Saturday, August 24, 2013

கீழக்கரை நகரில் மீண்டும் ஆக்கிரமிப்பு அகற்றம்! கடும் எதிர்ப்பு! 
பழைய பேருந்து நிலையம் அருகே அதிகாரிகளிடம் எதிர்ப்பு தெர்வித்த மக்கள்
 
கீழக்கரை சீதக்காதி சாலையில் ஆக்கிரமிப்பு அகற்ற கலெக்டர் உத்தரவின் பேரில் 10 தினங்களுக்கு முன் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணிகள் நடைபெறும் போது மெயின் ரோடு பகுதியில் ஒருதலை பட்சமாக ஆக்கிரமிப்பு நடைபெறுவதாக கூறி பொதுமக்கள் எதிர்ப்பின் பேரில் பணிகள் நிறுத்தப்பட்டது.
இதனை தொடர்ந்து மீண்டும் மாவட்ட நிர்வாகம் அக்கிரமிப்பு அகற்ற உத்தரவிட்டதின் பேரில் நேற்று மாலை சுமார் 4 மணியளவில் நகராட்சி ஆய்வாளர் ஐயுப்கான்,சுகாதார ஆய்வாளர் திண்ணாயிரமூர்த்தி,நெடுஞ்சாலைத்துறை ஆய்வாளர் நடராஜன்,மண்டல் துணை வட்டாட்சியர் சிவகுமார் முன்னிலையில் சாலையோர கடைகள்,பேனர்கள்,கடை மற்று வீட்டு வாசல் படிகள் உள்ளிட்டவை அகற்றும் பணி நடைபெற்றது.
கீழக்கரை பழைய பேருந்து நிலைய பகுதியில் இப்பணிகள் நடைபெறும் போது அப்பகுதியை சேர்ந்த ஏராளமான மக்கள் திரண்டு எதிர்ப்பு தெரிவித்த்தோடு சர்வேயர்களை வைத்து அளந்து முறையாக அகற்றும் பணிகளை அகற்ற வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.இதனை தொடர்ந்து மேலிட அதிகாரிகளுடன் ஆலோசித்து பரிசீலனை செய்வதாக அதிகாரிகள் திரும்பி சென்றனர்.
இது குறித்து முஜீப் கூறியதாவது,
ஆக்கிரமிப்புகள் அகற்றுவது குறித்து ஏற்கெனவே சுப்ரிம் கோர்ட் வழிகாட்டுதல்களை தந்துள்ளது.அதன் படி செயல்படுத்த வேண்டும்.கீழக்கரை முக்கு ரோட்டிலிருந்து கடற்கரை வரை முறையாக ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.இப்படி அவசர கோலமாக அக்ற்றுவது சட்ட்த்தை மீறும் செயலாகும்.இது குறித்து கோர்டில் வழக்கு தொடர்வது குறித்து ஆலோசனை செய்து வருகிறோம்.
 இதுகுறித்து காங்கிரஸ் நகர் தலைவர் ஹமீது கான்  கூறியதாவது,
கீழக்கரை கடந்த நகராட்சி நிர்வாகத்தில் முறைப்படி சர்வேயர்களை வைத்து ரோடுகளை அளவிட்டு முறைப்படி உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி உரிய கால அவகாசம் அளித்து ஆக்கிரமிப்புகளை அகற்றியது.
இதை சரியான முறையில் கண்காணிக்கதால மீண்டும் ஆக்கிரமிப்பு அதிகரித்துள்ளது.ஏற்கெனவே 10 நாட்களுக்கு முன் பாரபட்சமாக ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுவதாக பொது மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.தற்போது மீண்டும் அதே போல் நடைபெறுவதாக எதிர்ப்பு எழுந்துள்ளது..எனவே அதிகாரிகள் முறையாக அளவிட்டு இப்பணிகளை நியாயமாக செயல்படுத்த வேண்டும்.கீழக்கரை நகராட்சி நிர்வாகம் இவ்விசயத்தில் மிகுந்த மெத்தனமாகவும் ,பொது மக்களின் குறைகளை மாவட்ட நிர்வாகத்துக்கு எடுத்து செல்லவும் தவறி விட்டது.இதனால் பொது மக்கள் மிகவும் கொதித்து போய் உள்ளார்கள் என்றார்.
 
 
 
 
 

 

4 comments:

 1. Very Good, Good Job, Thank You So Much for District Collector , Kilakarai Police & Government all Staff, kadalkarai salail pokuvarathukku idaiuraka iruntha akkiramippai akadriyatharkku enathu manamartha nandriai kilkarai Makkalin sarpaka Thervithukolkiren, kadalkarai Salai Migaum kuriya Pathaiya irupathal,Down Bus Sella kudiya mukkiya Salaiyakavum (main Road) irupathal, antha Pakuthikalin ulla idaiuraka irrukkum Buildingai Government than vasam Kaiyakam padutha vendum endru makkalin sarpaka enathu korikainai pathivu seikindren,
  Ethu pondru Main Roadil ulla palaiya police stationil iruthu kilkarai puthiya perunthu sellum pathai migaum kurikiya pathaiyaka irpathal antha pakuthil ulla pvt idathinai government kaiyakam padutha pada vendum, puthiya perunthu sella kudiya salai iru vazhi salaiyaka madri eathir kalam vipathukali iruthu makkalai kapadra vendum endru thalmaiuden keddukolkiren

  ReplyDelete
 2. Thank you for kilkarai Nagaradchi, ethu pondu ennum main roadil pala pakuthikalil akkiramipai akadruvathodu , thevai paddal pvt Buildingai Nagardchi kaiyakam padutha pada vendum,kilakarai main Roadinai iruvazhi salaiyaka madri ,vakanam idaiuru indri sella uthaummaru kilakarai nagardchinai kilakarai makkalin sarpaka thalmaiuden keddu kolkiren,

  ReplyDelete
 3. KILAKARAIL ANAITHU SCHOOL KALUKKUM PALLI MANAVARKAL (STUDENT)SELLUVATHARKKU VASATHIYAKA ARASU , ARASU SARTHA MINI BUS IYAKKA VEDUM, MADRUM POTHU MAKKAL GOVERNMENT HOSPITAL, POLICE STATION,BANK,EB OFFICE,NAGARDDCHI OFFICE, MARKET, FISH MARKET, BEACH, BSNL OFFICE,BUS NILAYAM,MASUTHI,KOVIL,CHURCH,PONDRA PAKUTHIKALUKKU SENDRU VARA KUDUTHALANA MINI BUS IYAKKAVENDUM, EATHAN MULAMKA KILAKARAIL THOZHIL VALARCHI EAR PADUTHALAM, NAGARADCHIKKUM KUTUTHAL VARUMANAKAL EARPATUM,NAGARADCHI SARPAKAVUM KILKARAIL MINI BUS THODANKA VENDUM,

  ReplyDelete
 4. Kilakarai Mulism Bazzar Salai, Main Roadil irunthu Appa Palli Salai Vazhiyaha Hyrathu Jalaliya Hr.sec School Sellum Patahikal, kilakarai Market, Puthiya Bus Nilayam Pakauthi, akkiramippu akadri ,Rodinai Virivu Padutha Vendum,
  KILAKARAIL MINI BUS SELLUM SALAIKALAI VIRIVU PADUTHA VENDUM,

  ReplyDelete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.