Monday, August 19, 2013

கீழக்கரையில் ஒரே நாளில் நடைபெற்ற ஏராளமான திருமண நிகழ்ச்சிகள்!




 
 
 

கீழக்கரையில் ஒரே நாளில் நடைபெற்ற ஏராளமான திருமண நிகழ்ச்சிகள்!உறவினர்கள்,நணபர்கள் என  ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு!

கீழக்கரை நகரில் நேற்றைய(18/08/13) தினம் பலவேறு இடங்களில் 25க்கும் மேற்பட்ட திருமண நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிகளில் குடும்பத்தினர் உறவினர்கள் நணபர்கள் என  ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

வெளியூர் ,மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஏரளமானோர் ஊர் திரும்பியுள்ளதால் கடைகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கூட்டம் நிரம்பி வழிந்தது

மண மக்கள் அனைவரும் எல்லா வளமும் பெற்று சிறப்புடன் வாழ வாழ்த்துக்கள்

1 comment:

  1. விண்ணப்பித்த அறுபது நாள்களுக்குள் புதிய குடும்ப அட்டை வழங்கப்படும்’ என கடந்த தி.மு.க. ஆட்சியின்போது அறிவிக்கப்பட்டது. ஆனால் துல்லியமாக இரண்டு மாதங்களுக்குள் வழங்கப்படவில்லை என்றாலும், சில மாதங்கள் கழித்தாவது, விண்ணப்பித்த தகுதியுள்ள அனைவருக்கும் புதிய அட்டைகள் கிடைத்துவந்தன. இதனால் புதுமணத் தம்பதிகள் – குறிப்பாக ஏழைகள் – நிம்மதியடைந்தனர். இப்போதும் அதே நிலையாவது நீடிக்கும் என எதிர்பார்த்திருந்தோருக்கு புதிய ஆட்சியில் புதிய குடும்ப அட்டை வழங்கும் விஷயத்தில் மட்டும் மிகுந்த ஏமாற்றமே கிடைத்துவருகிறது. குடும்ப அட்டைகள் வைத்திருப்போருக்கு ரேஷன் பொருள்கள், விலையில்லா மின்விசிறி, மிக்ஸி, கிரைண்டர் தொடங்கி பல்வேறு சலுகைகள் இந்த ஆட்சியில் அள்ளி வழங்கப்படுகின்றன. ஆனால் அவற்றில் ஒன்றைக்கூடப் பெறமுடியாத உச்சபட்ச சோகத்தில் உள்ளனர், புதிய குடும்ப அட்டை கேட்டு விண்ணப்பித்துக் காத்திருப்பவர்கள். அதிமுக அரசு பதவியேற்றதிலிருந்து சில மாதங்கள் வரை புதிய அட்டைகள் வழங்கப்பட்டு வந்தன. ஆனால், 2011-ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்துக்குப் பின்னர் புதிய அட்டைகள் வழங்கப்படவில்லை. மாநிலம் முழுவதும் இதே நிலைதான் நீடிக்கிறது. குடும்ப அட்டைகளில் பெயர்கள் நீக்கம் செய்தல், சேர்த்தல் போன்ற பணிகள் தொடர்ந்து தடையின்றி நடைபெற்று வருகின்றன. இப்போது அறிவிக்கப்பட்டுள்ள “அம்மா திட்டத்தின்’ மூலமும் அந்தப் பணி செவ்வனே செயல்படுத்தப்படுகிறது. ஆனால் புதிய அட்டைகள் வழங்குவது தொடர்பாக அறிவிப்புகள் ஏதும் வெளியாகவில்லை. இதனால், 2012 ஜனவரி மாதம் தொடங்கி இந்த ஒன்றரை ஆண்டுகளாக விண்ணப்பித்துக் காத்திருப்போரும், விண்ணப்பிப்போரும் மாவட்ட, வட்ட வழங்கல் அலுவலகங்களுக்கு அலைந்து திரிவதுதான் மிச்சம். புதிய அட்டை கோரி விண்ணப்பித்து, சில மாதங்கள் கழிந்த பின்பும் வழங்கப்படாததால் பொறுமையிழந்த, மதுரையைச் சேர்ந்த இளைஞர், வழக்குத் தொடர்ந்து நீதிமன்றம் மூலம் குடும்ப அட்டை பெற்றுள்ளார். வட்ட வழங்கல் அலுவலகத்தில் முறையான ஆவணங்களுடன் விண்ணப்பிக்கும் ஒருவர் எந்தவித