Saturday, August 31, 2013

கீழக்கரை நகராட்சி கூட்டம் திடீர் ஒத்திவைப்பு! சட்ட விதிகளுக்கு மாறாக கூட்டம் நடைபெற இருப்பதாக துணை சேர்மன் புகார் கூறியிருந்தார்.



File picture   .பழைய படம்

 
கீழக்கரை நகரசபை கூட்டம் அதன் தலைவர் ராவியத்துல் கதரியா தலைமையில் நேற்று(30ந்தேதி) நடைபெறுவதாக அறிவிக்கப் பட்டிருந்தது. இதற்கான கூட்ட மன்ற பொருள் குறித்த அஜெண்டா கவுன்சிலர்கள் உள்ளிட்ட பலருக்கு அனுப்பப்பட்டிருந்தது.
 

file picture .பழைய படம் கவுன்சிலர்களுடன் துணை சேர்மன் ஹாஜா முஹைதீன்

முன்னதாக நகராட்சி துணை சேர்மன் ஹாஜா முஹைதீன் கூறியிருந்த மனுவில்..

 நடைபெறவிருக்கும் நகராட்சி கூட்டம் சட்ட விதிகளுக்கு மாறாக உள்ளது.சட்டப்படி கூட்டம் நடைபெறுவதற்கு மூன்று நாட்களுக்கு(78 மணிநேரம் அரசு வேலை நாட்களில்) முன் கூட்டத்திற்கான அஜெண்டாவை கவுன்சிலர்களுக்கு அனுப்பவேண்டும். ஆனால் 30ந்தேதி கூட்டம் நடத்துவதற்கு அரசு விடுமுறை நாளான(ஆக 28ல்) அனைத்து கவுன்சிலர்களுக்கும் அஜெண்டா அனுப்பட்டுள்ளது.எனவே சட்டவிதிகளுக்கு மாறாக இக்கூட்டம் நடைபெறுகிறது என மனுவில் கூறியிருந்தார்.இம்மனுவை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு அனுப்பியிருந்தார்.

 கவுன்சிலர் சாஹுல் ஹமீது இது போன்று மனு அளித்ததோடு நீதிமன்றம் மூலம் நடவடிக்கை எடுத்து கூட்டம் செல்லாது என வழக்கு தொடர்வேன் என கூறியிருந்தார்

இந்தநிலையில் நிர்வாக காரணங்களுக்காக கூட்டத்தை ஒத்தி வைப்பதாக கீழக்கரை நகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.

 

 
 

 
 

 

4 comments:


  1. Nagaradchil nadakkum , nagar mandram kudam nigalchinai makkalukku local T.v mulam neredi oliparappu seiya vendum,
    Nagaradchil kuttam mulam edukku thirmanakal makkalukku theriapututhu vithamaka , anaithu vittirkkum notice kodukkapada vendum,
    Makkalin karuthinai pedru athan meethu vivatham seiyapada vendum,
    Kilakarai makkalukku kidaika vendiya arasin nala thidam uthavikalai pedru thara vedum

    ReplyDelete
  2. KILAKARAI NAGARADCHI KUTTATHIL EDUKKU MUDIUKAL, THIRMANAKALAI, WEB SITE: KILAKARAI TIMES, NEWS PAPER, OFFICE AL WEB SIDE MULAM MAKKALUKKU THERIYA PADUTHA VENDUM

    ReplyDelete
  3. என்னடா நடக்குது....... இங்கே

    ReplyDelete
    Replies
    1. மங்காத்தாவின் தங்கச்சி மகன்August 31, 2013 at 8:25 PM

      மக்களின் வரி பணத்தை சூறையாடி தின்று ஏப்பம் விட கூத்தடிக்கிறார்கள். நாம் ஜோராக கை தட்டுவோம். வரும் கூட்டத் தொடரில் நகரில் ஒன்பது இடங்களில் 54 லட்சம் செலவில் பொது கழிப்பிடம் கட்ட தீர்மானம் நிறைவேற்ற போகிறார்களாம்.

      Delete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.