Sunday, August 18, 2013

நலிவடைந்து வரும் மண்பாண்ட தொழில்! அரசு உதவ கோரிக்கை!குளிர்ச்சியாக தண்ணீர் அருந்த பிரிட்ஜ் போன்ற நவீன சாதனங்கள் வந்தாலும் மண் பாணை தண்ணீருக்கு ஈடாகாது அது போல்சமையலுக்கு குக்கர், நான் ஸ்டிக் என விதவிதமான பாத்திரங்கள் வந்தாலும் மண்பானைக்கு இன்னும் மவுசு குறையவில்லை. மண்பானையில் தயார் செய்யும் உணவு பதார்த்தங்களின் ருசியே தனிதான்.

 ராமநாதபுரதை அடுத்த மானாமதுரை மண்பாண்ட பொருட்கள் உற்பத்தி செய்வதில் பிரசித்தி பெற்ற ஊராகும். தமிழகம் முழுவதும் மானாமதுரை மண்பாண்ட பொருட்களை பொதுமக்கள் விரும்பி வாங்குகின்றனர்.
மானாமதுரையில் கிடைக்கும் மண் உறுதி மிக்கவை என்பதால் இங்கு எப்போதும் மண்பாண்ட உற்பத்தி சீசனுக்கு ஏற்ப அதிகளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது.  விதவிதமான மண் கூஜாக்கள், ஜாடிகள், பானைகள் தயார் செய்யப்பட்டு தமிழகம் முழுவதும் லாரிகளில் அனுப்பப்பட்டு வருகிறது. இதுதவிர மண்ணில் செய்யப்பட்ட கடம் இசை கருவியை இந்தியாவில் உள்ள இசைக்கலைஞர்கள் இங்கு வந்து பயன்படுத்தி வாங்கி செல்கின்றனர்.

 விதவிதமான மண் விளக்குள், மண்பாண்ட பொருட்கள் ஆகியவை அந்தமான், லட்சத்தீவு, மாலத்தீவு போன்ற தீவு பிரதேசங்களிலும் மிகுந்த வரவேற்பு உள்ளது. கோடையை சமாளிக்க குளிர்ந்த நீரை மண்சுவையுடன் குடிக்க ரூ. 20 முதல் ரூ.200 வரை கூஜா பானைகள் தயார் செய்யப்பட்டு வருகிறது.

ஆனால் கடந்த சில வருடமாக போதிய களி மண் கிடைக்காமல் மண் பாண்ட தொழிலாளிகள் தவித்து வருகின்றனர். அதிக விலைக்கொடுத்தாலும் போதிய அளவு களிமண் கிடைக்காத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் சுள்ளைக்கு தேவையான விறகு விலை உயர்வு, கூலி அதிகரிப்பு போன்ற பல்வேறு காரணங்களால் மண் பாண்ட தொழிலை நம்பி இருந்தவர்களுக்கு போதிய வருமானம் கிடைக்காமல் தவித்து வருகிறார்கள். மேலும் களி மண் எந்த குளத்தில் இருந்து எடுககப்படுகிறதோ அந்த குளத்தில் களிமண் எடுக்கலாம் என பொதுப்பணித்துறையிடம் இருந்து தடையில்லா சான்று வாங்கி புவியியல் மற்றும் சுரங்கத்துறையிடம் சமர்ப்பிக்க வேண்டும். அவர்கள் கலெக்டர் உத்தரவின் பேரில் களிமண் எடுக்க அனுமதி தருவார்கள்.  லாரிகளில் வெளியூர்களுக்கு அனுப்பும் போது பல உடைந்து விடும் இப்படி பல் சோதனைகளை கடந்து தான் விற்பனை செய்து மிக குறைந்த லாபம் ஈட்ட்ட முடிகிறது

இதனால் பலர் மண் பாண்ட தொழிலை விட்டு விட்டு கட்டிடதொழில், செங் கல் சூளை வேலை, கூலிவேலைக்கு சென்று வருகின்ற னர். மண்பாண்ட தொழிலி லேயே ஊறியவர்கள் தொடர்ந்து மண் பாண்ட கலை அழியாமல் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.


இது குறித்து தங்கம் ராதாகிருஸ்ணன் கூறியதாவது,

உடலுக்கு ஆரோக்கியத்தை தரக்கூடிய மண் பாணடங்கள் உற்பத்தி நாளுக்கு நாள் குறைந்து வருகிறது.ஒரு காலத்தில் கீழக்கரை மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் மண பாணடங்கள் விறபனை அமோகமாக இருக்கும் காலப்போக்கில் இத்தொழில் நலிவடைந்து விட்டது.அரசாங்கம் இத்தொழில்லை ஊக்கப்படுத்த மண் பாணடங்கள் விற்பனை நிலையங்களை ஏற்பாடுத்த வேண்டும் இதன் மூலம் மண் பன்டபொருளகளுக்கு நல்ல விலை கிடைக்கைகும்.மக்களும் ஆதரவு தருவர்கள்.எனவே இத்தொழில் நலிவடையாமல் காப்பற்ற முடியும் என்றார்.

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.