Friday, August 16, 2013

மஹ்தூமியா பள்ளி முன்னாள் மாணவர் தலைமை தாங்கி சிறப்புரை!பள்ளி ஆசிரியர்கள் நெகிழ்ச்சி!







Photos : Sankar Studio


கீழக்கரை  மஹ்தூமியா பள்ளியில் சுதந்திர தின விழா நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு அப்பள்ளியின் முன்னாள் மாணவர்  கட்டிட வடிவமைப்பாளர்   கீழை ராஸா என்றழைக்கப்படும் ராஜாக்கான் தலைமை தாங்கி சிறப்புரையாற்றினார்.
நிகழ்ச்சியில் பள்ளி மாணவ,மாணவியரின் கலை நிகழ்ச்சிகளும் பரிசளிப்பும் நடைபெற்றது.
பள்ளி நிர்வாகிகள் ஜமாத்தார்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்

கீழை ராஸா பேசுகையில்,

வருட வருடம் இங்கு எத்தனையோ முக்கிய புள்ளிகள் கொடியேற்றியிருக்கிறார்கள்..அதற்கும் நான் கொடியேற்றும் இந்த தருணத்திற்கும் மிகுந்த வித்தியாசம் உண்டு, இது நீங்கள் அனைவரும் பெருமிதம் கொள்ளத்தக்க ஒரு தருணம்… ஆம் நான் உங்களில் ஒருவன் இதே பள்ளியில் நீங்கள் நிற்கும் இதே திடலில் நானும் நின்றிருக்கிறேன்…இந்தப்பள்ளி ஆரம்பள்ளி முதல், நடுநிலை ஆனவரை நான்கு ஆண்டுகள் தொடர்ந்து பள்ளி மாணவத்தலைவனாக எத்தனையோ அசம்பிளிகளை பார்த்திருக்கிறேன்..என்றாலும் இன்று எனக்கு இங்கு நிற்க சற்று தயக்கமாகவும், நடுக்கமாகவும் உள்ளது…காரணம் இங்கிருக்கும் பலர் என்னை விதையிலிருந்து பார்த்தவர்கள்…உங்களுக்கு நான் வளர்ந்தவனாக தெரியலாம் என்றாலும், இன்றும் சரி, இனி நான் எவ்வளவு உயரம் வளர்ந்தாலும் சரி, இங்கிருக்கும் ஆசிரிய பெருமக்களை நான் தலைநிமிர்ந்து பார்க்கும் விருட்சங்களாகவே தெரிகிறார்கள், தெரிவார்கள்..இன்று உங்கள் முன் நான் நிற்க, முழுமையான காரணம் ஆசிரிய பெருமக்களே என்றால் அது மிகையில்லை.
இந்ததருணத்தில் என்னுள் பொறியியல் படிப்பிற்கு விதையிடப்பட்ட அந்த நிகழ்வை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
அப்போது நான் ஐந்தாவது படித்து கொண்டிருந்த வேளை, ஒரு முறை சத்தார் மாமா என்னை அழைத்து, ஜும்மா பள்ளி வாசலின் முன் ஒரு இஞ்சினியர் நிற்பார் அவரை அழைத்து வா.. என்றார்கள்… நான் அங்கு சென்ற போது அங்கே வெள்ளை பேண்ட் சட்டை அணிந்து ஒரு இஞ்சினியர் நின்றிருந்தார்..அவர் கையில் சில சர்வே இன்ஸ்ட்ருமெண்ட் இருந்தது. என்னிடம் ஒரு பெரிய ஸ்கேல் ஒன்றை தந்தார்.எனக்கு இனம் புரியாத மகிழ்ச்சி, எதோ இஞ்சினியர் போஸ்ட்டையே கையில் தந்தது போன்ற ஒரு உணர்வு…அப்போது இந்த பள்ளிக்கூடம் கட்டப்படவில்லை.அதன் பின் வேலை துவங்கியது…அன்று என்னுள் போடப்பட்ட விதையால்..இன்று ஒரு கட்டிடக்கலை வல்லுநராக உருவெடுத்து இன்று துபாயில் பணிபுரிந்து கொண்டிருக்கிறேன்.
மாணவ மணிகளே இது தான் சரியான தருணம், நீங்கள் எதுவாக ஆக வேண்டுமென்று இன்றே விதை போடுங்கள்…அதை நோக்கி செயல் படுங்கள்..
இதை தான் வள்ளுவர் திருக்குறலில் தெளிவாகக் கூறுகிறார்.
எண்ணிய எண்ணியாங்கு எய்துவ எண்ணியர்
திண்ணியர் ஆகப் பெறின்.

மனசுலே ஒரு விசயத்தை நினைச்சி அதுலே உறுதியா இருந்தா, அந்த நம்பிக்கையையே அந்த விசயத்தில் வெற்றியை உண்டாக்கும்.
இதற்கு சரியான எடுத்துக்காட்டு மாவீரன் நெப்போலியன் வாழ்க்கை, உலக வரலாற்றில் ஒரு ஏழை குடும்பத்தில் பிறந்து, ஒரு சாம்ராஜ்யத்திற்கு சக்ரவர்த்தியானவர் அவர்.

