தாசிம் பீவி மகளிர் கல்லூரி
கீழக்கரை இஸ்லாமியா பள்ளி
சதக் கல்லூரி
கண்ணாடி வாப்பா பள்ளி
நாடார் பள்ளி
மக்தூமியா பள்ளி
கீழக்கரை, ஆக. 17:
கீழக்கரை மற்றும் சுற்றுவட்டாரத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளிலும் மற்றும் காங்கிரஸ் சார்பில் 67வது சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது.
இஸ்லாமியா பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் ரவி, ஜோசப்சார்த்தோ, தனலெட்சுமி மற்றும் முதல்வர் மேபல் ஜஸ்டஸ், நிர்வாக அலுவலர் மலைச்சாமி முன்னிலையில் தாளாளர் முகைதீன் இபுராகிம் கொடி ஏற்றினார்.
மஹ்தூமியா உயர்நிலைப்பள்ளியில் பழைய குத்பா பள்ளி ஜமாஅத் தலைவர் ஹாஜாமுகைதீன், மீனவர் கூட்டுறவுசங்கத் தலைவர் லுக்மான் ஹக்கீம் முன்னிலையில் முன்னாள் மாணவர் முகமது ராஜாக்கான் கொடி ஏற்றினார். தலைமை ஆசிரியர் கிருஷ்ணவேணி வரவேற்றார். ஆசிரியை மேரிஜெனட் நன்றி கூறினார்.
ஹமீதியா ஆண்கள் உயர்நிலைப்பள்ளியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஹசன்அலி, மக்கள் சேவை அறக்கட்டளை நிறுவனர் உமர் முன்னிலையில் யூசுப்சுலைஹா மருத்துவமனை இயக்குநர் டாக்டர் செய்யது அப்துல்காதர் கொடி ஏற்றினார். தலைமை ஆசிரியர் ஹசன் இபுராகிம் வரவேற்றார். ஆசிரியர் ஆறுமுகம் நன்றி கூறினார்.
முகைதீனியா மெட்ரிக் பள்ளியில் கல்விக்குழு தலைவர் சேகுமுகைதீன், துணைத்தலைவர் முகைதீன் இபுராகிம் தம்பிவாப்பா மற்றும் உறுப்பினர்கள் டாக்டர் ராசிக்தீன், அகமதுமிர்ஷா, பசீர் அகமது முன்னிலையில் நகராட்சி கமிஷனர் ஐயூப்கான் கொடி ஏற்றினார். முதல்வர் தேவபுவனேஷ்வர் வரவேற்றார். சுதந்திரதேவி நன்றி கூறினார்.
கைரத்துல் ஜலாலியா தொடக்கப்பள்ளியில் சம்சுதீன் ஆலிம் கிராஅத் ஓதினார். செய்யது இபுராகிம், மேல்நிலைப்பள்ளி தாளாளர் டாக்டர் ஜகுபர்சாதிக், தலைமை ஆசிரியர் சுரேஷ் குமார் மற்றும் ஜமாஅத் நிர்வாகிகள் முன்னிலையில் சேகு அபூபக்கர் தலைமை வகித்து கொடியை ஏற்றினார்.
கைரத்துல் ஜலாலியா மேல்நிலைப்பள்ளியில் கிழக்குத்தெரு முஸ்லீம்
ஜமாஅத் தலைவர் தலைமையில் கல்விக்குழு உறுப்பினர்கள் முன்னிலையில் பள்ளி தாளாளர் டாக்டர் ஜகுபர்சாதிக் கொடியை ஏற்றினார்.
முகமது சதக் பொறியல் கல்லூரியில் முதல்வர் முகமது ஜகாபர் கொடி ஏற்றினார். மக்கள் தொடர்பாளர் நஜிமுதீன் வரவேற்றார். துறைத்தலைவர் ராமராஜ் நன்றி கூறினார்.
முகமது சதக் பாலிடெக்னிக் கல்லூரியில் துணை முதல்வர் நவநீதராஜன் கொடி ஏற்றினார்.
செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதல்வர் அபுல்ஹசன் சாதலி தலைமையில் இந்தியன் வங்கி மேலாளர் லிடியா தேவகிருபை முன்னிலையில் பாங்க் ஆப் இந்தியா வாணிகிளை மேலாளர் சுந்தராஜன் தேசிய கொடியை ஏற்றினார்.
தாசிம்பீவி அப்துல்காதர் மகளிர் கல்லூரியில் முதல்வர் சுமையா தாவூது தலைமையில், சீதக்காதி அறக்கட்டளை பொது துணைமேலாளர் சேக்தாவூது, மாணவர்கள் பேரவை தலைவர் சுமையா ரபி முன்னிலையில் டாக்டர் கியாதுதீன் கொடி ஏற்றினார்.
திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் நசியா பேகம், கவுன்சிலர் மணிமேகலை முன்னிலையில் தலைமை ஆசிரியர் வன்னிமுத்து கொடி ஏற்றினார்.
கீழக்கரை போலீஸ் ஸ்டேசனில் எஸ்ஐகள் ரத்தினவேலு, ஆறுமுகத்தரசன், முனீஸ்வரன், கனகராஜ் முன்னிலையில் இன்ஸ்பெக்டர் கணேசன் கொடி ஏற்றினார்.
நகர் காங்கிரஸ் சார்பில் முஸ்லீம் பஜாரில் நகர் தலைவர் ஹமீதுகான் தலைமையில் நிர்வாகிகள் சந்திரன், வேலாயுதம் முன்னிலையில் ஜின்னாசாகிபு கொடி ஏற்றினார்.
No comments:
Post a Comment
செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.