Friday, August 2, 2013

கீழக்கரையில் இளைஞர் கைது !இந்திய தவ்ஹீத் ஜமாத் கண்டனம்


இந்திய தவ்ஹீத் ஜமாத் வளைகுடா பொறுப்பாளர் ஜமீல்

கீழக்கரை அலவாய்க்கரைவாடி டிரைவர் ஜானகிராமன், 28. கிழக்குத்தெரு தனியார் வீட்டில்   டிரைவராக பணிபுரிந்து வந்தார்.

அங்கு அவர் மார்ச் 16ல் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தார். அடித்து கொலை செய்யப்பட்டதாக சம்பந்தபட்டவர்கள் கொடுத்த புகாரின் பேரில் 15 பேர் மீது, போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்தனர். சமூகத்துக்கு விரோதமான செயல் செய்து சிக்கி கொண்டதால் டிரைவர் ஜானகிராமன் தற்கொலை செய்து கொண்டதாகவும் இது கொலை வழக்காக ஜோடிக்கப்பட்டுள்ளது எனவே உண்மையை வெளி கொண்டு வர சிபிசிஐடி விசாரணை மேற்கொள்ள வேண்டும் என இந்திய தவ்ஹீத் ஜமாத் நீண்ட காலமாக கோரிக்கை  விடுத்து வருகிறது.

இந்நிலையில் இவ்வழக்கில் சேர்க்கப்பட்டு தேடப்பட்டு வந்த ஷேக் முபாரக் என்ற இளைஞர் நேற்று முன்தினம் கீழக்கரை - சென்னை பஸ்சில் சென்றார்.தகவலறிந்த கீழக்கரை போலீசார் ஏர்வாடி முக்குரோட்டில் பஸ்சை, கீழக்கரை இன்ஸ்பெக்டர் கணேசன் தலைமையில் போலீசார், நிறுத்தி, சேக்முபாரக்கை கைது செய்தனர்.முனீரா, பைசூல் கான் உள்ளிட்டோரை தேடி வருவதாக போலீசார் தெரிவித்தனர்

இது குறித்து இந்திய தவ்ஹீத் ஜமாத் வளைகுடா பொறுப்பாளர் ஜமீல் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது,
சமூகத்துக்கு விரோதமான செயல் செய்து சிக்கி கொண்டதால்  அவமான தாங்க முடியாமல் டிரைவர் ஜானகி ராமன் தற்கொலை செய்து கொண்டார் என்பது தான் உண்மை என்பதை போலீசார் உள்பட அனைவரும் அறிவார்கள் ஆனால் உண்மைக்கு மாற்றமாக தற்கொலையை கொலை வழக்காக மாற்றி அப்பாவிகளை கைது  வரும் கீழக்கரை போலீசாரின் செயலை வன்மையாக கண்டிக்கிறோம்.

மேலும் இவ்வழக்கில் மூளை வளர்ச்சி குன்றியவர்,
,உடல் நிலை சரியில்லாத வயதான பெண்மணி,கர்ப்பிணி  பெண் மற்றும் அப்பாவி இளைஞர்களை பொய் வழக்கில் கைது செய்து வருகின்றனர்.

போலீசாரின் இந்த செயலுக்கு தூண்டுகோலாகவும்,உடந்தையாகவும் தற்கொலை செய்து கொண்ட டிரைவர் பணிபுரிந்த வீட்டை சேர்ந்த ஒரு பெண்மணி உள்ளிட்டவர்கள் செயல்பட்டு வருகின்றனர். எங்கே தங்கள் வீட்டில் இறந்தததினால் இறந்தவரின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்க வேண்டும் எனபதற்காகவும், வழக்கை சந்திக்க நேரிடும் எனபதற்காகவும் இது போன்று அடுத்தவர்கள் மீது பழி சுமத்தி போலீசாரின் பொய் வழக்குக்கு துணை போகின்றனர்
போலீசாரின் இந்த அத்துமீறலுக்கு ஊள்ளூர் ஜமாத்கள்,சமூக நல அமைப்புகள்,அனைத்து கட்சிகளும் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்.இது தொடர்ந்தால் நாளை யார் மீது வேண்டுமானாலும் பொய் வழக்கு பதிவு செய்யும் சூழ்நிலை ஏற்படலாம்.

பணம் பறிக்கும் நோக்கத்துடன் கீழக்கரை போலீசார் செயல்பட்டு வருகின்றனர்.கீழக்கரை டிஎஸ்பி சோமசேகர் மற்றும் இன்ஸ்பெக்டர் கனேஷன் ஆகியோர் இதற்கு முழு பொறுப்பு

மேலும் தற்போது கைது செய்யட்டுள்ள முபாரக் வேலை  தேடி வரும் அப்பாவி இளைஞர் .இவருக்கும் இவ்வழக்கிற்கும் என்ன சம்பந்தம்? இது போன்று அப்பாவி இளைஞர்களை கைது செய்வது மூலம் அவர்களை தவறான பாதைக்கு தள்ளிவிடும் போக்கை காவல்துறை செய்து வருகிறது.இது தொடர்ந்தால் கீழக்கரை இளைஞர்கள் பொங்கி எழும் சூழ்நிலை ஏற்படும்
எனவே உடனடியாக தமிழக அரசு தலையிட்டு உண்மை நிலையை கண்டறிய இவ்வழக்கை சிபிசிஐடி போலீஸ் விசாரணைக்கு மாற்ற வேண்டும் இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

 

1 comment:

  1. கண்டிப்பாக அனைத்து ஜாமாத்துகளும் அனைத்து இயக்கங்களும் மற்றும் முக்கிய பிரமுகர்களும் ஒன்றுமையுடன் தட்டி கேட்க வேண்டும் . கொலையே தற்கொலையாக மாற்றுவதும் தற்கொலையே கொலையாக மாற்றுவதும் பெரும்பான்மை சம்பவங்கள் தமிழ் நாட்டில் நடந்து இருக்கிறது என்பது குறிப்பிட தக்கது

    இறந்தவர் குடும்பத்திற்கு கண்டிப்பாக வருத்தம் இருக்கும் அதில் மாற்று கருத்து இல்லை அதே வேளையில் இந்த சம்பவத்தை மாற்று மத சகோதர்கள் தவறை தவறான கண்ணோட்டத்தில் பார்த்தால் உண்மையே என்ன என்பது புரியும் .இப்படி இதில் சம்மந்தமே இல்லாத பலரை வழக்கில் இழுத்து இப்படி அளக்களிப்பது மிக வருந்தக்கது . பிரேதபரிசோதனை ரிபோர்ட் கூட இன்னும் வெளி யிடாமல் இருப்பது இன்னும் புரியாத புதிராகவே இருக்கிறது . இது கொலையா தற்கொலையா என்பது அறிவிக்காமல் இப்படி பார்ப்பவர்களை எல்லாம் கைது செய்வது தவறான அணுகுமுறையாகும்

    ReplyDelete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.