என்னிடமிருந்து எல்லாவற்றையும் எடுத்துக் கொள்ளுங்கள், நான் வெற்றியடைய என் நம்பிக்கை ஒன்றே போதும் சொன்ன இவரு சிறுவனாக இருந்த போது, கடற்கரையில் எல்லா சிறுவர்களும் விளையாடிக் கொண்டிருக்க இவரோ கற்பாறையில் மோதவரும் அலைகளை போர்வீரர்களாகவும், அவர்கள் மோதவந்து தன்னிடம் தோற்று திரும்புவதாகவும் கற்பனை செய்தபடி அலைகளை வெறித்து பார்த்தவண்ணம் இருப்பாராம்.அவரின் அந்த எண்ணமும் அதை நோக்கிய செயல் பாடுகளும், அவரை ஒரு சாம்ராஜ்யத்திற்கு சக்கரவர்த்தியாக்கியது…
எனதருமை மாணவ நண்பர்களே, எதோ பிறந்தோம், வளர்ந்தோம், இறந்தோம்  என்பதில்லை வாழக்கை,ஒரு இலட்சியத்துடன் வாழ வேண்டும்… பல சாதனைகளை படைக்க வேண்டும்…அதற்கான குறிக்கோள் அடைய இன்றே உறுதி பூர்வோம்…

 பேச்சின் இடையே, சுதந்திரத்திற்காக போராடிய தியாகிகளை நினைவு கூர்ந்தார்.

பள்ளிஆசிரிய பெருமக்கள், தங்கள் பள்ளியின் முன்னாள் மாணவர் தலைமை தாங்கி நடத்தி உரையாற்றியது குறித்து நெகிழ்ச்சியுடன்  மகிழ்ச்சி தெரிவித்தார்கள்

இது குறித்து ஆசிரியை ஆனந்தி பிரேமா மாணவர்களிடையே பேசும் போது,

”ராஜாக்கானை இப்போதுள்ள உங்களுக்கு தெரிந்திருக்காது, அப்போது அவன் எங்களுக்கு செல்லப்பிள்ளை, அந்தப்பிள்ளை இங்கு கொடியேற்றுவது என் பிள்ளை இந்த நிலையை அடைந்தது போல் எண்ணி மகிழ்கிறேன்.
ஈன்ற பொழுதில் பெரிதுவக்கும் தன் மகனை சான்றோன் எனக்கேட்ட தாய்...என்ற குரலுக்கேற்ப நாங்கள் அளவில்லா மகிழ்ச்சியில் உள்ளோம்” என்றார்.

 

3 comments:

  1. மாஷா அல்லாஹ் ! இது பெறர்கரிய பேறு!! வாழ்த்துக்கள்!!!

    நீங்கள் காணும் வெற்றியின் மூலம் இளந் தலைமுறையினருக்கு உங்கள் வாழ்வும் செயலும் முன்னோடியாக இருக்க இறையை இறைஞ்சுகிறேன்.

    ReplyDelete
  2. கீழக்கரை அலி பாட்சாAugust 16, 2013 at 7:29 PM

    மாணவ மணிகளே இது தான் சரியான தருணம், நீங்கள் எதுவாக ஆக வேண்டுமென்று இன்றே விதை போடுங்கள்…அதை நோக்கி செயல் படுங்கள்..

    {கீழை ராஸா என அன்பொழுக அழைக்கப்படும் முன்னாள் மாணவர் ராஜா கான் அவர்கள் மஹ்தூமியா உயர்நிலைப் பள்ளியில் 67 வது (2013)எழுச்சி மிகு சுதந்திர தின உரை}

    என்ன ஒரு உணர்வு பூர்வமான மணிச் சொற்கள்.இதை தான் மூத்த சகோதரர் ஏ.பி.ஜே. அபுல் கலாம் அவர்கள் மாணவர்களை நோக்கி வேறு விதமாக கனவு காணுங்கள் என்றார். மாணவர்கள் வேறு விதமாக் எடுத்துக் கொண்டார்கள். நிச்சயமாக கீழை ராஸாவின் இந்த எளிய உரை மாணவச் செல்வங்களுக்கு நெத்தியடியாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

    மஹ்தூமிய தொடக்கப்பள்ளியின் தலைமை ஆசிரியை திருமதி. ஆனந்தி பிரேமா அவர்களால் சிறப்பு விருந்தினருக்கு கொடுத்த புகழாரம் உண்மையிலேயே அனவரையும் நெகிழ வைக்கக் கூடிய கருத்து முத்துகள்.

    ReplyDelete
  3. ரத்தின சொற்கள்... வாழ்த்துக்கள்...

    ReplyDelete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.