Monday, August 26, 2013

கீழக்கரை நகராட்சி நிர்வாகத்திற்கு ஜவஹிருல்லா எம்.எல்.ஏ கண்டனம்!.

கீழக்கரை முத்துச்சாமிபுரம் மக்களிடம் ராமநாதபுரம் எம்எல்ஏ ஜவாஹிருல்லா குறைகள் கேட்டார்.
 
பொதுமக்களுக்கு போதிய அடிப்படை வசதிகளை நிறைவேற்றித் தராத கீழக்கரை நகராட்சி நிர்வாகத்திற்கு ராமநாதபுரம் எம்எல்ஏ ஜவாஹிருல்லா கண்டனம் தெரிவித்தார்.
 
கீழக்கரை நகராட்சி 2வது வார்டுக்கு உட்பட்ட முத்துச்சாமிபுரத்தில் 200 அருந்ததியின குடும்பங்கள் வசிக்கின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் கீழக்கரை நகராட்சி துப்புரவு பணியாளர்களாக உள்ளனர். இப்பகுதியில் தெருவிளக்கு, குடிநீர், கழிப்பறை, சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் போதியளவு இல்லை. கழிப்பறை வசதியின்மையால் திறந்த வெளியிலேயே மலம் கழிப்பதால் கொசுக்கள் உற்பத்தியாகி தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளதாக ஜவாஹிருல்லா எம்எல்ஏவுக்கு தொடர்ந்து புகார்கள் சென்றன. இதையடுத்து நேற்று அவர், முத்துச்சாமிபுரம் பகுதியை நேரில் ஆய்வு செய்தார்.
 
கீழக்கரை நகராட்சி துப்புரவு தொழிலாளர் சங்கத் தலைவர் ஹமீதுகான் கூறுகையில்,
 
இப்பகுதியில் கடந்த பல ஆண்டுகளுக்கு முன் 3 கழிப்பறைகள் கட்டப்பட்டு தண்ணீர் வசதி இன்றி இது நாள் வரை பயன்பாட்டுக்கு விடாமல் பூட்டு போட்டு வைக்கப்பட்டுள்ளது. தற்போது மீண்டும் மராமத்து பணி செய்ய ரூ.8 லட்சத்திற்கு டெண்டர் விடப்பட்டு ஒரு மாதமாகியும் இதுவரை பணி துவங்கப்படவில்லை. குடிநீர், தெருவிளக்கு, சாலை வசதி இல்லை என நகராட்சியில் பல முறை புகார் கொடுத்தும் எந்நடவடிக்கையும் இல்லை. மழைக்காலம் துவங்கினால் வீடுகளில் தண்ணீர் புகுந்து படுக்கக்கூட இடமின்றி பெரும் சிரமத்திற்கு உள்ளாவர் என்றார்கீழக்கரை நகராட்சி நிர்வாகத்திற்கு ஜவஹிருல்லா எம்.எல்.ஏ கண்டனம்!.
 
ஜவாஹிருல்லா எம்எல்ஏ கூறியதாவது:
 
 ஊரையே துப்புரவு செய்யும் தொழிலாளர்களின் இருப்பிடம் உள்ள இடத்தில் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்காமல் தூங்கும் நகராட்சி நிர்வாகத்தை கண்டிக்கிறேன். ரூ.5 லட்சம் செலவில் கட்டிய கழிப்பறைக்கு தண்ணீர் வசதி செய்து கொடுக்காமல் பூட்டி வைத்து மீண்டும் மராமத்து செய்ய நிதி ஒதுக்கி பணி செய்யாமல் காலம் தாழ்த்துவது இப்பகுதியை புறக்கணிப்பதாக உள்ளது. நகராட்சி நிர்வாக செயல் திறமையின்மையை முதல்வர், கலெக்டர் கவனத்திற்கு கொண்டு செல்வேன். தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து இப்பகுதிக்கு குடிநீர் வசதி செய்ய ஏற்பாடு செய்வேன். இவ்வாறு அவர் கூறினார்.
 
நகராட்சி துணைத்தலைவர் ஹாஜாமுகைதீன், நகர் தமுமுக தலைவர் முகமது சிராஜூதீன், நிர்வாகிகள் சேகுதாவூது சாதிக், ரைஸ் இபுராகிம், மாவட்ட செயலர் அன்வர்அலி, கவுன்சிலர்கள் சாகுல் ஹமீது, முகைதீன் இபுராகிம், முன்னாள் கவுன்சிலர் வேலுச்சாமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

5 comments:

 1. MLA KILAKARAIL AAYU SEIUM POTHELLEM ATHU SEIVEN ETHI SEIVEN ENDRU SOLLUVATHU VERUM VAI SAVADA MADUM THAN AANAL ONNUM NADAKKATHU,