பதிலும் வீட்டுக்கு வரவில்லையே என 60 நாள்களையும் தாண்டிக் காத்திருந்து, சென்று விசாரித்தால் ஆவணங்களைச் சரிபார்த்து மாவட்ட வழங்கல் அலுவலகத்துக்கு அனுப்பிவிட்டதாகக் கூறுகின்றனர், அங்குள்ள அலுவலர்கள். மாவட்ட வழங்கல் அலுவலகத்துக்குச் சென்று விசாரித்தாலோ, “வரும்…வரும்’ என்ற பதிலே எப்போதும் கிடைக்கிறது. இல்லையெனில் “மொத்தமாக அச்சிடக் கொடுக்கப்பட்டுள்ளதாகவும், பணி முடிந்ததும் வீட்டுக்கு பதில் வரும்’ என்றும் வழக்கமான பதிலே கிடைக்கிறது. நிகழாண்டு ஜனவரியிலோ, “குடும்ப அட்டைகளைப் புதுப்பிக்க உள் தாள்கள் ஒட்டும் பணி நடைபெறுவதால் புதிய அட்டைகள் வழங்கும் பணி நிறுத்தப்பட்டுள்ளதாகக்’ கூறப்பட்டது. உள் தாள்கள் ஒட்டும் பணி முடிந்தும் ஒன்றரை மாதங்கள் கடந்துவிட்டன. இப்போதும் அந்த விண்ணப்பங்களின் நிலை “கிணற்றில் இட்ட கல்தான்!’ தமிழகம் முழுவதும் “ஆதார்’ அட்டை திட்டத்துக்கு புகைப்படம் எடுக்கும் பணி பரவலாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதில் பெயர் சேர்க்க வேண்டுமானால், மக்கள்தொகைக் கணக்கெடுப்பு ரசீதுடன் குடும்ப அட்டையும் அவசியம் என வலியுறுத்தப்படுகிறது. குடும்ப அட்டை இல்லாமல் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு ரசீது மட்டும் இருந்தால் அவர்கள் “ஆதார்’ அட்டை திட்டத்தில் புகைப்படம் எடுத்துக்கொள்ள அனுமதிக்கப்படுவதில்லை. இதனால் குடும்ப அட்டை கோரி விண்ணப்பித்திருப்போர் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளனர் என்பதை மறு(றை)ப்பதற்கில்லை. சொந்த வீட்டில் குடியிருப்போருக்கு முகவரி மாற்றம் இல்லாததால் விண்ணப்பித்துவிட்டு எத்தனை ஆண்டுகள் வேண்டுமானாலும் காத்திருக்கலாம். ஆனால் வாடகை வீடுகளில் வசிக்கும் ஏழைகள் புதிய அட்டை கோரி விண்ணப்பித்துவிட்டு, வட்டம் விட்டு வட்டமோ, மாவட்டம் விட்டு மாவட்டமோ மாறிச் சென்றிருந்தால் அவர்களின் நிலை? அவர்களின் பெயர் நீக்கச் சான்றிதழ்களின் கதி? விண்ணப்பித்த பெரும்பாலான (அப்போதைய) புதுமணத் தம்பதிகள் இப்போது இரண்டு ஆண்டுகளைக் கடந்து பெற்றோர்களாக மாறியிருக்கலாம். புதிய குடும்ப அட்டைகள் கிடைத்தால்தான் தங்கள் குடும்பத்தின் புதிய உறுப்பினர்களையும் அதில் பதிந்துகொள்ள ஏதுவாக இருக்கும். தமிழகத்தில் 1,95,90,377 ரேஷன் அட்டைகள் உள்ளன. இவற்றில் 1,93,90,357 அட்டைகள் 2013-ம் ஆண்டில் புதுப்பிக்கப்பட்டுள்ளன. 1.6.2011 முதல் 28.2.2013 வரை 1,51,137 போலி அட்டைகள் நீக்கப்பட்டுள்ளன . வாழ்க்கையை புதுமணத் தம்பதிகள் எத்தனை உற்சாகமாகத் தொடங்கினாலும் குடும்ப அட்டைகளில் தங்கள் பெயர்கள் பதிவாவதன் மூலமே “குடும்பத் தலைவன்-தலைவி’ என்ற வாழ்வின் மற்றொரு பரிமாண நிலையை அடைகின்றனர். வங்கிக் கணக்கு, சான்றிதழ்கள், உதவித்தொகைகள், நலத்திட்டங்கள் என அனைத்துக்கும் குடும்ப அட்டைகள் அத்தியாவசியம் என்பதால் புதிய குடும்ப அட்டைகள் வழங்க அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கை.

    ReplyDelete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.