406 கோடி செலவில் விரைவில் நான்கு வழி சாலை அமைக்கப்படும் என அமைச்சர் சுந்தர்ராஜ் அறிவித்திருந்தார் இந்நிலையில் ராமநாதபுரத்தில் இருந்து கீழக்கரை வழியாக தூத்துக்குடி செல்லும், கிழக்கு கடற்கரை ரோடு(இ.சி.ஆர்.), நான்கு வழிச்சாலையாக மாற்றுவதற்கான ஆய்வு நடந்து வருகிறது.ராமநாதபுரம் ஆர்.எஸ்.மடையில் இருந்து, தூத்துக்குடிக்கு, தற்போது இருவழிச்சாலை பயன்பாட்டில் உள்ளது. இதை நான்கு வழிச்சாலையாக மாற்ற அரசு முடிவு செய்தது.
இதை தொடர்ந்து புதுச்சேரி தனியார் கிராபிக்ஸ் நிறுவனத்தின் மேற்பார்வையில், "டோட்டல் ஸ்டேஷன்' கருவி மூலம் "லெவல் டிராயிங்' பணி மேற்கொண்டுள்ளனர்.
இது குறித்து திட்ட மேற்பார்வையாளர் ஒருவர் கூறுகையில், ""ராமநாதபுரம்-தூத்துக்குடி கிழக்கு கடற்கரை சாலையில் 120 கி.மீ., தூர ஆய்வு பணிக்கு மூன்று குழுக்கள் அமைக்கப்பட்டு பணி நடந்து வருகிறது. ஒரு மாதத்திற்குள் சர்வே முடிந்து, ஆய்வு அறிக்கையை ஒப்படைத்து விடுவோம் அடுத்த கட்ட பணி குறித்து, நெடுஞ்சாலைத்துறையினர் ஆலோசனை மேற்கொள்வர்,''என்றார்.
No comments:
Post a Comment
செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.