Friday, August 30, 2013

கீழக்கரையில் நிலத்தடி நீர் குறைந்தது! கிணறுகள் வறண்டது ! ஆழ்துளையிட்டு ஆழப்படுத்தும் பணிகள் தீவிரம்!


இடம் : அரசு மருத்துவமனை ,கீழக்கரை

கீழக்கரையில் பெரும்பாலான வீடுகளில் கிணறுகள் உள்ளது.நகரின் முக்கிய குடிநீர் ஆதாரமே கிணற்று நீர்தான். இந்நிலையில் கீழக்கரை மற்றும் சுற்றுப்புற பகுதிகளில்,பசுமை அளவு, மழை பெய்வது உள்ளிட்டவை குறைந்து போனதால் இம்முறை பெரும்பாலான வீடுகளில் கிணற்று நீர் வற்றி வறண்டு விட்டது. தற்போது நிலத்தடி நீர் மட்டம் எட்டாத தூரத்திற்கு கீழே சென்றுவிட்டது. இதனால் தண்ணீர் மோட்டார் மற்றும் கம்ப்ரசரை இயக்கினால் வெறும் காற்று மட்டுமே வருகிறது. எனவே பல வீடுகளில் ஏற்கனவே போடப்பட்டுள்ள கிணறுகளை ஆழ்துளையிட்டு ஆழப்படுத்தும் பணிகள் நடைபெறுகிறது.

சென்ற ஆண்டு நவீன‌ கருவிகள் மூலம கீழக்கரையில் காற்றின் ஈரப்பதம் ,மழையின் அளவு,ஆக்சிஜென் அளவு ,போன்ற பல் வேறு கணக்கெடுப்புகள் செய்து ஆய்வு செய்தார்கள்.
 
ஆய்வுக்கு பின் அவர்கள் கூறியதாவது ,கீழக்கரையில் பசுமை அளவு 38 % இருக்க வேண்டும் ஆனால் இருப்பது 21 % மட்டும் இது மிகவும் குறைவாகும் பசுமை அளவு மிக குறைந்த பட்சம் 33 % இங்கு அமைந்திருக்க வேண்டும் எனவே கீழக்கரை பகுதிகளில் பசுமை அளவை அதிகரிக்க வீட்டுக்கு ஒரு மரம் வளர்க்க வேண்டும் அல்லது வீட்டின் மாடியில் ஆக்சிஜென் தரக்கூடிய சிறிய மரம் அல்லது செடியை வளர்க்க வேண்டும்.
இது போன்ற முறைகளை பின்பற்றவில்லை என்றால் பிற்காலத்தில் மழையளவு குறையும்,நிலத்தடி நீர் குறையும் ,இயற்கை மாற்றத்தால் மனிதர்களுக்கு பல்வேறு பாதிப்புகளை உண்டாகலாம்.இயற்கை சீற்றம் நிகழவும் வாய்ப்பு உள்ளது   என தெரிவித்து சென்றார்கள்

இதனை தொடர்ந்து  ஆயிரக்கணக்கான வீடுகளில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு முறையாக பராமரிக்கப்படாமல், நிலத்தடி நீர் ஆதாரம் குறைந்துள்ளது. இதுகுறித்து கீழக்கரை நகராட்சி மூலம் பொதுமக்களுக்கு ஆலோசனை கூறி, மறு சீரமைப்பு செய்ய அறிவுறுத்தப்பட்டது.

இதுகுறித்து காதர் என்பவர் கூறியதாவது,
எனக்கு தெரிந்த காலத்திலிருந்து இது போன்ற நிலை ஏற்பட்டதில்லை.கிணற்றை மேலும் ஆழப்படுத்த  ரூ 3500 வரை கேட்கிறார்கள்.அரசாங்கம் வீடுகளி மழைநீர் சேகரிப்பு ,தண்ணீர் சிக்கனம் குறித்து இன்னும் அதிகமாக பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டும்.மரங்கள் குறைந்தால் மழை குறையும் என்ற அடிப்படையில் மரம் வளர்ப்பது ஒரு பக்கம் இருந்தாலு இருக்கும் மரத்தை வெட்டாமல் பாதுகாக்க