  ReplyDelete
 2. 1,Makkal vasika kudiya pakuthil kuppaikal koddapatukirathu ithu kaalam kaalama nadakurathu,ethanal pala thodru noi paravu kirathau , etarkku area MLA endra vitha thil madru vazhi seithara namma MLA?
  2,Kilakarai thani thaluka office enna achu ?
  3,kilakarail anathu pakuthium kuriya pathaiya irukkindrathu,vakanam selluvatharkku migaum idaiuru earpadukindrathu, etharkku eathum thirvu kondara naam MLA ?
  4,kilakarail sudralavu perithaki vittathu(oorum perithaki vittathu, makkal thokaium athikamaki vittathu) makkal mukkiyamana pakuthikku sedru vara,market,fish market,police station , bank ,post office, hospital ,beach,school,college,masuthi,kovil,church,akirya pakuthikku sella ,mini Bus unda, atharkku eathum ,vazhi kandara namathu MLA?
  5,kailkarail degree paditha pengal athikam, paditha penkalukku velaivaipu earpatutha eathum nadavadikai eatuthara MLA? Atleast oru Teacher Training college open seivatharkku kural koduthara namathu MLA?
  6,namathu ooruil ulla ilangerkalukku ethanai naparukku thozil vaippu uthavi seithar, arasidam iruthu thozil vaippu pedru koduthar MLA?
  7,Kilakarail Thozhil Valardchikku enna nadavadikai eatuthar? Enna sathitHar MLA?
  Aayu seikiren aayu seikiren eadru ean veen pantha? namathu MLA kku, eathaium sathikka povathillai enpathu madrum nalla purikirathu, avarukkum makkalukkum,

  ReplyDelete
 3. MLA கீழக்கரைஇல் ஆய்உ செய்யம் பொது எல்லாம் அது செய்வேன் இது செய்வேன் என்று சொல்வது வெறும் வாய் சாவட மட்டும் தான் அனால் ஒன்னும் நல்லது நடக்காது மக்களுக்கு ,

  1,மக்கள் வசிக்ககுடிய பகுதில் குப்பைகள் கொட்டபடுகிறது இது காலம் காலமாக நடக்கிறது,இதனால் பல நோய்கள் பரவுகிறது, இதற்க்கு ஏரியா MLA என்ற விதத்தில் வேறு வழி கண்டரா , நம்ம MLA?
  2,கீழக்கரை இல் தனி தாலுக்க அக்கபோறேன் சொன்னார் , இப்ப தனி தாலுக்க ஆபீஸ் என்ன ஆச்சு ?
  3,கீழகரைல் அணைத்து பகுதியும் குறிகிய பாதையாக இருக்கின்றது ,வாகனம் செல்லுவதற்கு மிக அதிகமான இடையுறு ஏற்படுகிறது, இதற்க்கு ஏதும் தீர்வு கண்டரா நாம் MLA ?
  4,கீழகரைல் சுற்று பரப்பு பெரிதாகி விட்டது (ஊரு பெரிதாகி விட்டது , மக்கள் தொகையும் அதிகமாகி விட்டது ) மக்கள் முக்கியமான பகுதிக்கு சென்று வர,மார்க்கெட் ,மீன் மார்க்கெட், போலீஸ் ஸ்டேஷன் , பேங்க் ,போஸ்ட் ஆபீஸ் , HOSPITAL,கடல்கரை ,ஸ்கூல்,காலேஜ் ,மசூதி,கோவில் ,சர்ச் ,ஆகிய பகுதிக்கு செல்ல,மினி பஸ் உண்ட ?அதற்கும் ஏதும் வழி கண்டரா MLA?
  5,கீழகரைல் டிகிரி படித்த பெண்கள் அதிகம் ,படித்த பெண்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்த ஏதும் நடவடிக்கை எடுத்தாரா MLA? ஒரு டீச்சர் ட்ரைனிங் காலேஜ் ஓபன் செய்வதற்கு குரல் கொடுத்தாரா நமது MLA?
  6,நமது ஊரில் உள்ள இளைய தலை முறைனர் எத்தனை நபருக்கு தொழில் வாய்ப்பு உதவி செயதார்?, அரசிடம் இருந்து தொழில் வாய்ப்பு பெட்று கொடுத்தாரா MLA?
  7,கீழகரைல் தொழ்லில் வளர்ச்சிக்கு என்ன நடவடிக்கை எடுத்தார் ? என்ன சாதித்தார் MLA?
  ஆயுஉ செய்கிறேன் ஆயு உ செய்கிறேன் என்று ஏன் வீண் பந்தா? நமது MLA க்கு ,ஏதும் சாதிக்க போவதில்லை என்பது மட்டும் நல்லா புரிகிறது கீழக்கரை மக்களுக்கும் , அவருக்கும் ,

  ReplyDelete
 4. MLA கீழக்கரைஇல் ஆய்உ செய்யம் பொது எல்லாம் அது செய்வேன் இது செய்வேன் என்று சொல்வது வெறும் வாய் சாவட மட்டும் தான் அனால் ஒன்னும் நல்லது நடக்காது மக்களுக்கு ,

