Saturday, August 17, 2013

மாணவ,மாணவியரின் பள்ளி வருகை!கீழக்கரை பள்ளியில் பெற்றோருக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பும் முறை அறிமுகம்!


செல்போன் உபயோகிக்காமல் இருப்போர் மிக மிக குறைவு என்ற  இன்றைய கால கட்டத்தில்  மாணவர்,மாணவிகளின் பள்ளி  வருகை குறித்த விபரங்களை பெற்றோர்களும் உறுதி செய்து தெரிந்து கொள்ளும் வகையில் கீழக்கரை இஸ்லாமியா பள்ளி  சார்பாக பெற்றோர்களுக்கு எஸ் எம் எஸ் அனுப்பும் முறை அறிமுகப்படுத்தபட உள்ளததாக பள்ளியின்  நிர்வாகம்  தெரிவித்து உள்ளது.

இதன் மூலம் பள்ளிக்கு வராத மாணவ,மாணவியர்களின் விபரம் அன்றாடம்  காலையிலேயே சம்பந்தப்பட்ட பெற்றோர்களுக்கு  எஸ்.எம்.எஸ்சில் தெரிவிக்கப்பட்டு விடும்

இது குறித்து பள்ளியின் தாளாளர் எம்.எம்.கே முஹைதீன் இப்ராஹிம் கூறியதாவது,

எமது மாணவ,மாணவிகளின்  பள்ளி வருகை குறித்த விபரங்கள் எஸ்.எம்.எஸ் மூலம் பெற்றோர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட உள்ளாது.அது மட்டுமின்றி பள்ளி நிகழ்ச்சிகள்,மாணவ மாணவியரின் மதிபெண்கள் மற்றும் பள்ளி தொடர்பான தகவல்களை அன்றாடம் எஸ் எம் எஸில்  தெரிவிக்க உள்ளோம்.இதற்கான ஆயத்த பணிக்கள் நிறைவடைந்து  விட்டது விரைவில் இத்திட்டம் செயல்படுத்தப்படும்.
இதன் மூலம் மாணவ மாணவியரின் பாதுகாப்பு உறுதி செய்யபடுவதோடு பெற்றோர்கள் உதவியோஅவர்களின் கல்வி திறனும் அதிகரிக்க வழி வகுக்கும்.

மேலும் பள்ளி நுழைவு வாயில் மற்றும் குறிப்பிட்ட இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட உள்ளது.

இதன் மூலம் மூலம் மாணவ,மாணவியரின் பாதுகாப்பு அதிகரிக்கும்.என்றார்.

1 comment:

  1. கீழக்கரை அலி பாட்சாAugust 17, 2013 at 9:50 PM

    காலத்தின் கட்டாயம்.காலத்திற்கு ஏற்ற முன்னோடியான பாராட்டுக்குரிய நல்ல முயற்சி. மனமார்ந்த பாராட்டுகள்

    ReplyDelete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.