்கள்.

  ReplyDelete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.