சிறுவனின் உறவினர் நூர் முஹம்மது
கீழக்கரை ஆடறுத்தான் தெருவில் உள்ள வீட்டை சேர்ந்த சிறுவன் அப்துல் ஹாதி(10) இவர் இஸ்லாமியா பள்ளியில் படித்து வருகிறார்.இவரது தந்தை அப்பாஸ்கான் துபாயில் விமான நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில் சிறுவன் அப்துல் ஹாதியை கடத்த முயற்சி செய்ததாக போலீசில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது
இது குறித்து அவரது உறவினர் நூர்முகம்மது கூறுகையில்,
சிறுவன் அப்துல் ஹாதி வள்ளல் சீதக்காதி சாலை பழைய ரைஸ் மில் அருகில் வந்த போது வேனில் வந்த கும்பல் ஒன்று சிறுவனை வேனுக்குள் இழுத்து வாயையும்,கண்ணையும் பொத்தியபடி கடத்தி சென்றுள்ளனர்.
தெற்குதெரு தனியார் பள்ளி அருகே வேன் சென்ற போது சிறுவன் திமிறியதால் ஓடும் வேனிலிருந்து சிறுவனை கீழே தள்ளி விட்டு சென்று விட்டனர். என்றார்
சிறுவனது தந்தை அத்திலை தெருவை சேர்ந்த அப்பாஸ்கான் கூறுகையில்,
இறைவன் அருளால் என் மகன் தப்பி விட்டான்.இது குறித்து போலீசில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.எழுத்துப்பூர்வமான புகாரும் அளிக்கப்பட உள்ளது.கீழக்கரையில் இது போன்று பயங்கரம் நடைபெறுவது இதுவே முதல் முறை .போலீசார் குற்றவாளிகளை கண்டுபிடித்து தக்க தண்டனை தருவார்கள் என்று நம்புகிறேன் என்றார்
சிறுவனை கடத்த முயற்சித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
___________________________________________________________________________
நேற்று காயல்பட்டினத்திலும் இது போன்று ஒரு சம்பவம் நடைபெற்று ஒருவர் பிடிபட்டுள்ளார்.
காயல்பட்டினம் அலியார் தெரு முனையில் 11/08/13 மாலை 06.00 மணியளவில் நாசிஃப் என்ற சிறுவன் தனது வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத நபர் ஒருவர், சிறுவனை தூக்கிச் சென்றார். இதை கண்ட அப்பகுதி மக்கள் அந்த நபரை மடக்கிப்பிடித்து ஆறுமுகநேரி காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர்
Thanks Photo & News www.kayalnews.com

காவல் துறை கட்டுப்பாட்டு துறைக்கு தகவல் தெரிவிக்கவேண்டும்
ReplyDeleteதப்பியோடிய கும்பல்மட்டும்தானா இல்லை இன்னும் பலபேர் ஊரில் இருக்கிறார்களா என்று விசாரிக்கவேண்டும்
கடத்தலுக்கான காரணத்தை தீர ஆராயவேண்டும்