நடவடிக்கை எடுக்க வேண்டும்.இப்படி தொடர் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே நிலத்தடி நீரை அதிகப்படுத்தி பாதுகாக்க முடியும்

 

2 comments:

 1. மங்காத்தாவின் தங்கச்சி மகன்August 30, 2013 at 8:06 PM

  மழை நீர் சேகரிப்பின் மகத்துவத்தை பூரணமாக உணர்ந்ததின் பயனாக எனது வீட்டில் கிணற்றைச் சுற்றி விழும் மிகக் குறைந்த அளவு மழை நீரைத் தவிர மற்றவை அனைத்தும் கிணற்றுக்குள் செல்லும் விதமாக குழாய்களை அமைத்து பயன் அடைந்தேன்.

  என் வீட்டு கிணற்ருக்குள் செல்லும் மழை நீர், ஊற்றுக் கண் வழியாக அடுத்த் வீட்டு,எதிர் வீட்டு,சுற்ற வட்டார கிணறு களுக்கு சென்றடையும். என்னைப் போலவே அனைவரும் அமைத்துக் கொண்டால் மட்டுமே நிலத்தடி நீர் மள மள் என்று நிச்சயமாக உயரும்.

  மேலும் ஊரை சுற்றியும் நீர் நிலைகள் இருந்தால் நிலத்தடி நீரமட்டம் வெகு சீக்கிரத்தில் வற்றாமல் பாதுகாக்கப்படும்.இதற்கு ஆளும் அரசின் ஒத்துழைப்பும் கட்டாயம் வேண்டும்.கோடை காலத்தில் புதிய நீர் நிலைகளை ஏற்படுத்தியும், பழையவைகளை தூர் வாரி ஆழப்படுத்தியும் சீர் படுத்த வேண்டும். ஆனால் அரசுக்கோ டாஸ்மாக்கில் உள்ளவைகளை வ்ற்றாமல் வளப்படுத்துவதில் தான் தீராத மோகம். நாம் வாங்கி வந்த வ்ரம் அப்படி.

  மேலும் நிலத்தடி நீர் வளத்தை கரு அறுக்கும் காட்டு வேல மரங்களை பார்த்தீனியம் செடிகளை ஒழித்து போல போர் கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து அறவே ஒழிக்க வேண்டும்.

  கெட்டதிலும் நல்லது போல ஊரின் மையத்திலும், சுற்றிலும் மைய வாடிகள், பள்ளிக் கூட விளையாட்டு மைதானங்க்கள் நிறைந்து இருப்பதால் மழை நீர் நிலத்தடிக்கு செல்ல ஏதுவாக இருக்கிறது. இதுவும் நாம் வாங்கி வந்த வரம் தான்.

  நிலத்தடி நீர் இல்லாமல் ஆழ் குழாய்கள் அமைத்தால், நமதூர் கடலடியில் அமைந்து இருப்பதால் அழுத்தம் காரணமாக கடல் நீர் கிணற்றுக்குள் வர அபரிதமான வாய்ப்பு உண்டு.

  நமதூர் மக்கள் குறிப்பாக பெண் மக்களை வல்ல ரகுமான் காத்தருள்வானாக. ஆமீன். இது வீட்டு பிரச்சனையாக இருப்பதால் மிகவும் பாதிக்கப்படுவது ஆண்களை விட் பெண் மக்களே.

  ReplyDelete
 2. Kilakarai Kadal neerai kudi nirakakkum nilaiyam amaikkavendum,
  Anaithu school play groundil maram valarpathu kattaiyamakka vendum,
  puthitha vitu katupavarukku vitil mun pakuthil oru siru pakuthi maram varpathakku othikki vitin plan approval seiyalam nagaradchi ,
  kilakarail sudri ulla pakuthikal plot virpanai seithu,use indri makkal vasam ullathu, athil mara valarpatharku, nagaradchi mulam ilavasam thennaimaram kandru valakalam, kinaru amaipatharku kadan uthavi , veli amaipathrkku kadan uthavi seiyalam
  vitin munpakuthil maram vazharpavarkku prize ,sila salukaikal , Nagardchimulam earpatuthi tharalam

  ReplyDelete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.