Thursday, August 8, 2013

ஐக்கிய‌ அர‌பு அமீர‌க‌த்தில் பெருநாள்! (ப‌ட‌ங்க‌ள்)!







 

 
 
 


ப‌ட‌ விள‌க்க‌ம்:கீழ‌க்க‌ரையை சேர்ந்த‌ ந‌ண்ப‌ர்க‌ள்

 ஈகை திருநாளையோட்டி இன்று அமீர‌க‌த்தின் அபுதாபி, துபாய், ஷார்ஜா, அல்அய்ன், அஜ்மாக்ன், ஃபுஜைரா, உம்மல் குய்ன் மற்றும் ராசல்கைமா உள்ளிட்ட‌ ப‌ல்வேறு இட‌ங்க‌ளில் பெருநாள் தொழுகை ந‌டைபெற்ற‌து.

அமீரகத்தில் துபாய் நகரில் உள்ள தேரா ஈத்கா திடலில் மக்கள் பெருநாள் சிறப்புத் தொழுகையை தொழுதனர்.

அதிகாலை  முதலே மக்கள் ஈத்கா திடலை நோக்கி குவிய‌ தொடங்கினர். தக்பீர் ஒலி முழக்கம் விண்ணை முட்டியது.தொழுகை நடைபெற்றதுதொழுகை முடிந்ததும் குத்பா பேருரை நடைபெற்றது.

இறுதியாக மக்கள் ஒருவரை ஒருவர் சகோதரப் பாசத்துடன் கட்டித் தழுவி தியாகத் திருநாள் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.
பெண்களும் தொழுகையில் கலந்து கொண்டு தங்களுக்குள் வாழ்த்துக்களை பகிர்ந்துகொண்டனர்.

பல்வேறு நாடுகளை சார்ந்த இஸ்லாமிய‌ மக்கள் தொழுகையில் க‌ல‌ந்து கொண்ட‌ன‌ர்.


 

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.