கீழக்கரை யில் ரோட்டரி சங்கம் சார்பில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி மற்றும் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி நிகழ்ச்சி நடந்தது.
ரோட்டரி சங்கத் தலை வர் டாக்டர் ராசிக்தீன் தலை மை வகித்தார். முகமது சதக் பாலிடெக்னிக் முதல் வர் அலாவுதீன், ராமநாதபுரம் ரோட்டரி சங்க நிர்வாகி டா க்டர் சின்னத் துரை அப் துல்லா, காங்கிரஸ் மாவட்ட தலைவர் ரவிசந்திர ராம வன்னி, ரோட்டரி செயலா ளர் சுப்பிரமணியன், மக்கள் சேவை அறக்கட்டளை நிறுவனர் உமர் முன்னிலை வகித்தனர்.
ராமநாதபுரம் சுபவனம் தாய்மான சுவாமி ராம் குமார், கீழக்கரை சி.எஸ்.ஐ தேவ ஆலய பாதிரியார் தேவதாஸ் ராஜன் பாபு, வடக்குதெரு ஜமாஅத் கத்தீபு சாகுல் ஹமீது ஆகியோர்,
இந்து,முஸ்லிம்,கிருஸ்துவர்கள் அண்ணன் தம்பிகளாக ஒற்றுமையாக உள்ளோம் எனபதை இது போன்ற நிகல்ச்சிகள் உணர்த்துகிறது.மதங்கள் அனைத்து ஒற்றுமையை வலியுறுத்துகின்றன.
நோன்பு நோற்பதால் ஏற்படும் நன்மைகள், ஜகாத் (ஏழைகளுக்கு உதவி) செய்வ தால் கிடைக்கும் நன்மைகள், ஜாதி, மத வேறுபாடின்றி ஒற்றுமையுடன் வாழ்ந்தால் கிடைக்கும் பலன்கள் குறித்து பேசினர்.
இதில் மாவட்ட துணை ஆளுநர் முருகேசன் மற்றும் நிர்வாகிகள் ஆசாத், சுகுமார், ஹசன், செய்யது அகமது, லோகநாதன், கார்த்திகே யன், மற்றும் கைரத்துல் ஜலாலி யா மேல்நிலைப்பள்ளி தாளாளர் டாக்டர் சாதிக், தொட க்கப்பள்ளி முன்னாள் தாளாளர் செய்யது இபுராகிம், சமூகநல சேவை இயக்கம் தலைவர் அமானுல்லா, செயலாளர் தங்கம் ராதகிருஷ்ணன், நகராட்சி துணைத்தலைவர் ஹாஜா முகைதீன் உட்பட் ஏராளமான சமூகநல ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment
செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.