  1,மக்கள் வசிக்ககுடிய பகுதில் குப்பைகள் கொட்டபடுகிறது இது காலம் காலமாக நடக்கிறது,இதனால் பல நோய்கள் பரவுகிறது, இதற்க்கு ஏரியா MLA என்ற விதத்தில் வேறு வழி கண்டரா , நம்ம MLA?
  2,கீழக்கரை இல் தனி தாலுக்க அக்கபோறேன் சொன்னார் , இப்ப தனி தாலுக்க ஆபீஸ் என்ன ஆச்சு ?
  3,கீழகரைல் அணைத்து பகுதியும் குறிகிய பாதையாக இருக்கின்றது ,வாகனம் செல்லுவதற்கு மிக அதிகமான இடையுறு ஏற்படுகிறது, இதற்க்கு ஏதும் தீர்வு கண்டரா நாம் MLA ?
  4,கீழகரைல் சுற்று பரப்பு பெரிதாகி விட்டது (ஊரு பெரிதாகி விட்டது , மக்கள் தொகையும் அதிகமாகி விட்டது ) மக்கள் முக்கியமான பகுதிக்கு சென்று வர,மார்க்கெட் ,மீன் மார்க்கெட், போலீஸ் ஸ்டேஷன் , பேங்க் ,போஸ்ட் ஆபீஸ் , HOSPITAL,கடல்கரை ,ஸ்கூல்,காலேஜ் ,மசூதி,கோவில் ,சர்ச் ,ஆகிய பகுதிக்கு செல்ல,மினி பஸ் உண்ட ?அதற்கும் ஏதும் வழி கண்டரா MLA?
  5,கீழகரைல் டிகிரி படித்த பெண்கள் அதிகம் ,படித்த பெண்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்த ஏதும் நடவடிக்கை எடுத்தாரா MLA? ஒரு டீச்சர் ட்ரைனிங் காலேஜ் ஓபன் செய்வதற்கு குரல் கொடுத்தாரா நமது MLA?
  6,நமது ஊரில் உள்ள இளைய தலை முறைனர் எத்தனை நபருக்கு தொழில் வாய்ப்பு உதவி செயதார்?, அரசிடம் இருந்து தொழில் வாய்ப்பு பெட்று கொடுத்தாரா MLA?
  7,கீழகரைல் தொழ்லில் வளர்ச்சிக்கு என்ன நடவடிக்கை எடுத்தார் ? என்ன சாதித்தார் MLA?
  ஆயுஉ செய்கிறேன் ஆயு உ செய்கிறேன் என்று ஏன் வீண் பந்தா? நமது MLA க்கு ,ஏதும் சாதிக்க போவதில்லை என்பது மட்டும் நல்லா புரிகிறது கீழக்கரை மக்களுக்கும் , அவருக்கும் ,

  ReplyDelete
 5. கீழகரைல் மெயின் ரோடு மிக குறிகிய பாதையாக இருப்பதால் ,முக்கு ரோட்டில் இருந்து பைத்துல்மால் வழியாக கடல்கரை வரைம ரோடினை விரிவு படுத்த வேண்டும், இப்பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றுவதோடு ,மெயின் ரோட்டில் வாகனம் செல்வதற்கு இடையுறாக இருக்கும் பிரவைட் பில்டிங் வீடு , வெட்று இடத்தினை நகராட்சி கையகம் படுத்தி , முக்கு ரோட்டில் இருத்து கடல் கரை வரையும் உள்ள பாதை இருவழி பாதையாக மற்ற வேண்ட்டும் ,மற்றும் மெயின் ரோட்டில் இருந்து முஸ்லிம் பஜ்சர் வழியாக அப்பா பள்ளி மற்றும் க்ஹைரதுள் ஜலாலிய ஸ்கூல் வரைம பாதைகளை விரிவு படுத்த வேண்டும் , மெயின் ரோடில் இருத்து புதிய பஸ் ஸ்டாண்ட் செல்லும் பாதை மிக குறிகிய பாதையாக இருப்பதால் அப்பகுதில் உள்ள பில்டிங் அரசு கையகம் படுத்துவதை தவிர வேறு வழி இல்லை ,
  கீழகரைல் முக்கிய பாதைகளை விரிவு படுத்துவதோடு , பள்ளி , கல்லுரி , போலீஸ் ஸ்டேஷன் , அரசு மருத்துவமனை , டெலிபோன் ஆபீஸ் , மசூதி , கோவில் , சர்ச்சு, கடல்கரை , மீன் மார்க்கெட், மற்றும் அருகில் உள்ள கிராம மக்கள் வந்து செல்வதற்கு வசதியாகவும் மினி பஸ் அதிகம் அளவில் இயக்க வேண்டும் , மற்றும் 500 பிளாட் , புது கிழக்கு தெரு , மீனாட்சி புறம் , பழைய குத்பபள்ளி , புதிய பேருந்து நிலையம் , பழைய பேருந்து நிலையம் ஆக்கிபகுதிகளை மினி பஸ் செல்லும் பாதையாக மாற்றி தர வேண்டும் ,இந்து பஜ்சர் மிக குறிகிய பாதையாக இருபதாலும் , பல வருடம் கடந்த பில்டிங்கும் மக இருப்பதால் , மார்கெட்டை அப்பகுதில் இருந்து வேறு ஓரு பகுதிக்கு மற்ற வேண்டும் ,

  ReplyDelete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.